தலைமை தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner) ராஜீவ் குமாருக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில், INDIA கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்திக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைகளை (Voter-verified paper audit trail (VVPAT)) பயன்படுத்துவது குறித்து விவாதித்து அவர்களின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துதே சந்திப்பின் நோக்கமாகும்.
ராஜீவ் குமாருக்கு எழுதிய கடிதத்தில், ஜெய்ராம் ரமேஷ் டிசம்பர் 20, 2023 அன்று ’INDIA’ கூட்டணித் தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஒரு சந்திப்பைக் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைகளின் (Voter-verified paper audit trail (VVPAT)) பயன்பாடு குறித்து விவாதித்து ஆலோசனைகளை வழங்குவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. இக்கோரிக்கையானது முந்திய நாள் நடைபெற்ற தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அமைந்தது. தீர்மானம் VVPAT சீட்டுகளை 100% சரிபார்ப்பதற்கு பரிந்துரைக்கிறது.
ஒரு வாக்காளர் வாக்களிக்கும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் (Electronic Voting Machine (EVM)) இணைக்கப்பட்ட VVPAT இயந்திரம், வாக்காளரின் விருப்பத் தேர்வு என்ன என்பதை திரையில் ஏழு வினாடிகள் காட்டிவிட்டு காகிதச் சீட்டை அச்சிடுகிறது. அந்த காகித சீட்டானது கீழே உள்ள பெட்டியில் விழுவதற்கு முன்பு வாக்காளர் தங்கள் வாக்கை சரிபார்க்க அனுமதிக்கிறது.
2010 ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தேர்தலை எவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது என்பது குறித்து பேசப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு, தேர்தல் ஆணையம் இந்த யோசனையை அதன் தொழில்நுட்ப நிபுணர் குழுவுக்கு பரிசீலனைக்கு அனுப்பியது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited (BEL)) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Electronics Corporation of India (ECIL)) ஆகியவை ஒரு முன்மாதிரியை உருவாக்கியது. அவர்கள் ஜூலை 2011 இல் லடாக், திருவனந்தபுரம், சிரபுஞ்சி, கிழக்கு டெல்லி மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் கள ஆய்வுச் சோதனைகளை நடத்தினர். அந்த இயந்திரத்தில் வடிவமைப்பில் மேம்பாடுகளைச் செய்து, கூடுதல் சோதனைகளை நடத்தி, அரசியல் கட்சிகளிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு, நிபுணர் குழு (expert committee) பிப்ரவரி 2013 இல் VVPAT வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்தது.
2013 இல், தேர்தல் நடத்தை விதிகள் (Conduct of Elections Rule), 1961, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் (EVM) டிராப் பாக்ஸ் (drop box) கொண்ட பிரிண்டரை இணைக்க அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நாகாலாந்தில் உள்ள நோக்சன் சட்டமன்றத் தொகுதியின் (Noksen Assembly constituency) 21 வாக்குச் சாவடிகளிலும் VVPAT முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து VVPAT களை படிப்படியாக அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஜூன் 2017 முதல், 100% VVPATகள் வாக்கெடுப்புகளில் பயன்படுத்தத் தொடங்கின. மேலும் 2019 மக்களவைத் தேர்தல்களில் 100% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) VVPAT-களுடன் இணைக்கப்பட்ட முதல் பொதுத் தேர்தல் ஆகும்.
தற்போது எத்தனை சதவீதம் VVPAT சீட்டுகள் கணக்கிடப்படுகின்றன?
2018 ஆம் ஆண்டில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) மின்னணு முடிவுகளுக்கு எதிராக VVPAT சீட்டுகளை சரிபார்க்க நம்பகமான மாதிரி அளவை தீர்மானிக்க இந்திய புள்ளியியல் நிறுவனத்தை (Indian Statistical Institute (ISI)) தேர்தல் ஆணையம் கோரியது.
தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் இந்த விதிமுறைப் பற்றி விவாதித்தது, மேலும் 10% முதல் 100% வரையிலான VVPAT சீட்டுகளை எண்ணுவதற்கான கோரிக்கைகள் இருந்தன. பிப்ரவரி 2018 இல், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலிருந்து VVPAT சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் (TDP) சந்திரபாபு நாயுடுவின் மனுவுக்குப் பிறகு ஏப்ரல் 2019 இல் உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை பின்னர் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டது.
மார்ச் 2019 இல், VVPAT சீட்டுகளை எண்ணுவதற்கு 479 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீரற்ற மாதிரியைத் (random sample) தேர்ந்தெடுக்க இந்திய புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute (ISI)) பரிந்துரையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு இயந்திரத்திற்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) எண்ணிக்கை VVPAT எண்ணிக்கையுடன் பொருந்தினால், பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) விகிதம் 2% க்கும் குறைவாக இருப்பதாக மிக உயர்ந்த புள்ளிவிவர நம்பிக்கையுடன் (99.993665752% நம்பிக்கையுடன்) முடிவு செய்யலாம்.
இந்திய கூட்டணி (INDIA alliance) ஏன் VVPAT சீட்டுகளை 100% எண்ண வேண்டும் எனக் கோருகிறது?
‘INDIA’ கூட்டணியில் டிசம்பர் 21ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. VVPAT சீட்டு பெட்டியில் விழுவதற்கு பதிலாக வாக்காளரிடம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். வாக்காளர் தனது விருப்பத்தை சரிபார்த்த பிறகு அதை தனி வாக்குப்பெட்டியில் வைக்கலாம். VVPAT சீட்டுகள் 100% எண்ணப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புவதுடன், இந்த முறை, பொது மக்கள் தேர்தலை அதிகம் நம்ப வைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் என்ன சொன்னது?
இந்தியாவில் 4,000 தொகுதிகளுக்கு மேல் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வாக்குச்சாவடிகளின் VVPAT-களை சரிபார்க்க 20,600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) -VVPAT அமைப்புகள் தேவைப்படும் என்று இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (Indian Statistical Institute (ISI)) 479 பரிந்துரையை விட அதிகமாக உள்ளது என்று கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.