இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிப்ரவரியில் தீர்ப்பை ஒத்திவைத்தது.
அரசியலமைப்பின் 30-வது பிரிவின் கீழ் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (Aligarh Muslim University (AMU)) சிறுபான்மை அந்தஸ்து கோர முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பை வழங்கவுள்ளது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை பிப்ரவரியில் ஒத்திவைத்தது.
பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சையின் வரலாறு
பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான சட்ட மோதல்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
1967-ம் ஆண்டில், உச்சநீதிமன்றம் பல்கலைக்கழகத்தின் நிறுவனச் சட்டத்தில் இரண்டு திருத்தங்களைச் சவாலுக்கு உட்படுத்தியது. இது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை (AMU) நிறுவிய முஸ்லீம் சமூகத்தை சட்டப்பிரிவு 30-ன் கீழ் நிர்வகிக்கும் உரிமையை பறிக்கிறது என்று வாதிட்டது.
இந்தத் திருத்தங்களில் முதலாவது, 1951-ம் ஆண்டில், முஸ்லீம் அல்லாதவர்கள் பல்கலைக்கழக நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக இருக்க அனுமதித்தது. அந்த நேரத்தில், மிக உயர்ந்த நிர்வாகக் குழுவாக இருந்தது. மேலும் பல்கலைக்கழகத்தின் ரெக்டர் பிரபுவை (Lord Rector) தலைவராக மாற்றியது. இரண்டாவது, 1965-ம் ஆண்டில், AMU-ன் நிர்வாகக் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்தியது. இதன் பொருள் பல்கலைக்கழக நீதிமன்றம் இனி உயர்ந்த நிர்வாகக் குழுவாக இருக்காது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) முஸ்லீம் சிறுபான்மையினரால் நிறுவப்படவில்லை அல்லது நிர்வகிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது மாறாக, இது ஒன்றிய சட்டமன்றத்தின் (அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக சட்டம், 1920) மூலம் நடைமுறைக்கு வந்தது. எஸ் அஜீஸ் பாஷா vs இந்திய ஒன்றியம், 1967-ம் ஆண்டு நடந்த தீர்ப்பின் மீதான பின்னடைவை எதிர்கொண்ட அரசாங்கம், 1981-ம் ஆண்டில் AMU சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது. இது இந்தியாவில் முஸ்லிம்களின் கலாச்சார மற்றும் கல்வி முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக முஸ்லீம் சமூகத்தால் நிறுவப்பட்டது என்று கூறியது.
2005-ம் ஆண்டில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முதன்முறையாக முஸ்லீம்களுக்கு 50% இடஒதுக்கீட்டை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) வழங்கியது. அடுத்த ஆண்டு, அலகாபாத் உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக உத்தரவு மற்றும் 1981 திருத்தம் இரண்டையும் ரத்து செய்தது. அஜீஸ் பாஷா வழக்கின்படி AMU ஒரு சிறுபான்மை நிறுவனம் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2019-ம் ஆண்டில், இந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அஜீஸ் பாஷா வழக்கானது, இரத்து செய்யப்படுவாரா என்பதை வெள்ளிக்கிழமை தீர்ப்பு தீர்மானிக்கும். கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் சிறுபான்மையினருக்கு உரிமையை வழங்கும் பிரிவு 30-ல் பாதுகாக்கப்பட்ட AMU ஒரு சிறுபான்மை நிறுவனமா என்பதையும் இது தீர்மானிக்கும்.
சிறுபான்மை அந்தஸ்து என்றால் என்ன?
2006-ம் ஆண்டு அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 15(5) பிரிவின் கீழ், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் (SCs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (STs) இடங்களை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) சிறுபான்மையினரின் நிலை இன்னும் நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. 2006-ம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. எனவே, பல்கலைக்கழகத்தில் SC/ST ஒதுக்கீடுகள் இல்லை.
இந்த ஆண்டு, AMU ஒரு சிறுபான்மை நிறுவனமாக அறிவிக்கப்பட்டால். அது பட்டியலிடப்பட்ட வகுப்பினர்கள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்கள் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (OBC), அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) ஆகியோருக்கு வேலைகள் மற்றும் இடங்களில் இடஒதுக்கீடு இருக்காது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றியம் வாதிட்டது. இருப்பினும், இதில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு இருக்கும் என்வும், மேலும் 50% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறது.
மேலும், AMU-ன் "நிர்வாகக் கட்டமைப்பு" (administrative structure) தற்போதைய அமைப்பில் இருந்து மாறும். இது, நிர்வாகக் குழுவின் மேலாதிக்கத்தை வழங்குகிறது. இது, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவால் வழிநடத்தப்படுகிறது. மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இருந்தாலும், AMU அத்தகைய மற்ற நிறுவனங்களிலிருந்து தனித்தனியாக ஒரு சேர்க்கை நடைமுறையைக் கொண்டிருக்கும்.
AMU போன்ற ஒரு பெரிய தேசிய நிறுவனம் அதன் மதச்சார்பற்ற தோற்றத்தைத் தக்கவைத்து, தேசத்தின் பெரிய நலனுக்கு முதலில் சேவை செய்ய வேண்டும் என்றும் ஒன்றியம் வாதிட்டது.
AMU சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) சிறுபான்மை அந்தஸ்து "பொது நலனுக்கு முரணாக இருக்கும், மற்ற பின்தங்கிய பிரிவினர்களுக்கு இடங்களை ஒதுக்குவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கும்" என்று ஒன்றிய அரசு கருதுவது "தவறானது" என்று கூறியது. இருப்பினும், சிறுபான்மையினரின் சிறப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு விதிக்கு இந்தக் கருத்து முரண்படுகிறது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு (AMU) இடஒதுக்கீடு பொருந்தாது என்பது குறித்து, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், AMU பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மறுபரிசீலனைக் குறிப்பில், "பிரிவு 30 என்பது சமூகங்களின் உரிமைகளை அங்கீகரிப்பதாகும், அதுவும் சிறப்புப் பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று கூறினார். எனவே, பிரிவு 15(5)ன் கீழ் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு வழங்குவது சமத்துவத்தை மீறும் செயல் அல்ல என்று அவர் வலியுறுத்தினார். மாறாக, மதம், சாதி அல்லது வர்க்கம் சார்ந்த பல்வேறு சமூகக் குழுக்களின் தேவைகளை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.
செயின்ட் ஸ்டீபனின் குறிப்பு
1992-ம் ஆண்டில், உச்சநீதிமன்றம் (SC) தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியைக் குறிப்பிட்டது. இதில் சிறுபான்மை அந்தஸ்து, கல்லூரியை நிர்வகிக்கும் உரிமை மற்றும் அதன் சொந்த சேர்க்கை செயல்முறையை அமைக்கும் திறன் (செயின்ட் ஸ்டீபன் கல்லூரி vs டெல்லி பல்கலைக்கழகம்) ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. கல்லூரியில் 50% இடங்கள் கிறிஸ்தவ மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி "டெல்லியில் உள்ள கேம்பிரிட்ஜ் அறக்கட்டளை, நற்செய்தி பிரச்சாரத்திற்கான சங்கத்துடன் (Society for the Propagation of the Gospel (SPG)) இணைந்து நிறுவப்பட்டது" என்று ஒன்றிய அரசு வாதிட்டது. இதில் அரசின் தலையீடு இல்லை என்றும் கூறியது. இதற்கு மாறாக, AMU ஆரம்பத்திலிருந்தே அரசாங்க மானியங்களைப் பெற்றுள்ளது.
மேலும், செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வளாகம் SPG-ல் வாடகைக்கு எடுக்கப்பட்டு பின்னர் கட்டப்பட்டது. அதே நேரத்தில், AMU ஆரம்பத்தில் இருந்தே அரசாங்க மானியங்களைப் பெறுகிறது.
எவ்வாறாயினும், செயின்ட் ஸ்டீபன்ஸில், உச்ச நீதிமன்றம் "நிர்வாகம் செய்யும் உரிமை" ஒரு தொடர்ச்சியான உரிமையாகக் கருதப்பட வேண்டும் என்று சிபல் வாதிட்டார். இந்த உரிமை பல்கலைக்கழகத்தை நிறுவிய சிறுபான்மை சமூகத்திற்கே உரியது. சிறுபான்மை கல்வி நிறுவனத்தை (minority educational institution (MEI)) அடையாளம் காண்பதற்கான சோதனையாக அல்ல. எனவே, ஒரு சிறுபான்மை குழு ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவியவுடன், அந்த நிறுவனம் பிரிவு-30-ன் கீழ் "நிர்வகிப்பதற்கான உரிமை" (right to administer) மூலம் மூடப்பட்டிருக்கும்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் சமர்பித்ததாவது, “...அலியா பல்கலைக்கழகம் (கொல்கத்தா) போன்ற பல்கலைக்கழகங்களும், செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி போன்ற கல்லூரிகளும் அரசாங்கத்தால் முழு நிதியுதவியுடன் செயல்படுகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார். இது ஒரு நிறுவனம், முழு நிதியுதவி அளித்தாலும், அதன் சிறுபான்மை அந்தஸ்தை இழக்காது என்பதை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்பதை இது காட்டுகிறது.