உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள் : தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தேசிய வருமான தரவு பற்றி . . .

 தேர்தல் வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்கள் நேர்மறையாக இருக்கும். ஆனால், அவற்றை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.


கடந்த வாரம் தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) வெளியிட்ட மிக சமீபத்திய தேசிய வருமானத் தரவு, உற்சாகத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (real gross domestic product (GDP)) 8.4% வளர்ந்துள்ளது. இது சந்தைகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தெரிவித்துள்ளது. இருப்பினும், சில பொருளாதார வல்லுநர்கள் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் மற்றும் அவர்களின் சொந்த கணிப்புகளுக்கு இடையே 100 அடிப்படை புள்ளிகளுக்கு மேல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை சரிசெய்வது சவாலாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2% மற்றும் 8.1% ஆக வளர்ச்சியடைந்துள்ளது என்றும், முன்னர் மதிப்பிட்டதை விட 40 மற்றும் 50 அடிப்படைப் புள்ளிகள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த வெளியீடு கூறுகிறது. முழு ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.3% இலிருந்து 7.6% ஆக இருக்கும் என்று இப்போது கணித்துள்ளனர். 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்பீடுகளை தேசிய புள்ளியியல் அலுவலகம் திருத்தியதால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. 2021-22 தரவுகளுக்கான திருத்தங்கள் அந்த ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 60 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 9.7% ஆக உயர்த்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த சரிசெய்தலின் விளைவாக 2022-23க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முந்தைய கணிப்பு 7.2%-யை விட இதன் கணிப்பு 7% ஆகக் குறைத்துள்ளது. முந்தைய ஆண்டிலிருந்து தரவுகளுக்கான திருத்தங்கள் இயற்கையாகவே ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை பாதிக்கின்றன. இது தலைப்பு எண்ணின் (headline number) முக்கியத்துவத்தை விளக்கும் போது அடிப்படை விளைவை ஒரு முக்கியமான காரணியாக மாற்றுகிறது.


பொருளாதாரத்தின் உண்மையான உற்பத்தித் துறைகளில், மொத்த மதிப்பு கூட்டல் (gross value added (GVA)) வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் 6.5% ஆக குறைந்ததுள்ளது. இது முந்தைய ஜூலை-செப்டம்பர் காலத்தில் 7.7% ஆக இருந்தது. முக்கியமான கிராமப்புற விவசாயம், கால்நடைகள், வனவியல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவற்றின் உற்பத்தி 0.8% குறைந்ததே இதற்குக் காரணம். மொத்த மதிப்பு கூட்டல் (gross value added (GVA)) பங்களிக்கும் மற்ற ஏழு துறைகளில் ஐந்தில் வளர்ச்சி குறைந்துள்ளது. மொத்த மதிப்பு கூட்டல் (GVA) வளர்ச்சி விகிதம் 6.5%, குறிப்பிடத்தக்க வகையில் 190 அடிப்படை புள்ளிகள் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான 8.4% ஐ விட குறைவாக உள்ளது. ஏனெனில், குறிப்பாக உரங்களுக்கு குறைந்த மானியத்தில் பணம் கொடுத்தல் காரணமாக நிகர மறைமுக வரிகள் 32% அதிகரித்துள்ளன. இது பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தின் உண்மையான படத்தைக் காட்டுகிறது. தனியார் நுகர்வு செலவினம் 3.5% மட்டுமே வளர்ந்ததுள்ளது. மேலும் அரசாங்க செலவினம் உண்மையில் மூன்றாவது காலாண்டில் 3.2% குறைந்தது. பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தரவுகளைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள நாம் அனைத்து பொருளாதாரத் தரவுகளையும் கவனமாகப் பார்க்க வேண்டும்.




Original article:

Share: