முதுகலைப் பட்டதாரிகளை பிரதம மந்திரியின் பயிற்சித் திட்டத்தில் (Prime Minister’s Internship Scheme) இருந்து விலக்குவது குறுகிய நோக்கமுடைய முடிவாகும்.
21 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இப்போது பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்திற்கு (Prime Minister’s Internship Scheme (PMIS)) விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு அனைவருக்கும் நம்பிக்கையளிக்கிறது. இந்தத் திட்டம் இளம் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதையும், இந்திய இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், முதுகலை பட்டம் பெற்றவர்களைத் தவிர்த்து இருப்பது கவலைக்குரியதாக மாறியுள்ளது. முதுகலை மாணவர்களையும் சேர்த்து இந்தத் திட்டத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றியிருக்கலாம். அவர்களின் சிறப்பு அறிவு பயிற்சிகுப் பிறகு இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கும். பதிவு வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, 737 மாவட்டங்கள் மற்றும் 24 துறைகளில் 80,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை இந்த பயிற்சித் திட்டம் வழங்குகிறது.
குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய தொழில்மயமான மாநிலங்கள் பட்டியலிடப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளில் 56% பங்கைக் கொண்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் நேரடி பயன் பரிமாற்றம் மூலம் அரசாங்கத்திடம் இருந்து மாதாந்திர உதவித்தொகையாக ₹4,500 பெறுவார்கள். பயிற்சி வழங்கும் நிறுவனம் அதன் தனியார் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மாதம் ₹500 செலுத்தும். கூடுதலாக, பயிற்சியாளர்களின் கூடுதல் செலவுகளை ஈடுகட்ட அரசாங்கம் ஒரு முறை மானியமாக ஆண்டுக்கு ₹6,000 வழங்கும்.
முதுகலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
2021-22-ஆம் ஆண்டு உயர்கல்விக்கான அகில இந்திய ஆய்வு (All-India Survey for Higher Education (AISHE)) அறிக்கை முதுகலை சேர்க்கையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டுகிறது. 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதுகலை படிப்புகளை மேற்கொள்கின்றனர். இது இந்தியாவின் மொத்த உயர்கல்வி சேர்க்கையில் 10.81% ஆகும். 2019-20 முதல், முதுகலை மாணவர் சேர்க்கை 26% அதிகரித்துள்ளது. சிறந்த முதுகலை பிரிவுகள்:
- அறிவியல் (18.6%)
- பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (8.61%)
- மேலாண்மை மற்றும் வணிகம் (22.7%)
- மருத்துவ அறிவியல் (11.08%)
- சமூக அறிவியல் (5.30%)
- மற்றவை (23.08%)
அறிவியல் மாணவர் சேர்க்கையில் ஆண் மாணவர்களின் 38.8% உடன் ஒப்பிடும்போது, 61.2% பெண் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பல முதுகலை மாணவர்கள் தங்கள் முதுகலை படிப்பை முடித்த பிறகு முனைவர் ph.D திட்டங்களைத் தொடரத் தேர்வு செய்கிறார்கள். ph.D. படிப்பில் மொத்தம் 2,12,474 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். திட்டங்களுக்கு மத்தியில் Ph.D. மாணவர்கள், 24.8% பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திலும், 21.3% அறிவியலிலும் சேர்ந்துள்ளனர்.
பிரதம மந்திரி பயிற்சித் திட்டம் ஐந்தாண்டுகளில் முதல் 500 நிறுவனங்களில் உள்ள 1 கோடி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், முதுகலை மாணவர்களைத் தவிர்த்து, நாட்டிற்கு அறிவுசார்ந்த இழப்பை ஏற்படுத்தலாம். வேலை வாய்ப்பு பெற முதுகலை மாணவர்களை இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழலை அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தும். நிஜ உலக பிரச்சனைகளை வெளிப்படுத்தாமல், முதுகலை மாணவர்களின் மேம்பட்ட அறிவு பயன்படுத்தப்படாமல் இருக்கும்.
இது பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்தின் கீழ் உள்ள எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, வாகன தொழில்நுட்பம், மின்னணுவியல், வங்கி, நிதி, பயணம் மற்றும் விருந்தோம்பல் போன்ற முக்கிய துறைகளை பாதிக்கும். இதன் விளைவாக, இது அவர்களின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புத் திறனைத் தடுக்கும், அறிவு சார்ந்த பொருளாதாரம் மற்றும் உலகளாவிய தலைமைக்கு இந்தியா மாறுவதை மெதுவாக்கும்.
