இரத்த மேலாண்மை அமைப்புக்கு ஒரு புதிய அனுகுமுறை தேவை -சேத்தன் மகாம்

 வலுவான உலகளாவிய சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கு இரத்தம் மற்றும் அதன் தயாரிப்புகளுக்கான அணுகலுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.


கோவிட்-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் பொது சுகாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகளை பெரிதாக்கியது. உலகளாவிய சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கும் உலகத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியமானது என்பதை உலக அளவில் கொள்கை வகுப்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இதைச் செய்ய, சர்வதேச கூட்டாண்மை மூலம் சுகாதாரத்தில் அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டும், மேலும் டிஜிட்டல் சுகாதார தீர்வுகளைப் (digital health solutions) பயன்படுத்த வேண்டும், மற்றும் அனைவருக்கும் மருந்துகள் தேவைப்படும்போது அவற்றைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.


ஆனால் இந்த முக்கியமான திட்டங்கள் அனைத்திலும், இரத்தம் மற்றும் அதன் தயாரிப்புகளைப் பற்றி நாம் மறந்துவிடக்கூடது. அறுவைசிகிச்சைகள், அவசரநிலைகள், புற்றுநோய், தலசீமியா மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய இரத்தப்போக்கு (Postpartum hemorrhage (PPH)) போன்ற பல மருத்துவ சூழ்நிலைகளுக்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. பல்வேறு மருத்துவத் தேவைகளைக் கொண்ட நோயாளிகளின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் அவை எவ்வளவு முக்கியம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.


இரத்த பற்றாக்குறை பிரச்சினை


உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை உலகளவில் இரத்த சேகரிப்பில் பெரிய வேறுபாடுகள் இருப்பதைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் மக்கள் உலக மக்கள் தொகையில் 14% உள்ளனர், ஆனால் அவர்கள் உலகின் இரத்த தானத்தில் 5% மட்டுமே பங்களிப்பு அளிக்கின்றனர். இதேபோல், குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் உலக மக்கள் தொகையில் முறையே 8% மற்றும் 40% மட்டுமே இருந்தாலும், உலகளாவிய இரத்ததான  பங்களிப்புகளில் 2% மற்றும் 24% பெறுகின்றன.  


இதேபோல், இந்தியா தனது இரத்த மேலாண்மை அமைப்பை மேம்படுத்தியுள்ள அதே வேளையில், நாடு இன்னும் இரத்த அலகுகளின் வற்றாத பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இது முக்கியமான சுகாதார சேவைகளை பாதிக்கிறது. தன்னிறைவுக்கான உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளின்படி அளவீடு செய்து, இந்தியா சுமார் 1.27 கோடி இரத்த யூனிட்களை சேகரித்தது மற்றும் 2019-20ல் ஆறு லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் பற்றாக்குறையை எதிர்கொண்டது. இத்தகைய பற்றாக்குறைகள் சுகாதார-பராமரிப்பு அமைப்பின் செயல்பாட்டில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம் மற்றும் உடனடியாக கவனிக்கப்பட்டால், உயிர்களைக் காப்பாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கலாம். உதாரணமாக, சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 50 யூனிட் வரை இரத்தம் தேவைப்படுகிறது. 2019-20 ஆம் ஆண்டில், பற்றாக்குறை சுமார் 12,000 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை ஆபத்தில் வைக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மேலும், இந்த பற்றாக்குறை 1,00,000 இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் தோராயமாக 30,000 எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளை பாதிக்கலாம்.





ஹப் மற்றும் ஸ்போக் மாதிரியின் (hub and spoke model) நன்மைகள்


அனைவருக்கும் போதுமான பாதுகாப்பான இரத்தம் இருப்பதை உறுதிசெய்ய, பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே வலுவான கூட்டமைப்பை (public-private partnerships (PPP)) உருவாக்க வேண்டும். பெரிய தொழில்துறையினர் ஒன்றிணைந்து இரத்தத்தை சேகரித்து விநியோகம் செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டறியலாம், இது இப்போது நம்மிடம் உள்ள பல சுகாதாரபிரச்சனைகளுக்கு இது உதவும்.


