பாதுகாப்பு மற்றும் நிதி போன்ற பல்வேறு பகுதிகளை தெளிவான திட்டமிடலுடன் ஒன்றிணைக்க வேண்டும். இருப்பினும், இந்த நடவடிக்கைகளை அமைதியாக மேற்கொள்ள வேண்டும்.
அண்டை நாடுகளில் சூழல் தொடர்ந்து மாற்றிவருவதால், தேசிய பாதுகாப்பு உத்தியின் தேவை குறித்து மக்கள் மீண்டும் பேச தொடங்கிவிட்டனர். பழைய எதிரிகள் பலமாகி வருகின்றனர், புதிய நட்பு நாடுகள் இன்னும் உறுதியாகவில்லை.
4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் இலக்கு உக்ரைன் மற்றும் காசாவில் நடந்து வரும் போர்கள் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இது உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கிறது. சுகாதார அமைச்சகம் முதல் பாதுகாப்பு அமைச்சகம் வரை அனைவரும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறார்கள். நாம் பற்றாக்குறையான வளங்களுக்கு (scarce resources) முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானது.
காலத்தைப் புரிந்துகொள்வது
அமெரிக்காவைப் பொறுத்தவரை, தேசிய பாதுகாப்பு என்பது மதிப்புகள் மற்றும் தேசிய நலன்களில் கவனம் செலுத்துகிறது. பொருளாதார நலன்களுக்காக சர்வாதிகாரிகளை ஆதரிக்கும் அதே வேளையில், அமெரிக்கா தன்னை ஒரு வலுவான ஜனநாயக நாடாக உயர்த்திக் கொள்ள விரும்புகிறது. ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு உத்தி (National Security Strategy (NSS)) 29 "மதிப்புகளை" குறிப்பிடுகிறது.
இருப்பினும், இதன் முக்கிய நோக்கம் உலகளவில் அமெரிக்காவின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதாகும். இது பொருளாதார நிதியுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையின் தேசிய பாதுகாப்பு உத்தி (Defence Department’s National Defense Strategy) மற்றும் ஒவ்வொரு இராணுவக் பிரிவிற்கான "நிலைபாடு" (Posture) ஆவணங்கள் உட்பட பல ஆவணங்களுக்கான அடித்தளமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உத்தி உள்ளது. அதன் பிறகு, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது காங்கிரஸ் நிதிக்கு ஒப்புதல் அளிக்கிறது. இந்த செயல்முறை தேசிய பாதுகாப்பை வடிவமைப்பதில் உள்ள படிகளை எடுத்துக்காட்டுகிறது.
வெவ்வேறு நாடுகளில், இந்த உத்தி நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகாரத்தைக் காட்டுவதாகும். வெளிப்புறமாக, சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மற்ற நாடுகளை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்நாட்டில், இது வாக்காளர்களுக்கு வலிமையையும் உறுதியையும் காட்டுகிறது. பொது ஆவணங்கள் பெரும்பாலும் நாட்டின் திறன்களை முன்னிலைப்படுத்துகின்றன. உலக வல்லரசாக தன்னைக் கருதும் ஐக்கிய இராச்சியம், 2021-ஆம் ஆண்டில் ஒரு ஒருங்கிணைந்த மதிப்பாய்வை வெளியிட்டது. இந்த மதிப்பாய்வு உலகளாவிய பங்கிற்காக நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
ஐக்கிய இராச்சியம் அதன் தேவைக்காக விமானங்களை வாங்க முடியாது. ஆயினும் கூட, அது இன்னமும் தன்னை "உலகளாவிய நலன்களைக் கொண்ட ஒரு ஐரோப்பிய சக்தியாக" முன்நிறுத்திக் கொள்கிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனைப் பொறுத்தவரை, 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மறு ஆய்வு உக்ரைன் போருக்கான பிரதிபலிப்பாகவும், பிரான்சின் அணுசக்தித் தடுப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்தது. இது ஐரோப்பிய தலைமையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அது முழுமையாக வெற்றிபெறவில்லை. இருப்பினும், இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.
பாதுகாப்பு, நிதி, முதலீடுகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பகுதிகளை ஒன்றிணைத்து நாட்டிற்கான தெளிவான திட்டமாக இந்தியாவிற்கு தேசிய பாதுகாப்பு உத்தி (National Security Strategy (NSS)) தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், இந்த செயல்முறை முக்கியமான காரணங்களுக்காக கண்டிப்பாக இரகசியமாக செய்யப்பட வேண்டும். ஏனெனில், அச்சுறுத்தல்கள் பற்றிய தெளிவான அறிக்கை தேவைப்படும்.
இப்போது, பல சீரமைப்பு (multi-alignment)
நிதிநிலை அறிக்கை உரைகள் வெளியிலோ அல்லது உள்ளேயோ "எதிரியை" அரிதாகவே குறிப்பிடுகின்றன. மேலும். அவை பாதுகாப்பு பற்றி முழுமையாக விளக்கவில்லை. இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானது என்றாலும், சர்வதேச உறவுகளில் இறையாண்மையைப் பற்றி பேசுவதற்கு வலுவான பொருளாதாரமும் முக்கியமானது என்பதை ஒவ்வொரு நிதியமைச்சரும் அறிவார்கள். ஏழை நாடுகள் பெரும்பாலும் சக்திவாய்ந்த நாடுகளைப் பின்பற்றுகின்றன அல்லது கூட்டணிகளை உருவாக்குகின்றன. இதை வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும் கூட, மிகப் பெரிய பொருளாதார வலிமையைக் கொண்ட ஒரு விரோதமான கிழக்கு அண்டை நாட்டிற்கு எதிராக இந்தியா தன்னைத் தற்காத்துக் வேண்டியதன் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக, இந்தியா "பன்முகத்தன்மை" நடைமுறையை பின்பற்ற தொடங்கியது. பாதுகாப்பு தொழில்நுட்பம் உட்பட நெருக்கடியில் ஆதரவை வழங்கக்கூடிய எந்த நாட்டுடனும் நட்பை உருவாக்குகிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் (Quad) அமைப்பு, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இருதரப்பு விவாதங்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில், இந்த குழு கடல்களின் சுதந்திரம் (freedom of the seas) என்ற கருத்தை ஆதரிக்கிறது. மறுபுறம், பிரேசில் மற்றும் ரஷ்யாவுடன் சீனா தலைமையிலான பொருளாதார குழுவான பிரிக்ஸ் (Brazil, Russia, India, China, and South Africa (BRICS)) உள்ளது.
மேற்கத்திய நாடுகளை மட்டுமே சார்ந்திருக்க விரும்பாத இந்தியா பிரிக்ஸில் பங்கேற்கிறது. இந்திய மற்றும் சீனாவிற்கு இடையே $85 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இது நிலைமையை சிக்கலாக்குகிறது. குறிப்பாக, சீனா இந்தியப் பகுதியில் அடிக்கடி உரிமை கோருவதால். ஒரு பொது தேசிய பாதுகாப்பு ஆவணத்தில், சீனாவிற்கு எதிராக மட்டும் இந்தியா தன்னை தற்காத்துக் கொள்ள முடியாது மற்றும் தேவையான ஆதாரங்கள் இல்லை என்பது தெளிவாக இருக்கும். நட்பு நாடுகளைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கும் இங்கிலாந்தைப் போலன்றி, இந்தியா கூட்டணிகளை நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.
அச்சுறுத்தல்களுக்கு முன்னுரிமை அளித்த பிறகும், அடுத்த கட்டம் ஒவ்வொரு இராணுவ சேவைக்கும் பணிகளை ஒதுக்குவதும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதும் ஆகும். பாதுகாப்பு தொடர்பான நிதிநிலை அறிக்கை வெளிப்படையானது என்றாலும், உபகரணங்கள் அல்லது சேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எங்கு இடைவெளிகள் உள்ளன என்பதை தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, இந்தோ-பசிபிக் இந்தியாவின் ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்தால், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் கட்டும் திறன்களை விரைவாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களில் கால் பகுதிதான். மேலும், கப்பல் கட்டுமானத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. போர்க் கப்பல்களை இயக்குவதில் இன்னும் தாமதங்கள் உள்ளன. ஆனால், முன்னுரிமைகள் மற்றும் பலவீனங்களைத் தெளிவாகக் கண்டறியாமல், செயல்படுலது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. வெளிப்படைத்தன்மை என்பது வலுவான நாடுகளுக்கானது. மற்ற நாடுகளை பிடிக்க முயற்சிப்பவர்களுக்கு அல்ல. அதனால்தான் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிதிநிலை அறிக்கை தெளிவாக இல்லை. ஒரு ரகசிய ஆவணம் ஒரு துணிச்சலான முன்பக்கத்தைக் காட்டுவதை விட தீவிர பலவீனங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த அணுகுமுறை ஒரு உத்தி அல்ல; இது வெறுமனே நம்பிக்கை.
