அதிபர் தேர்தலின் செய்தி தெளிவாக இருந்தது. மக்கள் மாற்றத்திற்காக தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர்.
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்த இலங்கை மக்கள் ஆட்சி (National People’s Power (NPP)) மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் (Janatha Vimukthi Peramuna (JVP)) தலைவருமான திரு.திசாநாயக்க, 1978-ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணும் நிலைமை ஏற்பட்டது. இருப்பினும் நாட்டுமக்கள் அனைவரும் மாற்றத்திறகாக வாக்களித்தனர்.
2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளை போல் இல்லாமல், மக்கள் விடுதலை முன்னணி கட்சி சுமார் 42% வாக்குகளைப் பெற்றது. 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளை விட குறைவாக இருந்தாலும், வாக்குப்பதிவு சுமார் 79.5% ஆக இருந்தது. ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வாக்கு சேகரித்தனர். இலங்கையில் "போராட்டம்" என்று பொருள்படும் அரகலய (Aragalaya) இயக்கத்தின் இலக்குகள் பிரச்சாரத்திலும் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது.
பொருளாதார நெருக்கடிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, வேட்பாளர்கள் அனைவரும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினர். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சரிசெய்வது தனது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று திஸாநாயக்க அண்மையில் 'தி இந்து'விடம் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைவர் ஒரு இடதுசாரியாக இருந்த போதிலும், தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறார். அவரது தேர்தல் அறிக்கை, சர்வதேச நாணய நிதியத்துடனான 2.9 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அவரது தேர்தல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடபட்டிருந்தது.
எவ்வாறாயினும், திரு. திஸாநாயக்க தனது பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தற்போதைய "ஊழல் அரசியல் கலாச்சாரத்தில்" அவர் விமர்சித்த "அமைப்பு மாற்றத்தை" நிறைவேற்றுவதிலும், ஆட்சியிலும் அவர் சவால்களை எதிர்கொள்வார். ஒரு காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி கட்சி எதிர்த்த ஒரு அடுக்கு அரசாங்கமான மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான வாக்குறுதி தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டு உறவுகளைப் பொறுத்தவரை, அவரது விமர்சகர்களால் "சீன சார்பு" தலைவர் என்று அழைக்கப்படும் திரு திசாநாயக்க, தனது நடைமுறைவாதத்தை விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்தார். இந்தியா உட்பட பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தவோ அல்லது ஆபத்துக்குள்ளாக்கவோ இலங்கையின் பிராந்தியம் அனுமதிக்கப்படாது என்றும் அவரது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், 30 வருடங்களுக்கு மேலாக நாட்டின் அரசியல் செயல்களால் அழிந்து வர மறுத்து வரும் அதிகார அதிபர் முறையை ஒழிப்பதாக தான் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை புதிய அதிபர் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மிகவும் சவாலான காலத்தில் பதவி ஏற்க இருக்கும் திரு.திஸாநாயக்கவுக்கு இலங்கை சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.