1986 – செர்னோபில் அணுமின் நிலையத்தில் (Chernobyl Nuclear Power Plant) 4வது அணு உலை வெடித்து சிதறியது. இது மிக மோசமான அணுசக்தி பேரழிவுகளில் ஒன்றை ஏற்படுத்தியது. இதற்கு யார் பொறுப்பு என்று அறிஞர்கள் இன்னும் வாதிட்டு கொண்டு இருக்கின்றனர்.
1986 ஏப்ரல் 26 அதிகாலை. செர்னோபில் நகரம் உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது, அணுமின் நிலையத்தின் 4வது அணு உலை வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு வரலாற்றில் மிக மோசமான அணுசக்தி பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
சர்வதேச அணுசக்தி நிறுவன (International Atomic Energy Agency) கூற்றுப்படி, செர்னோபிலில் ஏற்பட்ட ஆரம்ப வெடிப்பில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மூன்று மாதங்களுக்குள், 28 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால துப்புரவு தொழிலாளர்கள் கடுமையான கதிர்வீச்சு நோயால் இறந்தனர். 2005 ஆம் ஆண்டில், கடுமையான கதிர்வீச்சின் வெளிப்பாடு காரணமாக சுமார் 4,000 பேர் இறுதியில் இறக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் கணித்தது. உலக சுகாதார அமைப்பின் 2006 ஆம் ஆண்டு ஆய்வில், செர்னோபில் பேரழிவு காரணமாக உக்ரைன், பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் 9,000 புற்றுநோய் தொடர்பான இறப்புகள் ஏற்படும் என்று கணித்திருந்தது.
சுமார் 2,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இன்னும் மனிதர்கள் வசிக்க முடியாத நிலையில் உள்ளது. கதிரியக்க மாசுபாடு தான் இதற்குக் காரணம். இன்று வரை, பேரழிவுக்கு யார் காரணம் என்று அறிஞர்களால் கூறமுடியவில்லை.
பேரழிவு
செர்னோபில் அணுமின் நிலையம், செர்னோபில் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும், கீவிலிருந்து 100 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது 1978 இல் செயல்படத் தொடங்கியது. 1983 வாக்கில், நான்கு அணு உலைகள் இயங்கின. 5 மற்றும் 6 உலைகள் 1980 களின் பிற்பகுதியில் செயல்படத் தொடங்கின. பேரழிவின் போது, மொத்தம் 12 அணு உலைகளுக்கான திட்டங்கள் தயாராக இருந்தன. இது செர்னோபில் அணுமின் நிலையத்தை உலகின் மிக சக்திவாய்ந்த அணுமின் நிலையமாக மாற்றியிருக்கும். வெடிப்பு நடந்தபோது, நான்கு அணு உலைகளும் உக்ரைனின் மின்சார விநியோகத்தில் சுமார் 10% உற்பத்தி செய்து கொண்டிருந்தன.
ஏப்ரல் 26, 1986 அன்று, தொழில்நுட்ப வல்லுநர்கள் உலை 4 இல் ஒரு பாதுகாப்பு சோதனை செய்தனர். பல வெடிப்புகள் மற்றும் அதன் மையத்தின் ஒரு பகுதி கரைப்புக்கு வழிவகுத்தது. செர்னோபில் மற்றும் அருகிலுள்ள ப்ரிப்யாத் நகரவாசிகள் பார்த்துக் கொண்டிருக்கையில், இரவு வானத்தை ஒரு உற்சாகமான நெருப்பு ஒளிரச் செய்தது. கதிரியக்கப் பொருட்களின் மேகங்கள் வளிமண்டலத்தில் காணப்பட்டது. இது அந்த நேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த அண்டை நாடுகளான பெலாரஸ் மற்றும் ரஷ்யாவை மட்டுமல்ல, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவையும் பாதித்தது.
செர்னோபில் பேரழிவு ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 400 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளியிட்டது. சோவியத் அதிகாரிகள் முதலில் பேரழிவை மறைக்க முயன்றனர். இருப்பினும், ஏப்ரல் 28 அன்று 1,000 கி.மீ தொலைவில் உள்ள ஸ்வீடனில் கதிர்வீச்சின் அதிகரிப்பு கண்டறியப்பட்டபோது, சோவியத் அரசாங்கம் இறுதியாக இந்த பேரழிவை ஒப்புக்கொண்டது.
யாரைக் குற்றம் சொல்வது ?
பேரழிவை ஏற்படுத்தியது யார், பேரழிவு எதனால் ஏற்பட்டது போன்ற கேள்விக்கான பதில் இன்று வரை இல்லை.
வழக்கறிஞர்களும், செர்னோபில் அணு உலையின் தலைமை வடிவமைப்பாளரான என்.ஏ.டோல்லெஜலும் (N A Dollezhal), இயக்கும் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டினர். ஊழியர்களிடம் தான் பிரச்சினை, வடிவமைப்பு அல்லது உற்பத்தியில் பிரச்னை இல்லை என்று 1989 இல் டோல்லெஷால் கூறினார்.
மனிதத் தவறுதான் பேரழிவுக்குக் காரணம் என்று சோவியத் யூனியன் கூறியது. ஆனால் அணு உலை இயக்குபவர்களே இந்தக் கருத்தை ஏற்கவில்லை.
வி.எம். முனிபோவ் (V M Munipove) தனது "செர்னோபில் இயக்குபவர்கள்: குற்றவாளிகளா அல்லது பாதிக்கப்பட்டவர்களா?" என்ற கட்டுரையில் எழுதினார். (1992) இயக்குபவர்கள் தங்கள் செயல்பாடுகளில் உறுதியாக இருந்தனர்.அணுஉலை செயல்படுகளில் விதிகள் முழுமையாக பின்பற்றப்பட்டது. அணு உலை வெடிப்பது பற்றி விதிகள் பேசவில்லை. செர்னோபில் விபத்துக்குப் பிறகுதான் அணு உலை சில சூழ்நிலைகளில் அபாயகரமானதாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் பாதுகாப்பு விதிகள் புதிதாக சேர்க்கப்பட்டன.
செர்னோபில் வெடிப்புக்கு இயக்குபவர்கள் தவறான முடிவுகளை எடுத்ததும், சரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததும் தான். அணு உலையை உடனடியாக நிறுத்த ‘kill-switch’ பயன்படுத்தலாம் என்று அவர்கள் நினைத்தனர். இருப்பினும், அது வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக, ’kill-switch’ பயன்படுத்துவது உண்மையில் அணு உலையை வெடிக்கச் செய்தது.
மக்களும் இயந்திரங்களும் ஒன்றிணைந்து சரியாக வேலை செய்யாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முனிபோவ் கூறினார். மைய வடிவமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பில் சிக்கல்கள் இருப்பதாகவும், இந்த குறைபாடுகள் இயக்குபவர்களை தவறு செய்வதற்கு வழிவகுத்தது.