இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களை (labour laws) அம்பேத்கர் எவ்வாறு சீர்திருத்தினார். -நிகிதா மோஹ்தா

 எர்ன்ஸ்ட் அண்ட் யங் ஊழியர் அன்னா செபாஸ்டியன் பேராயில் பணி மன அழுத்தத்தால் மரணமடைந்ததைக் சீற்றத்தின் மத்தியில், டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பணியிடத்தில் மனிதாபிமான நிலைமைகளுக்காக எவ்வாறு போராடினார்.?


26 வயதான அன்னா செபாஸ்டியன் பேராயிலின் துக்கத்தில் இருக்கும் தாயார் அனிதா அகஸ்டினின் கடிதம் தேசிய கவனத்தைப் பெற்றது. எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரியும் அன்னா, பணி அழுத்தம் காரணமாக சமீபத்தில் இறந்தார்.


மார்புச் சுருக்கம் பற்றிய புகார்களைத் தொடர்ந்து பேராயிலின் மரணம், அகஸ்டின் எர்ன்ஸ்ட் அண்ட் யங்கின் தலைவரைத் தொடர்பு கொள்ளத் தூண்டியது. அவரது மகள் "அதிகமான பணிச்சுமையைப் பற்றி, குறிப்பாக தனது உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அப்பால் ஒதுக்கப்பட்ட கூடுதல் பணிகளைப் பற்றி" எப்படிக் கூறினார் என்பதை வெளிப்படுத்தினார்.


இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறுவேன். ஆனால், மேலாளர்கள் கூடுதலாக  பணி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மனிதர்களைப் புறக்கணிக்கும் அதே வேளையில் அதிக உழைப்பை மகிமைப்படுத்துவது போல் தோன்றும் ஒரு பணி கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது" என்று அகஸ்டின் வலியுறுத்தினார்.


பேரயிலின் மரணம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வெடுப்பதற்கும் குணமடைவதற்கும் சிறிதளவு இடமளிக்கும் கடினமான வேலை கலாச்சாரத்துடன் பலர் தொடர்புபடுத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில் பணி கலாச்சாரம் பற்றி ஆழமான விவாதம் தேவை மற்றும் டாக்டர் பி.ஆர் போன்ற தலைவர்களை நமக்கு நினைவூட்டுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் (workers’ rights) போராடியவர் அம்பேத்கர். 

எட்டு மணி நேர வேலை நாள், அம்பேத்கரின் மரபு 


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார். நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை அவர் மாற்றினார். ஜூலை 20, 1942-ஆம் ஆண்டு முதல் ஜூன் 1946-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேய பிரபுவின்  நிர்வாகக் குழுவின் (Viceroy’s Executive Council) தொழிலாளர் உறுப்பினராக பணியாற்றினார். இந்த நான்கு ஆண்டு பதவிக்காலம் தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. 


இந்திய பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ் தொகுத்த அம்பேத்கர் பேசுகிறார் (Ambedkar Speaks) என்ற நூலின் இரண்டாம் தொகுதியில் அம்பேத்கர் தொழிலாளர் உறுப்பினராக ஆற்றிய 34 உரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஆறு தொழிலாளர் தொடர்பான அரசாங்கக் கொள்கையைப் பற்றி பேசுகின்றன. ஐந்து தொழிலாளர் சட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் திறன் மேம்பாடு குறித்து மூன்று உரைகளையும், ஊதியம் மற்றும் அகவிலைப்படி குறித்து மூன்று உரைகளையும், தொழிலாளர் நலனுக்காக வாதிடும் நான்கு உரைகளையும் அவர் வழங்கினார். 


