இணைதகவமைப்பு (Co-adaptation) என்பது நமது வனவிலங்குகள் மனித நடவடிக்கைகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்கான ஒரு பயனுள்ள நுட்பமாகும். யானைகளுக்கு தொந்தரவு செய்யாமல் கட்டடம் கட்டப்படுவது ஒரு உதாரணம்.
டிராக்கிங் காலர் (tracking collar) பொருத்தப்பட்ட யானை ஒரு வீட்டிற்குள் நுழைந்து ஒருவரைக் காயப்படுத்துவதைக் காட்டும் காணொலி சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது, இது மனித-வனவிலங்கு மோதல்களில் சவால்களை எடுத்துக்காட்டுகிறது. மனிதனும் விலங்குகளும் இடத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது மனித-விலங்கு மோதல்கள் ஏற்படுகிறது இதில் மனித உயிரிழப்புகள் அல்லது விலங்கு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் காயங்கள், பயிர் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன. அதிகரித்த மக்கள்தொகை மற்றும் வளமான பல்லுயிர்ப் பெருக்கம் கொண்ட இந்தியாவில், 1.4 பில்லியன் மக்களின் தேவைகளுக்கும் இயற்கையைப் பாதுகாப்பதற்கும் இடையே சமநிலையைக் கண்டறிவது முக்கியம். வனவிலங்குகளுடன் ஒத்துழைப்பது இந்த தந்திரமான சிக்கலை தீர்க்க ஒரு வழியாகும்.
இணைதகவமைப்பு (Co-adaptation) என்பது மனிதர்களும் விலங்குகளும் ஒருவருக்கொருவர் வாழ்வதற்காக தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்வதாகும். இந்தியாவில், மக்கள் வெவ்வேறு வழிகளில் வனவிலங்குகளுடன் வாழ கற்றுக்கொண்டனர். கலாச்சார, நடத்தை மற்றும் சமூக மாற்றங்கள் இதில் அடங்கும். யானைகள், புலிகள், பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற விலங்குகள் இந்திய நாட்டுப்புறவியல், கலாச்சாரம் மற்றும் மதத்தில் முக்கியமானவை. சிறுத்தை, காட்டுப் பன்றிகள், யானைகள் போன்ற விலங்குகள் மனிதர்களால் மாற்றப்பட்ட பகுதிகளில் வாழப் பழகிவிட்டன. அவைகள் மனிதர்களால் வழங்கப்படும் உணவைப் உண்கின்றது, வாழ்விடங்களைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் மனித நடவடிக்கைகளைத் தவிர்க்க கற்றுக்கொள்கிற்து. பல வளர்ச்சி மற்றும் நிலயான பயன்பாட்டில் மாற்றங்கள் இருந்தாலும், உலகில் உள்ள ஆசிய யானைகளில் 65 சதவீதம் இந்தியாவில் இன்னும் உள்ளது. இந்த யானைகளில் 75-80 சதவீதம் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களுக்கு வெளியே வாழ்கின்றன.
வயநாட்டில் யானை மனிதனை தாக்கி கொன்றது: கேரளாவில் அதிகரித்து வரும் மனித-விலங்கு மோதலின் பின்னணி
வரலாற்று ரீதியாக, மனிதர்கள் சில நுட்பங்களைப் பயன்படுத்தி வனவிலங்குகளுடன் வெற்றிகரமாக வாழ தகவமைத்துக் கொண்டனர். ஆனால், 1972 ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு (Indian Wild Life Protection Act) முன்னர் யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற ஆபத்தான உயிரினங்களை வேட்டையாடுவது வழக்கமாக இருந்தது. ஆனால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற பின் இந்த நடைமுறைகள் குறைந்தன. இப்போது, சிறந்த பாதுகாப்பு முயற்சிகளுடன், மக்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க இந்த நடைமுறைகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யலாம்.
உதாரணமாக, வடகிழக்கு இந்தியாவில், வெள்ளத்தைத் தடுக்கவும், யானைகளுக்கு எட்டாதவாறு இருக்கவும் காடுகளுக்கு அருகில் தூண்களின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஆனால் பின்னர், தரை மட்டத்தில் கட்டப்பட்ட கட்டமைப்புகள் யானைகளுக்கு சேமிக்கப்பட்ட உணவை அணுகுவதை எளிதாக்கின. சில சமூகங்கள், பயிர் இழப்புகள் கடவுள்களின் ஆசீர்வாதம் என்று நம்பினர் மற்றும் யானைகளை ஈர்க்காத பயிர் சாகுபடிக்கு மாறினர். மேலும் அறுவடையின் போது அரிசி போன்ற பயிர்களைப் பாதுகாக்க உள்ளூர் காவலர்களை ஏற்பாடு செய்தனர். வனவிலங்குகள் மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லைகளை அடையாளம் காணாததால் இந்த நடவடிக்கைகள் அவசியமானவை. விலங்குகளை திட்டமிடாமல் பிடிப்பது மற்றும் நகர்த்துவது போன்ற தற்காலிக திருத்தங்கள் பெரும்பாலும் சரியாக வேலை செய்யாது.
கேரளாவின் வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்கள் சமீபத்தில் யானை தாக்குதலால் பயிர்கள் மற்றும் சொத்துக்களை சேதம் மற்றும் உயிர் இழப்பை ஏற்படுத்துவது போன்ற மனித-விலங்கு மோதல்களை எதிர்கொண்டன. இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளன. இது வனவிலங்குகளுடனான சந்திப்புகளை பொதுவானதாக ஆக்குகிறது. தீங்கு ஏற்படுவதைத் தடுக்க, ஒற்றை யானைகளின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம். ஒரு யானை ஆக்ரோஷமான நடத்தையைக் காட்டினால், அதை இடமாற்றம் செய்ய வேண்டும். கண்காணிப்பில் மஸ்த் (musth) நிலை போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கூடலூரில் ஒரு சில சதவீத யானைகள் மட்டுமே ஆபத்தானவை. இருப்பினும், ஒட்டுமொத்த மக்களும் அடிக்கடி யானைகளை குற்றம் சாற்றுகின்றனர்.
மக்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களின் போக்குகள் மற்றும் சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்யும் அமைப்பு இருக்க வேண்டும். பின்னர், சேதத்தைத் தடுக்க உள்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தலாம். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு முக்கியம். விலங்குகளின் நடமாட்டம் மற்றும் மனித உயிரிழப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர்வது கூட்டு முயற்சிகள் மற்றும் சிறந்த வனத்துறை பயிற்சிக்கு வழிவகுக்கும், மோதல்களையும் குறைக்கும்.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான தொடர்புகள், அவை அடிக்கடி நடந்தாலும், மிகத் தீவிரமாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இடங்களைப் பாதுகாப்பாகப் பகிர்வது மற்றும் சேதத்தைக் குறைப்பது எப்படி என்பது பற்றிய தகவலைப் பரப்புவதன் மூலம் ஊடகங்கள் உதவலாம். எடுத்துக்காட்டாக மும்பையில் ஊடகங்கள், வனத்துறை, உள்ளூர் சமூகங்கள் மற்றும் பாதுகாப்பு முகமைகள் இணைந்து நகரத்திற்க்குள் வரும் சிறுத்தைகளை சமாளிக்க நேர்மறையாக செயல்படுகின்றன. பிற உள்ளூர் குழுக்களும் மாவட்ட நிர்வாகமும் இந்த தொடர்புகளை நிர்வகிக்க உதவுகின்றனர்.
உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விபத்துகளைத் தடுக்க, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பகிர்ந்துகொள்வது, தெரு விளக்குகள் மற்றும் கழிப்பறைகளை விரைவாக நிறுவுதல் மற்றும் பொதுத் தொடர்பு போன்ற முன்னெச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்துவது முக்கியம். காட்டு விலங்குகள் சம்பந்தப்பட்ட மோதல்களைக் கையாள்வதற்கு, மக்களைப் பாதுகாப்பாகவும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் தீர்வுகளைக் கண்டறிய சமூகத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது.
கட்டுரையாளர், WWF India யானைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்.