ஹப் மற்றும் ஸ்போக் மாடல் (hub and spoke model) என்பது இதுபோன்ற ஒரு புதுமையான முறையாகும், அங்கு அதிக அளவு இரத்த வங்கிகள் சிறிய இரத்த மையங்களுக்கான மையமாக செயல்படுகின்றன. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் (Low-and Middle-Income Countries (LMIC)) போன்ற வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட இடங்களில் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த அணுகுமுறை போதுமான இரத்தத்தைப் பெறுவதில் உள்ள முக்கியமான சிக்கல்களுக்கு உதவுவதோடு, இரத்தத்தையும் அதன் தயாரிப்புகளையும் மக்கள் அணுகுவதையும் பெறுவதையும் எளிதாக்குகிறது.


இரத்தம் நீண்ட காலம் நீடிக்காது என்பதால், ஹப் மற்றும் ஸ்போக் மாதிரி சிறிய இரத்த மையங்கள் அதை மிகவும் திறம்பட பயன்படுத்த உதவும். இதன் பொருள் இந்த வளங்களில் இருந்து அதிகமானவற்றைப் பெறுவது மற்றும் கழிவுகளை குறைப்பது.


நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி கடந்த மூன்று ஆண்டுகளில், 2014-15 முதல் 2016-17 வரை, 30 லட்சம் யூனிட் ரத்தம் மற்றும் ரத்தம்தொடர்புடைய பொருட்களை தூக்கி எறிய வேண்டியிருந்தது. அவை காலாவதியாகிவிட்டன, சேமிப்பின் போது சிதைவடைதல் அல்லது எச்ஐவி மற்றும் சிபிலிஸ் போன்ற நோய்த்தொற்றுகள் இருந்தன. ஹப் மற்றும் ஸ்போக் மாதிரியைப் பயன்படுத்துவதால்  சமூக சுகாதார மையங்கள் மற்றும் சிறிய மருத்துவமனைகளுக்கு குறிப்பாக எளிதில் அணுக முடியாத இடங்களில் கூட பாதுகாப்பான இரத்தம் மற்றும் அதன் தயாரிப்புகளைப் பெறுவதை எளிதாக்குகிறது.


இரத்த தானம் பற்றிய தவறான எண்ணங்களை அகற்றவும்


இரத்த மேலாண்மை அமைப்பில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இரத்த தானம் பற்றி மக்கள் தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். சிலர் நோய்த்தொற்றுகளுக்கு பயப்படுகிறார்கள், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நினைக்கிறார்கள் அல்லது தானம் செய்த ரத்தம் நமது உடலில் மீண்டும் சுரக்க அதிக மாதங்கள் எடுக்கும் என்று நம்புகிறார்கள். சரியான தகவலை பரப்புவதன் மூலம் இதை சரி செய்யலாம்.


பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்துள்ளது, ஆனால் தனியார் நிறுவனங்களும்  பிரச்சாரங்களை நடத்துவதன் மூலமும் உதவ முடியும். இந்த பிரச்சாரங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பல்வேறு மொழிகளில் காமிக்ஸ் (comics) போன்ற உத்திகளைப் பயன்படுத்தி, தானாக முன்வந்து இரத்ததானம் செய்வது ஏன் முக்கியம் என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறது. இந்த ஆக்கப்பூர்வமான முறைகள் அதிகமான மக்களை இரத்ததானத்தில் ஈடுபடுத்தி, அவர்களின் விருப்பத்துடன் இரத்ததானம் செய்ய அவர்களை ஊக்குவிக்கும்.


நாம் கோவிட்-19ஐக் கடந்தும், நியாயமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காகத் திட்டமிடும்போது, நமது சுகாதார அமைப்பையும் நாம் தயார்படுத்த வேண்டும். முக்கியமான இரத்தமும் அதன் தயாரிப்புகளும் நம்மிடம் போதுமான அளவு இருப்பதை உறுதிசெய்வதை இது குறிக்கிறது. எனவே, அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், சுகாதாரப் பராமரிப்பில் மற்ற மாற்றங்களுடன் இரத்த மேலாண்மை முறையை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதேசமயம், தொழில்துறையினரும், பொதுமக்களும் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.


சேத்தன் மகம், டெருமோ பிளட் அண்ட் செல் டெக்னாலஜிஸில் (Terumo Blood and Cell Technologies) நிறுவனத்தில் குளோபல் ப்ளட் சொல்யூஷன்ஸ்னின் (Global Blood Solutions) மூத்த துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளராக உள்ளார். 




Original article:

Share: