உலகளாவிய சந்தையில் எண்ணெயை விட செயற்கை நுண்ணறிவு எவ்வாறு அதிக மதிப்புடையதாக மாறியது? -மேனகா குருசுவாமி

 என்விடியாவின் (Nvidia’s) எழுச்சியுடன், GPU (graphics processing unit)கள் நம் காலத்தின் புதிய எண்ணெயா?


வரலாறு முழுவதும், மனிதர்கள் தொடர்ந்து மிகவும் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வழிவகுத்தது. 1900 களின் முற்பகுதியில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகள் (theories of relativity) ஈர்ப்பு, இடம் மற்றும் நேரத்தை விளக்குவதன் அறிவியல் உலகத்தில் புரட்சி செய்தன. 1941 ஆம் ஆண்டில், மனிதர்கள் மீது சிகிச்சை பயன்பாட்டிற்காக பென்சிலின் (penicillin) கண்டுபிடிப்பு, நோய்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அதிவேகமாக உதவியது மற்றும் ஆயுட்காலத்தை அதிகரித்தது. கடந்த சில ஆண்டுகளில்,  செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) புதுமைகள் அறிவார்ந்த வாழ்க்கையை உருவாக்குவதை மாற்றும். ஏனெனில், விரைவில் மனிதர்கள் மட்டுமே புத்திசாலித்தனத்தின் ஆதாரமாக இருக்க மாட்டார்கள்.  


 செயற்கை நுண்ணறிவின்  (artificial intelligence (AI)) முன்னேற்றங்கள், குறிப்பாக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (generative AI), "வேலை", "தொழிலாளி" மற்றும் "நிபுணத்துவம்"  பற்றிய நமது கருத்துக்களை மாற்றுகின்றன. இந்த பத்தியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் சட்ட தீர்ப்பு முதல் மருத்துவ அறுவை சிகிச்சைகள் வரை பல பகுதிகளில் அதன் பயன்பாடு குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். செயற்கை நுண்ணறிவில் புதுமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சட்ட ஒழுங்குமுறை தேவை. எனவே, உலகளவில், கடந்த 12 மாதங்களில் சந்தை மூலதனத்தின் மிக விரைவான வளர்ச்சி என்விடியாவில் ((Nvidia)  உள்ளது என்பதைப் பார்ப்பது முற்றிலும் ஆச்சரியமல்ல - மேம்பட்ட செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு நிறுவனம். ஒருவேளை, என்விடியா (Nvidia) என்பது எதிர்காலத்தில் எந்த வகையான நிறுவனம் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்பதற்கான குறிகாட்டியாகும்.


தெரியாத வாசகர்களுக்கு, என்விடியா கிராபிக்ஸ்  (Nvidia  graphics)  செயலாக்க அலகுகள், GPUs (graphics processing units) கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ((artificial intelligence (AI)) அமைப்புகளில் பயன்படுத்தப்படும் குறைக்கடத்தி சிப்புகளின் உலகின் முன்னணி உற்பத்தியாளராகும். இது சுமார் 80 சதவீத சந்தையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு சிப்பிற்கும் ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த GPUகள் எவ்வளவு விரும்பப்படுகின்றன? மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) சமீபத்தில் தனது நிறுவனமான மெட்டா (Meta) இந்த ஆண்டு இறுதிக்குள் என்விடியாவின் 3,50,000 H100 சிப்களுக்கு (Nvidia’s H100 chips) கொள்முதல் ஆணை வழங்கும் என்று குறிப்பிட்டார். இந்த ஒரு கொள்முதல் ஆணை பல கோடி டாலர்கள் மதிப்புள்ளதாக இருக்கும். கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் GPUகள் தேவை.  


உலகின் மிக உயர்ந்த சந்தை மூலதன நிறுவனங்களின் பட்டியலில் பாரம்பரியமாக இயற்கை வள அடிப்படையிலான (oil or gas) அல்லது பெரிய உற்பத்தி பெஹிமோத்களின் (behemoth) ஆதிக்கத்தை  தொழில்நுட்ப அடிப்படையிலான நிறுவனங்கள் தகர்த்துள்ளன. 2024 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸின் பட்டியலின் (Forbes’ list) படி முதல் ஐந்து நிறுவனங்களின் பட்டியலில் மைக்ரோசாப்ட் (Microsoft) 3.085 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் Apple (2.889 டிரில்லியன் டாலர்), சவுதி அராம்கோ (Saudi Aramco) (முதல் 10 இடங்களில் உள்ள ஒரே எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்), கூகிள் ஆல்பபெட் (Google’s Alphabet)) மற்றும் அமேசான் (Amazon) ஆகியவை உள்ளன. உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில், நான்கு நிறுவனங்கள் தொழில்நுட்ப அடிப்படையிலானவை. 


முக்கியமாக, 1.784 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் என்விடியா (Nvidia) ஆறாவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக இருந்தது. அதைத், தொடர்ந்து மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா (Mark Zuckerberg’s Meta) நெருக்கமாக இருந்தது. என்விடியா (Nvidia) ஏப்ரல் 1993 இல், ஒரு மின் பொறியாளர், ஒரு நுண்செயலி வடிவமைப்பாளர் மற்றும் ஒரு கிராஃபிக் சிப் வடிவமைப்பாளர்  என  மூன்று  நபர்களால், கலிபோர்னியாவின் சான் ஜோஸில் (graphic chip designer) ஒரு சாலையோர உணவகத்தில் நடந்த கூட்டத்தில் நிறுவப்பட்டது.  ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் பிற பாரம்பரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 1970 களின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டன. மிக உயர்ந்த சந்தை மூலதனத்தை நோக்கிய அவர்களின் பயணம் சில ஆண்டுகளாக நீடித்தது. என்விடியா இன்னும் கொஞ்சம் ஆச்சிரியமாக இருந்தது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal (WSJ)) குறிப்பிடுவது போல், ஒரு பொது நிறுவனமாக என்விடியாவின் (Nvidia’s) முதல் டிரில்லியன் டாலர்கள் சம்பாதிக்க 24 ஆண்டுகள் ஆனது. ஆனால் நிறுவனம் இப்போது செயற்கை நுண்ணறிவு வேகமாக இயக்குவதால், இரண்டு டிரில்லியன் சந்தை மூலதனத்தை அடைய வெறும் எட்டு மாதங்கள் ஆனது.


 என்விடியாவின் (Nvidia’s) ஆரம்ப முயற்சி வீடியோ கேம்கள் (Video games) மூலம் இருந்தது. வீடியோ கேம்கள் லாபத்திற்கான அதிக தேவையுடன் வேகமான கம்ப்யூட்டிங்கை இணைக்கின்றன. நிறுவனத்தின் கிராபிக்ஸ் அடிப்படையிலான  (graphics-based) செயலாக்கம் இந்த சந்தைக்கான சிறப்பான வாய்ப்பை உருவாக்கியது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal (WSJ)) பத்திரிகையின் அறிக்கை படி  "ஜிபியுக்களைப் (GPUs) பாதுகாப்பதற்கான திறன், நிறுவனங்கள் எவ்வளவு விரைவாக புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்புமுறைகளை உருவாக்க முடியும் என்பதை நிர்வகிக்கிறது. நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு GPUகளை அணுகுவதாக கூறுகின்றன." என்விடியாவின் (Nvidia’s) தலைமை நிர்வாக அதிகாரி,  ஜென்சன் ஹுவாங் (Jensen Huang), ஒரு தைவானிய அமெரிக்க மின் பொறியாளர். அவரது விருப்பமான ஆடை சாதாரண கால்சட்டை மீது நன்கு வெட்டப்பட்ட தோல் ஜாக்கெட் ஆகும். 


இன்று, என்விடியாவின் GPU chip  (Nvidia’s (GPU)) OpenAI இன் ChatGPT போன்ற உருவாக்கும் போட்களிலும் (generative bots) மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் அமேசான் (Amazon) போன்ற நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களை போலவே, என்விடியா (Nvidia) 4,000 ஊழியர்களுடன் இந்தியாவில் இருப்பைக் கொண்டுள்ளது மற்றும் முக்கிய இந்திய நிறுவனங்களுடன் புதிய கூட்டணிகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 29,600 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

கடந்த வாரம், என்விடியாவின் (Nvidia) பங்குகள் 807.90 டாலர் வரை உயர்ந்து, பின்னர் சற்று சரிந்து 788.17 டாலராக இருந்தது. ஒரு பங்குக்கு 800 டாலரைத் தாண்டியபோது, என்விடியா இரண்டு டிரில்லியன் டாலர் நிறுவனமாக மாறியது. இந்த ஆண்டில் மட்டும் அதன் பங்குகள் 59 சதவீதம் உயர்ந்துள்ளது. நிச்சயமாக, செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) எல்லாம் எளிதான கண்டுபிடிப்பு அல்லது எளிதான லாப உருவாக்க பயணத்தைக் கொண்டிருக்காது. சில சிக்கல்கள் கூட இருக்கலாம்.   


கடந்த வாரம், கூகிளின் ஜெமினி (Google’s Gemini) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) படத்தை உருவாக்கும் கருவி சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. இது வெளிப்படையாக பிரபலமற்ற மற்றும் தவறான பதில்களை வழங்கியது.  ஜெமினியிடம் இருந்த பிரச்சினைகளில் ஒன்று, அது வரலாற்று ரீதியாக இன ஆதிக்கம் செலுத்தும் காட்சிகளை இனரீதியாக மாறுபட்ட கதாபாத்திரங்களுடன் உருவாக்குகிறது. கூகுள்,  செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) இன சார்பை நிவர்த்தி செய்ய விரும்பி, அதன் நிரலாக்கத்தை மாற்ற முயற்சித்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். மனிதர்களைப் போலவே, மனித தரவுகளால் உணவளிக்கப்படும் செயற்கை நுண்ணறிவும் அந்த சார்புகளை வெளிப்படுத்துகிறது.

இந்த சிக்கல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் பல சவால்கள்  இருந்தபோதிலும், மனித பரிணாம வளர்ச்சியின் இந்த அடுத்த கட்டத்தில்  செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)) புரட்சி பெரும் வாக்குறுதியைக் கொண்டுள்ளது.   செயற்கை நுண்ணறிவு, பென்சிலினைப் (penicillin) போல மனித இனத்திற்கு வியக்கத்தக்க முறையில் பயனளிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். தெளிவானது என்னவென்றால், அடுத்த சில ஆண்டுகளில், புத்திசாலித்தனமாக இருக்கக்கூடியவை மறுவரையறை செய்யப்படும். மனிதர்களுக்கு இனி நுண்ணறிவின் (intelligence) மீது ஏகபோக உரிமை இருக்காது.  செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI))   மனிதர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும். இது நிகழும்போது, செல்வத்தை உருவாக்கும் நிறுவனமாக மாறும். GPU (Graphics Processing Unit) கள் நம் காலத்தின் புதிய எண்ணெயா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.    


கட்டுரையாளர் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார்.




Original article:

Share: