பொது விநியோகத் திட்டம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (2013) -ரோஷினி யாதவ்

 முக்கிய அம்சங்கள்


1. பொது விநியோக திட்டத்தில் (Public Distribution System (PDS)) பொருட்களின் விலையை எப்படி மாற்றுவது என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. அவற்றின் விலையை நேர்மறை மதிப்பிலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டுமா? அல்லது நடந்துகொண்டிருக்கும் தொடரில் விலைகளை பூஜ்ஜியத்திலிருந்து நேர்மறை மதிப்புக்கு அதிகரிக்க வேண்டுமா? என்பதுடன், இலவச PDS பொருட்களை நுகர்வோர் விலைக் குறியீட்டில் (Consumer Price Index (CPI)) சேர்க்க வேண்டுமா? என்பது மற்றொரு முக்கியமான கேள்வியாக உள்ளது.


2. இதற்கு தீர்வு காண, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) ஒரு விவாதக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. பொருட்களின் எடைகள் மற்றும் தொகுப்புகளை திருத்துவதன் மூலம் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையை மேம்படுத்துவதில் MoSPI செயல்படுகிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) தொகுப்பதற்கான வழிமுறையை மேம்படுத்தவும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.


3. CPI தொகுப்புடன் தொடர்புடைய PDS பொருட்களை இலவசமாக விநியோகிப்பதில் அமைச்சகம் இரண்டு சவால்களை எடுத்துரைத்தது. அவை,

(1) இடைப்பட்ட தொடர் சரிசெய்தல் : நடந்துகொண்டிருக்கும் தொடரின் போது PDS பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றத்தை நாம் எவ்வாறு கையாள வேண்டும்? நேர்மறை மதிப்பிலிருந்து பூஜ்ஜியத்திற்கு விலை குறையும் அல்லது பூஜ்ஜியத்திலிருந்து நேர்மறை மதிப்புக்கு அதிகரிக்கும் நிகழ்வுகளும் இதில் அடங்கும்.

(2) தொடரின் தொடக்கத்தில் CPI கூடையில் சேர்த்தல்: இலவச PDS பொருட்கள் தொடரின் தொடக்கத்தில் இருந்து CPI கூடையில் சேர்க்கப்பட வேண்டுமா?


4. தற்போதைய தொடரில், இந்த பொருட்களின் எடைகள் சரிசெய்யப்படுகின்றன. வறுமைக் கோட்டிற்கு மேல் (above poverty line (APL)), வறுமைக் கோட்டிற்கு கீழே (below poverty line (BPL)) மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (Antyodaya Anna Yojana (AAY)) குடும்ப அட்டை பயனாளிகள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இலவச விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அதே பிரிவில் (முக்கிய தானியங்கள் மற்றும் தயாரிப்புகள் போன்றவை) மற்ற பொருட்களுக்கு விகிதாசாரமாக அவை விநியோகிக்கப்படுகின்றன.


5. எவ்வாறாயினும், CPI தொகுப்பில் இலவச விநியோகத்தை சேர்க்க பயன்படுத்தப்படும் இந்த அணுகுமுறை குறித்த சிக்கல்கள் எழுப்பப்பட்டன. ஏனெனில், இந்த முறை பணவீக்கத்தில் இலவச உணவு தானிய விநியோகத்தின் தாக்கத்தை துல்லியமாக குறிப்பிடவில்லை. 


6. அமைச்சகம் தற்போது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படை ஆண்டைத் திருத்துகிறது.  இந்த அடிப்படை ஆண்டு 2012-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டுக்கு மாற்றப்படும். எடைகள் மற்றும் பொருள்களின் தொகுப்பு 2022-23 ஆண்டின் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பின் (Household Consumption Expenditure Survey (HCES)) அடிப்படையில் இருக்கும்.


உங்களுக்கு தெரியுமா ?


1. பொது விநியோகத் திட்டம் (PDS) உணவு தானியங்களை நியாயமான விலையில் விநியோகிப்பதன் மூலம் உணவுப் பற்றாக்குறையை நிர்வகிக்கும் வழிமுறையாக உருவானது. இது காலப்போக்கில் அரசாங்கத்தின் உணவு-பொருளாதார மேலாண்மை உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக உருவாகியுள்ளது.  


2. பொது விநியோகத் திட்டம் (PDS) என்பது இயற்கையில் ஒரு துணை அடிப்படையிலானது. மேலும், இது ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு குழுவின் எந்தவொரு பொருளுக்கும் அதன் கீழ் வழங்கப்படும் எந்தவொரு பொருளின் முழுத் தேவையையும் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்படவில்லை. 


3. PDS மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களால் கூட்டாக நடத்தப்படுகிறது. ஒன்றிய அரசு, இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India (FCI)) மூலம், உணவு தானியங்களை கையகப்படுத்துதல், சேமித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் மாநில அரசுகளுக்கு மொத்தமாக ஒதுக்கீடு செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளது.  


4. மாநிலத்திற்குள் ஒதுக்கீடு செய்தல், தகுதியான குடும்பங்களை அடையாளம் காணுதல், குடும்ப அட்டைகளை வழங்குதல் (Ration Cards) மற்றும் நியாய விலைக் கடைகளின் (Fair Price Shops (FPS)) செயல்பாட்டை மேற்பார்வை செய்தல் ஆகியவற்றிற்கான செயல்பாட்டு பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன. 


பொது விநியோகத் திட்டம் (PDS) திறனற்றது மற்றும் அதன் செயல்பாடுகளுக்கான செல்வு உயர்ந்தவை. 


  • கொள்முதல் / போக்குவரத்து விகிதம் மிக அதிகமாக உள்ளது.  இது 'தேவையில்லாத'  செயல்பாடுகளை குறிக்கிறது. 


  • சேமிப்புக்கான இழப்புகள் மிகவும் கணிசமானவை. 


  • நுகர்வு மற்றும் இயக்கம் முறைகளில் நம்பகமான மற்றும் புதுப்பித்த தரவு எதுவும் இல்லை. மிகவும் பின்தங்கிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் திட்டமிடுபவர்களுக்கு இது எப்போதும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.


  • FCI, ஊழல், கசிவுகள் மற்றும் தரச் சிக்கல்கள் ஆகியவற்றுடன் சேமிப்புத் திறன் இல்லாமை மற்ற சிக்கல்களில் அடங்கும்.





Original article:

Share: