VVPAT அலகுகளில் சின்னங்களை வைப்பது மென்பொருளைப் பதிவேற்றுவது போன்றது அல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பற்றி . . . - கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

 தேர்தலுக்கு முன்னதாக சின்னங்களுடன் தீங்கிழைக்கும் மென்பொருள் (malicious software) வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைகளில்  (Voter Verifiable Paper Audit Trail (VVPAT)) பதிவேற்றம் செய்யப்படும் என்ற மனுதாரரின் அச்சத்தை நீதிமன்றம் போக்கியுள்ளது. 


உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒரு தீர்ப்பை வழங்கியது. VVPATஇல் வரிசை எண்கள், வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் கட்சி சின்னங்களை bitmap படங்களாக சேர்ப்பது மென்பொருளைப் பதிவேற்றுவதிலிருந்து வேறுபட்டது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்தத் தீர்ப்பு மனுதாரர்களின் கவலைகளை நிவர்த்தி செய்தது. தேர்தலுக்கு முன்பு சின்னங்களுடன் VVPAT இயந்திரத்தில் தீங்கிழைக்கும் மென்பொருள் நுழைக்கப்படலாம் என்று அவர்கள் கவலைப்பட்டனர்.  


ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) தனது கோரிக்கைகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது. அவர்களின் சார்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தில் வாதாடினார். யாராவது வாக்களிக்கும்போது, சிக்னல் வாக்குச்சீட்டு அலகில் (ballot unit) இருந்து VVPAT-க்கு கட்டுப்பாட்டு அலகுக்கு (control unit) நகர்கிறது என்று கூறினார். VVPAT-ல் தீங்கிழைக்கும் மென்பொருள் இருந்தால், அது தேர்தலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்தார்.  


VVPATகளில் சின்னங்களை ஏற்றும் செயல்முறையில், நிரல் (programme) அல்லது நிலைப்பொருளை  (firmware) மாற்றவோ முடியாது. இந்த  நிலைபொருள் (firmware)  ஏற்கனவே VVPAT இன் நினைவகத்தில் (memory) நிறுவப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அலகு (control unit) மற்றும் வாக்கு அலகு (ballot unit) சின்னம் ஏற்றும் செயல்பாட்டில் ஈடுபடவில்லை. அவை எந்த ஒரு மாற்றமும் செய்யப்படுவதில்லை. கட்டுப்பாட்டு அலகு மற்றும் வாக்குச் சீட்டு அலகில் உள்ள நிலைப்பொருள்  (firmware) எந்தவொரு வேட்பாளருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ சாதகமாக இல்லை என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா (Sanjiv Khanna) தனது கருத்தை தெரிவித்தார்.


VVPAT களில் சின்னங்கள் எவ்வாறு ஏற்றப்படுகின்றன என்பதையும் நீதிமன்றம் விளக்கியது. இது வரிசை எண், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் கோப்பு வாக்களிப்பதற்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்பு மற்றொரு சாதனத்தைப் பயன்படுத்தி VVPAT இயந்திரங்களுக்குச் செல்லும். VVPAT நினைவகம் காலியாக இருக்கும். அதற்கு முன்னதாக எந்த கட்சி  அல்லது வேட்பாளருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படாது. 

 

சின்னம் ஏற்றும் பணியில் உற்பத்தியாளர்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பங்கேற்கின்றனர். இந்த செயல்முறை வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுக்கு முன்னால் நிகழ்கிறது. ஒரு மின் திரை அல்லது  தொலைக்காட்சி  திரை காட்சிகள் சின்னம் ஏற்றுதல் செயல்முறையை அது காட்டுகிறது. 

 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது: வாக்குச்சீட்டு அலகு (ballot unit), கட்டுப்பாட்டு அலகு (control unit) மற்றும் VVPAT.


கட்டுப்பாட்டகம் (control unit) ஒரு கணக்கீடு கருவி போலச் செயல்படுகிறது. வாக்குச்சீட்டு அலகில் எத்தனை முறை பொத்தான்கள் அழுத்தப்படுகின்றன என்பதன் அடிப்படையில் மொத்த வாக்குகளை இது கணக்கிடுகிறது. இது எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ சாதகமாக இல்லை. இது வாக்குச் சீட்டு அலகில் உள்ள பொத்தான்களை அழுத்துவதற்கு மட்டுமே பதிலளிக்கிறது.


சின்னங்கள் ஏற்றப்பட்ட பிறகு, வாக்குச் சீட்டுகளில் குறிப்பிட்ட பொத்தான்கள் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்படும்.


வாக்குச்சீட்டில் எவ்வாறு வேட்பாளர்களுக்கு பொத்தான்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அரசியல் வேட்பாளர்களுக்கான பொத்தான்கள் அவர்களின் பெயர்களின் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.   முதலாவதாக, தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மற்ற மாநில பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் கடைசி இடத்தில் உள்ளனர்.




Original article:

Share: