விலங்குகளின் உடல்நலனைக் கண்காணிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது : அதன் நோக்கங்கள் மற்றும் நிதி -ஹரிகிஷன் சர்மா

 தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் பதிலளிப்பிற்கான இந்தியாவில் விலங்குகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்' முயற்சியை ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கினார். அவை என்ன?


எதிர்காலத்தில் தொற்றுநோய்களைத் தடுக்க விலங்குகளின் ஆரோக்கியத்தை சிறப்பாகக் கண்காணிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது எதிர்காலத்தில் தொற்றுநோய்களைத் தடுப்பதே முக்கியக் குறிகோள் ஆகும்.


இந்தத் திட்டம், ‘இந்தியாவில் தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் எதிர்கொள்வதற்காக விலங்குகளின் ஆரோக்கியப் பாதுகாப்பை வலுப்படுத்துதலை’ ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் லாலன் சிங் என அழைக்கப்படும் ராஜீவ் ரஞ்சன் சிங் அக்டோபர் 25 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். 


திட்டம் என்ன?


விலங்குகளின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், கண்டறியவும், எதிர்கொள்ளவும்" நாட்டின் திறனை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


2022-ம் ஆண்டில் இந்தோனேசிய அதிபரின் கீழ் G20 நாடுகளால் உருவாக்கப்பட்ட தொற்றுநோய் நிதியத்தால் இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.


நிதியின் அடிப்படை நோக்கம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு எதிர்கால தொற்றுநோய்களை அடையாளம் காணவும், புகாரளிக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் அவர்களின் திறனை வலுப்படுத்தவும் உதவுவதாகும்.


அதன் முதல் முதலீட்டுச் சுற்றில், நிதி $2 பில்லியன்களைத் திரட்டியது. நிதியுதவிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஆதவுக்காக அழைக்கப்பட்டன. மேலும், 350 விருப்ப வெளிப்பாடுகள் (expressions of interest (EoI)) மற்றும் 180 முழு ஆதரவுகள் முதல் அழைப்பில் பெறப்பட்டன. இவற்றில், 37 நாடுகளில் 19 நாடுகளிலிருந்து மானியங்களுக்கு நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து, ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்புத் துறையின் முன்மொழிவு $25 மில்லியன் நிதியைப் பெறுவதற்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றது.


திட்டத்திற்கான காலக்கெடு என்ன?


ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), உலக வங்கி மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Asian Development Bank (ADB)) ஆகிய மூன்று செயல்படுத்தும் முகமைகளின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படும். இது ஆகஸ்ட் 2026-ம் ஆண்டிற்க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


என்ன தலையீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன?


ஒரு கருத்துக் குறிப்பில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கூறியதாவது, "நோய் கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல், ஆய்வக வலையமைப்பை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல், இயங்கக்கூடிய தரவு அமைப்புகளை மேம்படுத்துதல், தரவு பகுப்பாய்வுக்கான திறனை உருவாக்குதல் ஆகியவை திட்டத்தின் கீழ் முக்கிய தலையீடுகள் ஆகும். மேலும், எல்லை தாண்டிய விலங்கு நோய்களுக்கான சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மூலம் பிராந்திய ஒத்துழைப்பில் இந்தியாவின் பங்கை மேம்படுத்துதல்.


வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளில் இருந்து வெளிவரும் நோய்க்கிருமிகளின் அபாயத்தைக் குறைப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நோய்க்கிருமிகள் மனிதர்களுக்கு பரவக்கூடும். இது பாதிக்கப்படக்கூடிய மக்களின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது என்று குறிப்பு கூறுகிறது.


அது ஏன் தேவைப்படுகிறது?


உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த சில ஆண்டுகளில் ஆறு பொது சுகாதார அவசரநிலைகளை சர்வதேச கவலையாக அறிவித்தது. இவற்றில் ஐந்து ஜூனோடிக் (zoonotic), அதாவது அவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகின்றன. மிகச் சமீபத்திய உதாரணம் கோவிட்-19, இது 2020-21ல் உலகம் முழுவதையும் பாதித்தது.


மனிதர்களைப் பாதிக்கும் தொற்று நோய்களில் மூன்றில் இரண்டு பங்கு விலங்குகளில் இருந்து வருகிறது. எனவே, எதிர்கால தொற்றுநோய்க்கான ஒரு பகுதியாக விலங்கு சுகாதார பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அவசியம். 536 மில்லியன் கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளைக் கொண்ட இந்தியா, தொற்று வெடிப்புகளைத் தடுக்கவும் நிர்வகிக்கவும் நடவடிக்கைகள் தேவை.


திட்டத்தின் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் என்ன?


அமைச்சகத்தின் கூற்றுப்படி, திட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் ஐந்து முக்கிய குறிப்புகள் பின்வருமாறு. அவை, ஆய்வக அமைப்புகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தி வசதிகளை மேம்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், மனித வளங்களின் திறன் மேம்பாடு, தரவு அமைப்புகள், பகுப்பாய்வு, இடர் பகுப்பாய்வு மற்றும் இடர் தொடர்புகளை வலுப்படுத்துதல், மற்றும் தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் நிறுவன திறன் இடைவெளிகளை நிவர்த்தி செய்தல் ஆகியவை ஆகும்.




Original article:

Share: