நிறைவேறாத கோரிக்கை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)) கிராமப்புற பெண்கள் நிதி சுதந்திரம் பெற உதவியது. அது முழுமையாக செயல்படவில்லை என்றாலும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால் நகரங்களில் நிலைமை வேறு. சமூக விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் போன்ற காரணிகள் நகர்ப்புற பெண்கள் வேலைக்கு செல்வதை கடினமாக்குகின்றன.
காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் (Periodic Labour Force Survey (PLFS)) படி, 2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் நகர்ப்புற பெண்களில் 22.9% மட்டுமே பணியமர்த்தப்பட்டனர். பல நகர்ப்புற பெண்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள், ஆனால் வேலை தேட முடியவில்லை என்பதை இது காட்டுகிறது. கிராமப்புறங்களில் 4% உடன் ஒப்பிடும்போது, நகரங்களில், 9% பெண்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள், ஆனால் வேலை கிடைக்கவில்லை. மேலும், கிராமப்புறங்களை விட நகர்ப்புற பெண்கள் தீவிரமாக வேலை தேடுகிறார்கள். கூடுதலாக, நகர்ப்புற பெண்களில் 25% உயர்நிலைப் பள்ளியை முடித்துள்ளனர், கிராமப்புறங்களில் வெறும் 5% மட்டுமே. எனவே, நகர்ப்புற பெண்கள் மத்தியில் நிறைய வாய்ப்புகள் உள்ளன, அவை பயன்படுத்தப்படாமல் போகின்றன.
சில மாநிலங்களில், நகர்ப்புற வேலையின்மையைக் குறைப்பதற்கான திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் அதிகமான பெண்கள் இதில் ஈடுபடலாம். இந்த திட்டங்கள் ஜீன் டெஸ் (Jean Déze) யோசனைகளால் ஈர்க்கப்பட்டு, பெண்களின் நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (Women’s Urban Employment Guarantee Act (WUEGA)) என்ற சட்டத்தை உருவாக்க பரிந்துரைக்கிறது. இதில் திட்ட ஊழியர்களில் குறைந்தது 50% பெண்களாக இருக்க வேண்டும். அதிகாரப்பரவலை வலுப்படுத்த பெண்கள் மற்றும் உள்ளூர் சமூக குழுக்கள் ஈடுபடுத்தப்படும். ஒவ்வொரு பணியிடத்திலும் குழந்தை பராமரிப்பு வசதிகள் இருக்க வேண்டும். மேலும், பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்துடன் 5 கிலோமீட்டருக்குள் வேலை செய்யும் இடம் இருக்க வேண்டும். நடவு மற்றும் அறுவடை போன்ற கிராம வேலைகளுக்கான யோசனைகள் ஏற்கனவே உள்ளன. ஒவ்வொரு இடத்திற்கும் என்ன தேவை என்பதன் அடிப்படையில் நாம் கூடுதல் யோசனைகளைச் சேர்க்க வேண்டும்.
நல வாரியங்களில் உறுப்பினர் போன்ற சலுகைகளை வழங்க முடியும். இந்த முகமைகள், மகப்பேறு சலுகைகள், ஓய்வூதியம் மற்றும் அவசரகால பணம் ஆகியவற்றை வழங்க முடியும். பல பெண்களுக்கு வேலைக்கான திறன்கள் இல்லை. எனவே, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிகளை பரிந்துரைக்கலாம். டெல்லி மற்றும் பெங்களூருவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 60% பெண்கள் தங்களிடம் நிலையான வேலைக்கான திறமை இல்லை என்று கருதுகின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சிகளை ஏற்படுத்தலாம்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பெண்கள் கணினிப் பயிற்சியுடன் தகவல் உதவி மையங்களை நடத்த முடியும். இந்த மையங்களுக்கு திறன்களை மேம்படுத்த வழக்கமான பயிற்சி வழங்கப்படும். பெண்கள் வேலைக்குத் தயாராகவும், உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கவும் தொழிற்பயிற்சிகள் உதவும். திட்டத்தை கண்காணிக்க குறைந்தபட்சம் 50% பெண் ஊழியர்களைக் கொண்ட பெண்களின் நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்திற்க்கான சமூக தணிக்கை பிரிவை முன்மொழிந்து, உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பெண்கள் பகுதிநேர அல்லது முழுநேரப் பணியில் சேர்ந்து தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
பெண்கள் தலைமையிலான முயற்சிகள்
கர்நாடகாவின் சில மாவட்டங்களில், கழிவுகளை மேலாண்மை செய்யும் பொறுப்பு பெண்களிடம் உள்ளது. கழிவுகளை சேகரித்து, அதை அவர்கள் தூய்மை வாகனங்கள் மூலம் எடுத்து செல்கின்றனர். இந்த திட்டம் வெற்றியடைந்துள்ளது. மேலும், இதை பின் பற்றி பல பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறவும் இது உதவியுள்ளது.
காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் (PLFS) படி நகர்ப்புறங்களில் 15-59 வயதுடைய சுமார் 10.18 கோடி பெண்கள் வேலையின்றி உள்ளனர். சுயதொழில் செய்பவர்கள் அல்லது சாதாரண வேலை செய்பவர்களையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை சுமார் 11.65 கோடியாக உயர்கிறது. அவர்களில், சுமார் 50% பேர் அத்தகைய திட்டத்தில் சேருவதற்க்கு ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை செய்து ஒரு நாளைக்கு ₹500 சம்பாதித்தால், அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் ஊதியச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% ஆகும். மற்ற செலவுகளையும் சேர்த்தால், பொருட்கள் மற்றும் நிர்வாகத்திற்கான செலவுகளைச் சேர்க்கும்போது, மொத்தச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருக்கலாம்.
இந்தத் திட்டம் மெதுவாகத் தொடங்கி, எத்தனை பேர் சேருகிறார்கள், என்ன மாதிரியான வேலைகளைச் செய்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும். இது செலவுகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும். இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, பெண்கள் மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கியதாக விரிவடையும். இந்த திட்டத்தின் நன்மைகள் செலவுக்கு மதிப்புள்ளவை. அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்கு வருமான பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
ரோசா ஆபிரகாம் மற்றும் ராஜேந்திரன் நாராயணன் ஆகியோர் பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ளனர்.