தாஜ் ஹோட்டல் தாக்குதலின் போது ரத்தன் டாடாவின் உறுதியான நிலைப்பாடு

 கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். மேலும், இதில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 


மூத்த தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா புதன்கிழமை மாலை மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86 ஆகும். 


கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சால்ட் டு சாப்ட்வேர் குழுமத்தின் (salt to software group) தலைவராக இருந்த டாடா, புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். பத்ம விபூஷண் விருது பெற்ற டாடா திங்கள்கிழமை முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். 


1962-ஆம் ஆண்டில் நியூயார்க்கின் இத்தாக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் பி.எஸ் பட்டம் பெற்ற பிறகு டாடா குடும்ப நிறுவனத்தில் சேர்ந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு டாடா இண்டஸ்ட்ரீஸின் தலைவரான அவர், 1991-ஆம் ஆண்டில், அரை நூற்றாண்டுக்கும் மேலாக பொறுப்பில் இருந்த ஜே.ஆர்.டி டாடாவிடமிருந்து டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 


இந்திய பொருளாதாரம் திறக்கப்பட்டவுடன், 1868-ஆம் ஆண்டில் ஒரு சிறிய ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனமாகத் தொடங்கிய டாடா, உப்பு முதல் எஃகு, கார்கள் முதல் மென்பொருள், மின் உற்பத்தி நிலையங்கள் முதல் விமான நிறுவனங்கள் வரை செயல்பாடுகளைக் கொண்ட ஒரு உலகளாவிய அதிகார மையமாக மாற்றியது. 


2008-ஆம் ஆண்டில், 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக தெற்கு மும்பைக்குள் ஊடுருவி தாஜ் ஹோட்டல் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் உள்ளிட்ட நகரின் பல முக்கிய இடங்களில் தாக்குதல்களை நடத்தினர். 


பாகிஸ்தான் பயங்கரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba (LeT)) நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 


இந்த தாக்குதலுக்கு மத்தியில், 70 வயதான ரத்தன் டாடா மிகப்பெரிய உறுதியை வெளிப்படுத்தினார். புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலின் கொலாபா முனையில் அவர் நிற்பதைக் காண முடிந்தது. மேலும், பாதுகாப்புப் படையினர் தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 


டாடா குழுமத்தின் அடையாளமான தாஜ் ஹோட்டலில் 60 மணி நேர முற்றுகையில் கொல்லப்பட்ட 166 பேரில்  11 நபர்கள் ஹோட்டல் ஊழியர்களும் அடங்குவர். 


இந்த தாக்குதலுக்குப் பிறகு, ரத்தன் டாடா தாஜ் ஹோட்டலை மீண்டும் திறப்பதாக உறுதியளித்தார். மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களின் குடும்பங்களை கவனித்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார். 


பிபிசி தகவல்படி, கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்திருக்கக் கூடிய சம்பளத்தை அவர் வழங்கினார் என்று கூறியுள்ளனர். 


சில மாதங்களுக்குள், டாடா குழுமம் இந்த தாக்குதலின் போது மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்காக தாஜ் பொது சேவை நல அறக்கட்டளையையும் (Taj Public Service Welfare Trust (TPSWT)) உருவாக்கியது. டெக்கான் ஹெரால்ட் கருத்துப்படி, ரத்தன் டாடாவே பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று  கவனிக்கப்படுவதை உறுதி செய்தார். 


திட்டமிட்டு அழித்தல் 


2020-ஆம் ஆண்டில், வியாழன் அன்று 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நினைவு கூர்ந்த ரத்தன் டாடா, இன்று 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விரும்பத்தகாத அழிவை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார்.




Original article:

Share: