இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ செயற்கைக்கோள் தொலை உணர்வை எவ்வாறு பயன்படுத்தியது ? -நிகில் கானேகர்

 இஸ்ரோவின் இந்த ஆய்வு பனிப்பாறை மற்றும் ஏரிகள் பற்றிய பல புதிய ஆய்வு ஆகும். பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் (glacial lake outburst floods (GLOFs)) ஆபத்தானது மற்றும் கீழ்நோக்கி உள்ள இடங்களை பாதிக்கும் என்று இஸ்ரோ கூறியுள்ளது. இந்த ஏரிகளுக்கு அருகிலுள்ள மக்கள் குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்புகளை இந்த வெள்ளம் பாதிக்கும்.


இந்த வார தொடக்கத்தில், இந்திய இமயமலை ஆற்றுப் பகுதிகளில் உள்ள பனிப்பாறை ஏரிகள் பற்றிய ஆய்வை இஸ்ரோ பகிர்ந்து கொண்டது. இந்த ஏரிகள் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றி ஆய்வு கூறுகிறது. பனிப்பாறை ஏரி வெள்ளத்தின் ஆபத்துகள் மற்றும் அவை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் போன்ற உட்கட்டமைப்புகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் காட்டும் தொடர் ஆய்வுகளின் ஒரு பகுதியாகும்.


இஸ்ரோவின் பகுப்பாய்வு என்ன வெளிப்படுத்தியது?


பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்களைக் காண கடந்த 40 ஆண்டுகளில் செயற்கைக்கோள் தரவுகளை இஸ்ரோ ஆய்வு செய்தது. அவர்கள் 1984 முதல் 2023 வரையிலான படங்களைப் பயன்படுத்தினர், இது இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் உள்ள நதிப் படுகைகளை உள்ளடக்கியது. பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து விட்டதை இஸ்ரோ கண்டறிந்துள்ளது.


2016-17ஆம் ஆண்டில், 10 ஹெக்டேரை விட பெரிய அளவு கொண்ட 2,431 ஏரிகள் கண்டறியப்பட்டன, 1984 முதல் 676 பனிப்பாறை ஏரிகள் நிறைய உருவாகி வருகின்றன. இவற்றில், 601 ஏரிகள் இரட்டிப்பாகவும் உருவாகியுள்ளது, இதில் 10 ஏரிகள்  1.5 முதல் 2 மடங்காகவும், 65 ஏரிகள் 1.5 மடங்கும் விரிவடைந்துள்ளன. இவற்றில் 130 ஏரிகளில் சிந்து 65, கங்கை 7, பிரம்மபுத்திரா 58 ஆகிய நதிப் படுகைகளில் உள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால் ஏரிகளின் அளவு விரிவடைகின்றன.


பனிப்பாறை ஏரிகள் எவ்வாறு உருவாகின்றன?


பனிப்பாறைகள் நகர்ந்து நிலத்தை தேய்த்து, துளைகளை உருவாக்குகின்றன. பனிப்பாறைகள் உருகும்போது, ​​​​இந்த துளைகளில் தண்ணீர் சேகரிக்கப்பட்டு ஏரிகள் உருவாகின்றன.    

   

இஸ்ரோ பனிப்பாறை ஏரிகளை நான்கு வகைகளாகப் பிரித்துள்ளது. ஏரிகள் எவ்வாறு உருவாகின்றன என்பதன் அடிப்படையில் இந்த வகைகள் உள்ளன மொரைன்-டேம்ட் (moraine-dammed), ஐஸ்-டேம்ட் (ice-dammed), அரிமானத்தின் (erosion-based) அடிப்படையிலானது மற்றும் 'இதரவை'. மொரைன் (moraine) நீரை தடுக்கும் போது மொரைன் ஏரிகள் உருவாகின்றன. மொரைன்கள்  என்பது பாறைகள் மற்றும் மண் போன்ற குப்பைகளாகும். இது பனிப்பாறைகளை நகர்த்துவதன் மூலம் உருவாகியுள்ளது. பனி நீரை தடுக்கும் போது பனியால் ஏரிகள் உருவாகின்றன. அரிப்பினால் உருவாக்கப்பட்ட பள்ளங்கள் தண்ணீரைத் தடுக்கும்போது அரிப்பு அடிப்படையிலான ஏரிகள் உருவாகின்றன.


பனிப்பாறை ஏரிகள் முக்கியமானவை, ஏனெனில், அவை நதிகளுக்கு நன்னீர் வழங்குகின்றன. இருப்பினும், அவை ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் (Glacial lake outburst flood (GLOFs)) ஆகும். இந்த வெள்ளம் கீழ்நோக்கி கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தும். அவை உட்கட்டமைப்பில்  பேரழிவை ஏற்படுத்துகின்றன.