அம்பேத்கரின் முக்கிய சாதனைகளில் ஒன்று, எட்டு மணி நேர வேலையை ஆதரித்தது.  இது அவரது பாரம்பரியத்தின் அடிப்படையை  மாற்றியது. இந்த மாற்றம் நவம்பர் 27, 1942-ஆம் ஆண்டு அன்று புது தில்லியில் நடந்த 7-வது இந்திய தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அங்கு அவர் மனிதாபிமான வேலை நிலைமைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

இவரது பதவிக் காலத்தில், 1934-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் (Factories Act) திருத்தப்பட்டது.  தண்ணீர் வழங்கல், துணி துவைக்கும் வசதிகள், தீ விபத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள் மற்றும் வேலை நேரங்களுக்கான விதிமுறைகள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிற சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

 

இந்தியாவின் காலநிலையைக் கருத்தில் கொண்டு, மற்ற நாடுகளை விட வேலை நேரம் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.


இந்தியச் சுரங்கச் சட்டம் (Indian Mines Act) மற்றும் சுரங்கப் மகப்பேறு நலச் சட்டம் (Mines Maternity Benefit Act) ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் தொழிலாளர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு நன்மைகளை மேம்படுத்தின. அறிஞர் வேலுசாமி மாடசாமி தனது கட்டுரையில், “டாக்டர். பி ஆர் அம்பேத்கர்: இந்திய தொழிலாளர் நலத்துறையில் முன்னோடி” (‘Pioneer in the Field of Indian Labour Welfare’) என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நல நிதிகளை நிறுவி சமூக காப்பீட்டை முன்னெடுத்ததற்காக குறிப்பிடுகிறார். 


தனியார் நிறுவனத்தால் இயங்கும் பொருளாதாரம் பற்றிய தனது விமர்சனத்தில், அம்பேத்கர் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார்: "இந்த சுதந்திரத்தால் யாருக்கு லாபம் ?" இந்த சுதந்திரம் பொதுவாக நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று அவர் வாதிட்டார். இது வாடகையை உயர்த்தவும், வேலை நேரத்தை நீட்டிக்கவும், ஊதியத்தை குறைக்கவும் அனுமதிக்கிறது.


பல தொழிலாளர்கள் தொடர்ந்து பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு பொருளாதாரத்தில், தொழிலாளர்கள் வேலை செய்வதையும், தொழில்கள் சீராக இயங்குவதையும் உறுதிப்படுத்த யாராவது விதிகளை அமைக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார். அரசு செய்யவில்லை என்றால், தனியார் முதலாளிகள் செய்வார்கள் என்றார்.


தற்போதைய தொழிலாளர் சட்டங்கள் 


தொழிலாளர் விவகாரங்கள் (labour matters) பொது பட்டியலின் (Concurrent List) கீழ் உள்ளன. இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள், தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான சட்டங்களை இயற்ற அனுமதிக்கிறது. புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, ஒன்றிய அரசு 40-க்கும் மேற்பட்ட மத்திய சட்டங்களையும் பல்வேறு தொழிலாளர் பிரச்சினைகளை உரையாற்றும் 100-க்கும் மேற்பட்ட மாநில சட்டங்களையும் அடையாளம் கண்டது. 


இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம், 2002 ( National Commission on Labour) இந்த சட்டங்களை நான்கு முக்கிய தொழிலாளர் குறியீடுகளாக ஒருங்கிணைப்பதற்கான சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது, அவை இன்னும் நடைமுறையில் இல்லை. ஊதியங்கள் குறியீடு (2019), சமூக பாதுகாப்பு குறியீடு (2020), தொழில்துறை உறவுகள் குறியீடு (2020) மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு (2020) போன்றவை ஆகும். 


இந்த புதிய தொழிலாளர் குறியீடுகள் தொழிலாளர் பாதுகாப்பு, நியாயமான ஊதியங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக, தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு முதலாளிகளுக்கான விரிவான உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை உருவாக்குகிறது.


  இந்தியாவின் தொடர்ச்சியான தொழில்துறை மாற்றத்திற்கு மத்தியில், அம்பேத்கரின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. "இந்திய தொழிலாளர் துன்பம், சோதனைகள் மற்றும் இன்னல்களை அனுபவிக்க வேண்டியதில்லை என்று விரும்பினால், இந்திய அரசியலமைப்பு ஒரு அரசியல் கருவியாக மட்டுமல்லாமல், பொருளாதாரமாகவும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்".


Original article:

Share: