மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (electronic voting machines (EVMs)) நம்பகத்தன்மையை இந்திய உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT-Voter Verified Paper Audit Trail) சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில், தற்போதைய சரிபார்ப்பு அமைப்பில் பெரிய சிக்கல்கள் உள்ளன என்பதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், நீதிபதிகள் தேர்தல் ஆனையத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளும் காட்டுகின்றன. குறிப்பாக, VVPAT களைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, காகித வாக்குச் சீட்டுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் நீதிமன்றம் கூறி வருகிறது. இந்த முறையை மாற்ற வேண்டாம் என்று நீதிமன்றம் கூறுவது VVPAT சீட்டுகளை 50% அல்லது 100% சரிபார்ப்பைக் கேட்பது போன்ற இதே போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் இதற்கு முன்னரும் நிராகரித்துள்ளது.
நீதிமன்றம் இயந்திரத்தில் உள்ள பாதுகாப்புகளை மதிப்பாய்வு செய்தது. இயந்திரத்தில் மீதான குறைபாடுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை இருந்தாலும் நீதிமன்றம் இரண்டு வழிகாட்டுதல்களை வழங்கியது:
1) தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 45 நாட்களுக்கு சின்னம் ஏற்றும் அலகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
2) தோல்வியடைந்த முதல் இரண்டு வேட்பாளர்கள், குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் உள்ள 5% EVMகளில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர்களைச் சரிபார்க்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.
2013இல் நீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பில், நேர்மையான தேர்தலுக்கு VVPAT அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மற்றொரு வழக்கில், VVPAT சரிபார்ப்பை ஒரு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 5 ஆக உயர்த்துவதை ஆதரித்தது. வாக்காளர்கள், தங்களின் வாக்குகள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவே VVPAT கொண்டுவரப்பட்டுள்ளது.
முரண்பாடாக, VVPA இப்போது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நீதிபதி சஞ்சீவ் கன்னா மேம்படுத்துவதற்க்கு பரிந்துரைகளை குறிப்பிட்டுள்ளார். இயந்திரங்கள் மூலம் காகித தணிக்கை சோதனை சீட்டுகளை எண்ணுவது மற்றும் எதிர்காலத்தில் வாக்கு எண்ணுவதை எளிதாக்க வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரங்களில் உள்ள சின்னங்களில் பார்கோடுகளைப் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். இத்தகைய தொழில்நுட்ப மேம்பாடுகள் வாக்களிக்கும் செயல்முறையை நம்பகத்தன்மையாக மாற்றும்.
இதில் பெரிய பிரச்சினை உள்ளது. வாக்கு மோசடி குறித்த சந்தேகங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது அதிகரித்து வரும் அவநம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. இந்த அவநம்பிக்கை கடந்த காலங்களை விட அதிகமாக உள்ளது. வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் செயல்முறையில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவது முக்கியம் என்றாலும், தேர்தல் ஆணையமானது நடுநிலையுடன் இருப்பது முக்கியம்.