இப்போது, சுதந்திரமாக வாக்களிக்கும் பொதுமக்களுக்கு முக்கிய செய்தி என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். தற்போதைய சமூக ஊடகங்கள் வலிமையைக் காட்ட வேண்டும். ஏனெனில், இந்தியா தேவையற்ற அபாயங்களை எடுப்பதில் அறியப்படவில்லை. இந்தியா வேறொரு நாட்டைப் பாதுகாத்தபோது, முடிவுகளை விரைவாக எடுத்து வெளியேறியது. இது ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் சிக்கித் தவிக்கும் உலகளாவிய சக்திகளிலிருந்து வேறுபட்டது.
இருப்பினும், பிறநாட்டினர் இந்த நடவடிக்கைகளை தவறாக கருதுவார்கள். குறிப்பாக, பொதுமக்கள் இதை விட அதிகமாக விரும்புகிறார்கள். பலம் குறித்த தெளிவான அறிவிப்பை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய துணிச்சலானது எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும். உள்நாட்டில் அதற்கு அரசியல் மதிப்பு குறைவு.
தேசிய பாதுகாப்பு ஆவணம் அதன் வெளியுறவுக் கொள்கையை சமநிலைப்படுத்தும் இந்தியாவின் திறனைக் கட்டுப்படுத்தலாம். ரஷ்யா-உக்ரைன் மற்றும் காசா போர்களை இந்தியா கவனமாக கையாண்டதில் இது தெளிவாகிறது. நெகிழ்வான வெளியுறவுக் கொள்கையைப் பேணுவதற்கான இந்தியாவின் திறனைக் கட்டுப்படுத்தலாம். அத்தகைய ஆவணத்தில் ஜனநாயகத்தை வலுவாக ஆதரிப்பது மேம்போக்கானதாக தோன்றலாம். அமெரிக்கா உலக வல்லரசாக இருப்பதால் மேம்போக்காக இருக்க முடியும். ஆனால், இந்தியா அப்படி இல்லை.
பொருளாதாரத்தில் இயங்கும் ஒரு முழு நூல்
தேசிய பாதுகாப்பு ஆவணம் (national security document) தற்போது தேவைப்படுகிறது. இது தற்காப்பு பற்றியது மட்டுமல்ல. தொழில், நிதி நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பிற துறைகளை வழிநடத்தும் பொருளாதார முன்னுரிமைகளுடன் இது சீரமைக்கப்பட வேண்டும். தற்போது, இந்த முன்னுரிமைகள் வருடாந்திர அறிக்கைகள் மற்றும் கணக்கெடுப்புகளில் பகுதி பகுதியாக உரையாற்றப்படுகின்றன. அவர்களை ஒன்றிணைத்து, நாடு விரைவாக முன்னேற ஒரு தெளிவான கொள்கையை அமைப்பதே சவாலாகும்.
இந்த நடைமுறை ரகசியமாக வைக்கப்பட வேண்டும். அமைச்சகங்களுக்கு தனி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு ஆணை செயலகம் (National Security Council Secretariat) இந்த பணியை கையாள முழுமையாக திறன் கொண்டது. இதேபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பும், பெரும்பாலும் நீண்ட அதிகாரத்துவ அறிக்கைகளில் செய்யப்பட்டுள்ளன. ஆலோசனைகளை, சுருக்கமான, குறிப்பிட்ட, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, இரகசியமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், ஆவணத்தில் என்ன உள்ளது என்பதை அறிய எதிரிகள் விரும்புவார்கள்.
தாரா கர்த்தா, புது தில்லியில் உள்ள நில போர் ஆய்வுகள் மையத்தின் ( Centre for Land Warfare Studies (CLAWS)) இயக்குநர்.