இந்த ஆண்டு ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஓராண்டு பயிற்சித் திட்டம், மாணவர்களின் திறன் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், புதிய யோசனைகளுக்கு வெளிப்படுத்தும் முதுகலை மாணவர்களைத் தவிர்ப்பதால், அவர்களை அறிவு சார்ந்த பலன் பெறுவதை தடுக்கிறது. இந்த பயிற்சி அனுபவமின்மை முதுகலை பபட்டதாரிகளுக்கு பல்வேறு வழிகளில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தொழில் தேக்கநிலை ஏற்படுகிறது. அவர்கள் தொடர்பில்லாத தொழில்களுக்கு மாற சூழல் உருவாகுகிறது. முரண்பாடாக, ஆன்லைன் அல்லது தொலைதூரக் கற்றல் படிப்புகளில் வேலையில்லாத விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தேசிய விளைவுகள்
ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள பல திறமையான முதுகலை மாணவர்கள் ஒன்றிய மற்றும் மாநில நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப் படிப்புகளில் சேருகிறார்கள். உதாரணமாக, வேதியியல், இயற்பியல் மற்றும் மின் பொறியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், குறைக்கடத்தி துறையில் (semiconductor industry) பிரதம மந்திரி பயிற்சித் திட்டம் மூலம் பயிற்சி பெற்றால், அது எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரிதும் பயனளிக்கும். இந்த மாணவர்கள் இளங்கலை பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டலாம்.
அறிவு-பகிர்வு மற்றும் சக கற்றலை மேம்படுத்தலாம். பயிற்சிகுப் பிறகு சிலர் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இது தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் தொடக்க நிலை சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தும். எனவே, முதுகலை பட்டம் வைத்திருப்பவர்களைத் தவிர்த்தது இந்தியாவின் உலகளாவிய போட்டித்தன்மையை பலவீனப்படுத்தலாம் மற்றும் ஒரு அறிவு மையமாகவும் உலகளாவிய தொழில்துறையின் தலைவராக மாறுவதற்கான இலக்கைத் தடுக்கலாம்.
முக்கியமான திட்டங்களுக்கு பெரும்பாலும் நிபுணர் அறிவு இல்லை. இது இந்தியாவின் வளர்ச்சியைக் குறைக்கிறது மற்றும் 2047-க்குள் விக்சித் பாரத் ஆக வேண்டும் என்ற அதன் நோக்கத்தை பாதிக்கிறது. முதுகலை பட்டதாரி மாணவர்களைத் தவிர்த்து விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். இது ஒட்டுமொத்தமாக திட்டத்தை குறைந்த செயல்திறன் கொண்டதாக மாற்றலாம்.
சரிசெய்ய வேண்டிய திருத்தம்
துல்லியமான உற்பத்தி, செயல்முறைகள், குறைக்கடத்திகள், மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற துறைகளில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களையும் சேர்த்தால், திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் பல்வேறு திறன்கள், அனுபவம் மற்றும் நுண்ணறிவுகளைக் கொண்டு வருவார்கள். இது பயிற்சியாளர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு பயனளிக்கும். இது முதுகலை மாணவர்கள் இந்த நிறுவனங்களில் சுமூகமாக மாறவும், குறிப்பாக பெண்களிடையே தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு "இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை (India Employment Report) 2024"-ல் குறிப்பிட்டுள்ளபடி, முதுகலை பட்டம் பெற்றவர்களை பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தில் சேர்ப்பது இந்த சிக்கலை தீர்க்க உதவும் என்று பரிந்துரைக்கிறது.
பிரதம மந்திரி பயிற்சி திட்டம் என்பது ₹800 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டமாகும். முதுகலை பட்டதாரிகளையும் சேர்த்து இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். குறிப்பிட்ட துறைகளில் முதுகலை பட்டதாரிகளை சேர்க்க அரசு பரிசீலிக்க வேண்டும். அவர்கள் திட்டத்தை மதிப்பாய்வு செய்யும் போது, அது முழுமையான கொள்கைத் திட்டமாக மாறுவதற்கு முன் இந்த மாற்றம் நிகழ வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களைச் சேர்ப்பது அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (Anusandhan National Research Foundation (ANRF)) இலக்குகளை ஆதரிக்கும். இது இந்தியா முழுவதும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.
சமீபத்திய 2022-23-ஆம் ஆண்டு உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு தரவு, முதுகலை பட்டம் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது. இந்த வளர்ச்சியைப் பார்க்கும்போது, கொள்கை வகுப்பாளர்கள் பிரதம மந்திரி பயிற்சி திட்டத்தை இன்னும் திறந்ததாகவும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் வேண்டும். இத்திட்டத்தில் முதுகலை மாணவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்க வேண்டும். இது அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தவும், இந்தியா தனது இலக்குகளை அடையவும் உதவும்.
மிலிந்த் குமார் சர்மா, ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள MBM பல்கலைக்கழகத்தின் உற்பத்தி மற்றும் தொழில்துறை பொறியியல் துறையில் ஆசிரியராக உள்ளார்.