சைபர் கடத்தல் என்றால் என்ன? அதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி ? - Explained Desk

 ’சைபர் கடத்தல்' (cyber kidnapping) என்றால் என்ன, அது எப்படி நடக்கிறது? இந்த வகையான குற்றங்களுக்கு உங்களை அதிகம் பாதிக்கப்பட வைப்பது எது?


சைபர் கடத்ததலுக்கு ஆளான சீன மாணவர் காய் ஜுவாங், கிராமப்புறமான யூட்டாவில் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் டிசம்பர் 28 அன்று காணாமல் போனார், சீனாவில் உள்ள அவரது பெற்றோர் அவரை மீட்க  $80,000 தொகையை செலுத்தினர்.   


சிறுவனின் பெற்றோர், யூட்டாவின் ரிவர்டேலில் (Utah’s Riverdale) உள்ள அவனது பள்ளியில், அவன் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். பள்ளி காவல்துறையை அழைத்தது. பின்னர், ப்ரிகாம் நகருக்கு (Brigham City) வடக்கே சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு கூடாரத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். அங்கு அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தோன்றியது. 'சைபர் கடத்தல்' (cyber kidnapping) என்றால் என்ன, அது எப்படி நடக்கிறது? 


சைபர் கடத்தல் என்றால் என்ன?


சைபர் கடத்தல் என்பது ஒரு குற்றமாகும். கடத்தல்காரர்கள் பாதிக்கப்பட்டவரை மறைக்க வற்புறுத்துகிறார்கள், பின்னர் அன்புக்குரியவர்களிடமிருந்து மீட்கும் பணத்தைக் கோருகிறார்கள். பாதிக்கப்பட்டவர் கட்டப்படுவது அல்லது வாயைக் கட்டி இருப்பது போன்ற புகைப்படங்களை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த படங்கள் பின்னர் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. கடத்தல்காரர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இருவரும் பாதிக்கப்படுவர் என நம்புகின்றனர்.


கடத்தல்காரர்கள் உடல்ரீதியாக அங்கு இல்லாவிட்டாலும், வீடியோ அழைப்பு தளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவரை ஆன்லைனில் கண்காணிக்கின்றனர்.


யூட்டா சிறுவனின் சூழ்நிலையில், அந்த சிறுவனின் பெற்றோருக்கு அவன் கடத்தப்பட்டதாகக் கூறுப்படும் படம் கிடைத்தது. டிசம்பர் 20ஆம் தேதி முதல் அவர் கடத்தல்காரர்களால் கையாளப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அழைப்பு தரவுகள் (call data) மற்றும் வங்கி பதிவுகளை (bank records) ஆய்வு செய்து கடத்தல்காரர்களை கண்டுபிடித்தனர். 


புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (Federal Bureau of Investigation (FBI)) வலைத்தளத்தின்படி, மெய்நிகர் கடத்தல் (virtual kidnapping) என்பது, அடிப்படையில் ஒரு மிரட்டி பணம் பறிக்கும் திட்டமாகும். வன்முறை அல்லது தீங்கு விளைவிக்கும் ஆபத்தில் இருப்பதாக அவர்கள் நம்பும் ஒரு நெருக்கமானவரை விடுவிக்க மீட்கும் தொகையை செலுத்துவதற்கு பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுகிறது. பாரம்பரிய கடத்தல்களைப் போலன்றி, மெய்நிகர் கடத்தல்காரர்கள் (virtual kidnapping)  உண்மையில் யாரையும் கடத்தவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் ஏமாற்றுதல் மற்றும் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை தங்கள் திட்டம் வெளிப்படுவதற்கு முன்பு விரைவாக மீட்கும் தொகையை செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கிறார்கள். 


செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மோசடி செய்பவர்கள், துன்பத்தில் இருக்கும் அன்புக்குரியவரைப் பிரதிபலிக்கும் குரல் குறிப்புகளை (voice notes) அனுப்பலாம். சமீபத்திய வழக்கில், அரிசோனா பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது, அங்கு யாரோ ஒருவர் தனது மகள் ஆபத்தில் இருப்பதாகக் கூறினார். அழைப்பாளர் மீட்கும் தொகையை கோரினார். இருப்பினும், அவர் தனது உண்மையான மகளைத் தொடர்பு கொண்டபோது, அவர் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டுபிடித்தார். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற எத்தனை குற்றங்கள் நிகழ்கின்றன என்பது குறித்த தெளிவான தரவு இன்னும் இல்லை என்றாலும், சட்ட அமலாக்க வல்லுநர்கள் அவை அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். ஜூலை 2020 இல் இருந்து ஒரு BBC அறிக்கையானது, அந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் எட்டு இணைய கடத்தல்கள் நடந்ததாகக் கூறுகிறது. இந்த வழக்குகள் குறிப்பாக சீன மாணவர்களை குறிவைத்து நடந்துள்ளன. 


உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?


தெரியாத எண்களில் இருந்து அழைப்புகளைப் பெறும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் சைபர் குற்றவாளிகள் தெரிந்த எண்ணிலிருந்து அழைப்பது போல் தோன்றலாம்.


இத்தகைய மோசடிகளுக்குப் பலியாவதைத் தவிர்க்க, உங்கள் வீடு, சுற்றுப்புறம் அல்லது குழந்தைகள் பள்ளியின் பெயர்கள், குறிப்பிட்ட இருப்பிடங்கள் மற்றும் படங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவல்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.


மேலும், பணம் செலுத்துவதற்கு முன் உங்கள் அன்புக்குரியவர்களைச் சரிபார்க்கவும், சந்தேகம் இருந்தால், உதவிக்காக காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.




Original article:

Share: