போக்குகளைப் பின்பற்றுவதற்கான முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கும் ஒரு உயர் நீதிமன்றம், இறுதி அதிகாரம் கொண்ட நீதிமன்றத்திற்கு முக்கியமான ஸ்திரத்தன்மை மற்றும் தீவிரத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த நீதிமன்றமாகும். இது மேல்முறையீட்டின் (appeal) மிக உயர்ந்த நீதிமன்றமாகும். மேலும், கூட்டாட்சி நீதிமன்றமாகவும் (federal court) செயல்படுகிறது. கூடுதலாக, இது ஆலோசனை அதிகார வரம்பைக் (advisory jurisdiction) கொண்டுள்ளது மற்றும் உயர் நீதிமன்றங்கள் மற்றும் அதன் சொந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கவும் மாற்றவும் முடியும்.
2002 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் "தீர்வுகாணும் அதிகார வரம்பு" (Curative Jurisdiction) என்று அழைக்கப்படும் ஒரு புதிய அதிகாரத்தைப் பெற்றது. இது, நீதிமன்றம் தனது சொந்த இறுதி தீர்ப்புகளை சரிசெய்ய அனுமதிக்கிறது. இந்த அதிகாரம் அனைத்து இந்திய நீதிமன்றங்களுக்கும் உள்ள மறு ஆய்வு அதிகாரத்திலிருந்து வேறுபட்டது. மறுஆய்வு அதிகாரம் (power of review) நீதிமன்றங்கள் தங்கள் பதிவுகளில் வெளிப்படையான பிழைகளை சரிசெய்ய அனுமதிக்கிறது.
சட்டத்தை அறிவிப்பதில் நீதிமன்றத்திற்கு அரசியலமைப்பின் பங்கு உள்ளது. சட்டமானது மனித அறிவின் வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்துடன் முன்னேற வேண்டும். நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் சில நேரங்களில் சட்டத்தில் மாற்றங்களை தூண்ட வேண்டும். இந்த காரணத்திற்காகவே நீதிமன்றங்கள் தங்கள் கருத்துக்களை மாற்றியமைக்கின்றன. தனிமனித உரிமை (right of privacy), ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்குதல் (decriminalisation of homosexuality) மற்றும் இன்னும் பலவற்றை நீதிமன்றத்தின் பார்வையில் மாற்றுவதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். இதில், தீர்வுகாணும் அதிகார வரம்பு (Curative Jurisdiction) என்பது வேறுபட்டது. இது நீதிமன்றமானது சட்டத்தின் நிலைப்பாட்டில் தனது பார்வையை மாற்றுவது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட வழக்கில் நீதிமன்றத்தின் சொந்தக் கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்யும் அதிகாரத்திற்கு மேல் மற்றும் அதற்கு அப்பால் மாற்றுவதாகும்.
டெல்லி மெட்ரோ ரயில் தீர்ப்பு
இந்த கட்டுரையில், உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பானது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக விவாதித்தோம். இந்த விவாதத்தில் கருத்தை விளக்குவதற்கு ஏப்ரல் 10, 2024 முதல், உதாரணமாக ஒரு வழக்கை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இது, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Delhi Metro Rail Corporation Ltd. (DMRC)) மற்றும் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் (Delhi Airport Metro Express Pvt Ltd (DAMEPL)) இடையேயான சீராய்வு மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த வழக்கில் அடங்கும். இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது.
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Delhi Metro Rail Corporation Ltd. (DMRC)) நிறுவனத்திற்கு எதிராக ஒரு நடுவர் தீர்ப்பாயத்தில் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் (Delhi Airport Metro Express Pvt Ltd (DAMEPL)) நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க உரிமைகோரலின் மூலம் தீர்ப்பை வென்றது. டெல்லி மெட்ரோ ரயிலின் ஒரு பகுதிக்கான நீண்டகால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான DAMEPL இன் தீர்ப்பின் முடிவின் அடிப்படையில் இந்த உரிமைகோரல் அமைந்தது. இந்த ஒப்பந்தத்தில் தேவைப்பட்டபடி, மெட்ரோ கட்டுமானத்தில் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (DMRC) சில குறைபாடுகளை சரிசெய்யவில்லை என்று அவர்கள் நம்பியதால் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் (DAMEPL) ஒப்பந்தத்தை நிறுத்தியது.
குறைபாடுகளை சரிசெய்வதற்கான அறிவிப்பைப் பெற்ற பின்னர் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (DMRC) இந்த சிக்கல்களை தீர்க்கவில்லை என்றால் இதற்கான ஒப்பந்தத்தை முடிக்க, டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் (DAMEPL) ஐ அனுமதித்தது. நிறுத்தப்பட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பினரும் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் (Commissioner for Metro Rail Safety (CMRS)) கூட்டாக கோரிக்கை விடுத்தனர். வேகக் கட்டுப்பாடுகள் (speed restrictions) உள்ளிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் (Commissioner for Metro Rail Safety (CMRS)) இதற்கு அனுமதி அளித்துள்ள்ளார். டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (DMRC), மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரின் (CMRS) அனுமதியின் மீது நம்பிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் (CMRS) அனுமதியை ஆய்வு செய்த நடுவர் மன்றத்தின் (Arbitral Tribunal), சிக்கல்களை தீர்மானிப்பதில் அது முக்கியமல்ல என்று கூறியது.
தீர்வுகாணும் அதிகார வரம்பைப் பயன்படுத்துதல்
நீதிமன்றம் இரண்டு காரணங்களுக்காக தலையிட்டது. முதலாவதாக, நடுவர் தீர்ப்பாயத்தின் பணிநீக்க விதியின் விளக்கம் தவறானதாகக் காணப்பட்டது. டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (DMRC) இந்த மீறலை சரிசெய்ய பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அதை முழுமையாக தீர்க்க முடியாது என்பதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இரண்டாவதாக, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் (CMRS) அனுமதியிலிருந்து முக்கியமான ஆதாரங்களை நடுவர் தீர்ப்பாயம் புறக்கணித்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்த விஷயமும் இரண்டு காரணங்களுக்காக முக்கியமானதாக உள்ளது. முதலாவதாக, நீதிமன்றம் வழக்கமாக நடுவர் தீர்ப்பாயங்களால் எடுக்கப்படும் முடிவுகளில் குறைந்தபட்ச தலையீட்டை ஆதரிக்கிறது. இரண்டாவதாக, இந்த வழக்கமான நடைமுறையைப் பின்பற்றிய அதன் சொந்த 2019 முடிவு தவறானது என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
ஒரு நீதிமன்றம் ஒரு நடுவர் தீர்ப்பை ஒதுக்கி வைக்கும்போது, அது மேல்முறையீட்டு நீதிமன்றத்தைப் போல செயல்படாது என்று அமைக்கப்பட்ட சட்டம் கூறுகிறது. பொதுவாக, ஒரு ஒப்பந்தத்தின் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது தவறானதாக இருக்கலாம், ஆனால் இன்னும் நியாயமானது. அதனால், ஆதாரங்களை மறுமதிப்பீடு செய்ய முடியாது. இருப்பினும், விளக்கம் "விபரீதமாக" (perverse) இருந்தால் நீதிமன்றம் தலையிட முடியும். "விபரீதமான" விளக்கத்திற்கும் "நம்பத்தகுந்த ஆனால் தவறான" (plausible but incorrect) விளக்கத்திற்கும் இடையிலான விளக்கம் தெளிவாக இல்லை.
நடுவர் மன்றம் தீர்ப்பாயத்தின் முக்கிய ஆதாரங்களை புறக்கணித்திருக்கலாம். ஆனால், அது தலையிடுவதற்கு ஒரு காரணத்தை ஏற்படுத்தியிருக்கும். எவ்வாறாயினும், ஆதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை நடுவர் மன்றம் தீர்மானிக்கிறது, எனவே அது முக்கியமில்லை என்று அவர்கள் சொன்னால், நீதிமன்றம் அவர்களின் முடிவை மாற்றாது. எனவே, நீதிமன்றம் தனது தீர்வுகாணும் அதிகார வரம்பைப் (Curative Jurisdiction) பயன்படுத்தி முன்பு நடுவர் தீர்ப்பை உறுதிப்படுத்திய தனது சொந்த தீர்ப்பை மாற்றியது.
பிரச்சினைகள்
தற்போது கற்பனையாக, உங்கள் ஞானப் பற்களை (wisdom tooth) அகற்ற பல் மருத்துவரிடம் செல்கிறீர்கள். அதை வெளியே எடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர், பல் மருத்துவர் அதைச் சரியாகச் செய்தார் என்று கூறும் அனுபவம் வாய்ந்த பல் மருத்துவர்களின் குழுவைப் பார்க்கிறீர்கள். பல் மருத்துவர் சரியானதைச் செய்தார் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். நான்கு வருடங்கள் கழித்து, மீண்டும் செக்-அப்பிற்கு வரச் சொல்கிறார்கள். பின்னர், அவர்கள் உங்கள் ஞானப் பல்லை மீண்டும் உள்ளே வைக்க ஒரு "தீர்வுகாணும் செயல்முறை" (curative procedure) செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். இதன் அடிப்படையில், இந்த சட்டமானது, உச்ச நீதிமன்றம் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ள முயல்வதே தீர்வுகாணும் அதிகார வரம்பு (Curative Jurisdiction) ஆகும்.
நாட்டில் உச்ச நீதிமன்றமானது, நீதித்துறையின் மூலக்கல்லாகவும், அரசியலமைப்பின் இறுதி விளக்கமளிப்பவராகவும், தனிப்பட்ட வழக்குகளில் உள்ள பிழைகளை விட அதிகமாக, நாட்டின் கவனம் செலுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் முழு தேசத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் சட்டங்களை உருவாக்குகிறது, தனிப்பட்ட வழக்குகளுக்கு மட்டும் அல்ல.
DMRC vs DAMEPL வழக்கில், உச்சநீதிமன்றத்தின் விளக்கம் சரியானது மற்றும் மேல்முறையீட்டு நிலையில் பொருத்தமானதாக இருந்திருக்கும். இருப்பினும், இந்த நடவடிக்கை ஒரு நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்டது. பெரும்பாலும், தவறான விளக்கங்களை அடிப்படையாகக் கொண்ட குறைந்தபட்ச நீதித்துறையின் தலையீடு என்ற கொள்கையின் காரணமாக இன்னும் நிலைநிறுத்தப்படுகின்றன. குறிப்பாக 2015 முதல், நீதிமன்றங்கள் பொதுவாக நடுவர் மன்றங்களின் சட்டங்களில் 2015, திருத்தங்களின் நோக்கத்தை ஆதரிக்க ஈடுபாட்டைத் தவிர்க்கின்றன.
உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலுக்காகவும், நிலைத்தன்மைக்காகவும் பார்க்கப்படுகிறது. இது சட்டத்தில் ஒரு வழிகாட்டும் நட்சத்திரமாக கருதப்படுகிறது. தனிநபர்கள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்வதன் மூலம் பயனடையலாம் என்றாலும், சட்டங்களை நிறுவும் ஒரு நிறுவனத்திற்கு இந்த நடைமுறை சிக்கலாக இருக்கலாம். சரி மற்றும் தவறு பற்றிய நமது பார்வைகள் பெரும்பாலும் தற்போதைய போக்குகளால் வடிவமைக்கப்படுகின்றன. இந்த போக்குகளுடன் தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றும் ஒரு உச்ச நீதிமன்றம், இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்பார்க்கப்படும் நிலைத்தன்மையையும் தீவிரத்தையும் கொண்டிருக்காது.
நீதிபதி ஜாக்சனின் வார்த்தைகளை எடுத்துக் கொண்டால், ”உச்ச நீதிமன்றம் தவறாது என்பதால் இறுதியானது அல்ல, ஆனால் அது இறுதியானது என்பதால் தவறானது அல்ல” (Supreme Court is not final because it is infallible but infallible because it is final).
ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் மற்றும் அனிருத் கிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள்.