பனிப்பாறை ஏரிகள் திடீரென அதிக அளவு உருகும் நீரை வெளியிடும் போது பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் ஏற்படுகின்றன. இயற்கையாக உருவாகிய ஏரிகள் உடைவதால் வெள்ளம் ஏற்படுகிறது. இவை பல காரணிகளால் தூண்டப்படலாம். எடுத்துக்காட்டாக பனி அல்லது பாறையின் பனிச்சரிவுகள் அடங்கும். இதற்கு இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

 

பனிப்பாறை ஏரிகளை கண்காணிக்க செயற்கைக்கோள் ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?


கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரிகளைக் கண்காணிப்பது கடினமாக உள்ளது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இதற்கு சிறந்தது என்று இஸ்ரோ கூறுகிறது, ஏனெனில் இது நிறைய பகுதிகளை உள்ளடக்கியது மற்றும் அடிக்கடி பார்வையிட முடியும்.


செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி நீண்ட கால மாற்றங்களை பகுப்பாய்வு செய்வது, காலப்போக்கில் பனிப்பாறை ஏரிகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் என்று இஸ்ரோ கூறுகிறது. அவை சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறியவும், பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளங்களிலிருந்து மக்களை பாதுகாக்கவும் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திட்டங்களை உருவாக்கவும் பயனளிக்கும்.


பனிப்பாறை நிபுணர் ஆஷிம் சத்தார், புவனேஸ்வரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளார். இவர் கூறுகையில் பெரும்பாலான பனிப்பாறை ஏரி தளங்களை சாலைகள் மூலம் அணுக முடியாது இதுபோன்ற சமயங்களில், ரிமோட் சென்சிங் கருவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கருவிகள் இப்போது மிகவும் மேம்பட்டவை. அவை பனிப்பாறை ஏரிகளின் வளர்ச்சியைக் கண்காணிக்க உதவுகின்றன. இந்த ஏரிகளின் இயக்கவியலைப் புரிந்து கொள்ளவும் அவை உதவுகின்றன.


ஆஷிம் சத்தார் களப்பணி குறித்தும் பேசினார். முக்கியமானதாக அடையாளம் காணப்பட்ட ஏரி தளங்களில் களப்பணி சாத்தியமாகும் என்றார். ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளை அமைப்பதற்கு களப்பணி முக்கியமானது. இந்த அமைப்புகள் மூலம் இயக்கங்களை கண்டறிதலுக்கு கேமராக்கள் மற்றும் நீர் நிலை உணரிகளை பயன்படுத்தலாம். இந்த கருவிகள் பனிப்பாறை ஏரிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள அசாதாரண செயல்பாடுகளைக் கண்டறிய உதவுகின்றன.


பனிப்பாறை ஏரிகளால் ஏற்படும் அபாயங்களை எவ்வாறு தணிக்க முடியும்?


2023 இல், புவி இயற்பியல் ஆராய்ச்சி இதழில் ஒரு ஆய்வு வெளிவந்தது. இது கெபன் காத் (Ghepan Gath) ஏரியின் அபாயங்களைப் கூறியது. இந்த ஏரி இமாச்சல பிரதேசத்தில் 4,068 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. லாஹவுல் பள்ளத்தாக்கில் (Lahaul valley) உள்ள சிசுவில் (Sissu) ஏரியின் தாக்கம் குறித்து ஆய்வு கவனம் செலுத்தியது. ஏரியின் நீர்மட்டத்தை குறைத்தால் என்ன நடக்கும் என்பதும் ஆய்வு மாதிரியாக இருந்தது.


ஏரியின் நீர்மட்டத்தை 10 முதல் 30 மீட்டர் வரை குறைப்பது சிசு நகரத்தின் மீதான தாக்கத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இது பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ள நிகழ்வின் அபாயங்களை முழுமையாக குறைக்காது.


ஏரி நீரை குறைப்பதற்கான ஒரு முறை நீண்ட உயர் அடர்த்தி கொண்ட பாலிஎதிலின் (High Density Polyethylene (HDPE)) குழாய்களைப் பயன்படுத்துவதாகும். 2016 ஆம் ஆண்டில், சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சிக்கிமில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றத் துறை ஆகியவை இந்த முறையைப் பயன்படுத்தியது. அவர்கள் உயர் அடர்த்தி கொண்ட பாலி எதிலின் குழாய்களைப் பயன்படுத்தி சிக்கிமில் உள்ள தெற்கு லோனாக் (South Lhonak) ஏரியின் நீர்மட்டத்தைக் குறைத்தனர். 




Original article:

Share: