அரசியல் தேவைக்காக பெரிய திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது.
பல்வேறு எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருந்த போதிலும், கென்-பெட்வா (Ken-Betwa) நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 44,605 கோடி ரூபாய் செலவில் கென் நதிப் படுகையில் இருந்து "அதிகப்படியான" நீரை பெட்வா நதிப் படுகைக்கு கொண்டு சென்று பண்ணைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அதன் சுற்றுச்சூழல் அனுமதியை மறுபரிசீலனை செய்யும் போது, ஒன்றிய அமைச்சரவை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. கணிசமான முதலீடுகளைச் செய்த பிறகு, சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் செயல்களை மன்னிக்கும் அரசின் போக்குக்கு பொதுவானதாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் விமர்சன கருத்துக்களை அரசாங்கம் புறக்கணித்தது மற்றும் முறையான நடைமுறைகளைத் தவிர்த்தது. கடுமையான சட்டங்கள் குறிப்பிட்ட உணர்திறன் பகுதிகளில் நீர்மின் திட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றன.
இருப்பினும், பன்னா புலிகள் காப்பகத்திற்குள் கட்டப்படும் தௌதான் அணையை முறையாக ஆய்வு செய்வதற்கான அறிகுறியே இல்லை. இத்திட்டம் லட்சக்கணக்கான மரங்களை அழித்து, பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். சர்வதேச கங்கைப் படுகையின் (international Ganga basin) ஒரு பகுதியாக இருப்பதால், அது உணர்திறன் வாய்ந்தது என்று கூறி, நீரியல் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள அரசாங்கம் மறுத்துவிட்டது.
ஒரு நதி இணைப்பு வயலுக்கும் குடிநீருக்கும் தண்ணீரை வழங்கும். ஆனால், அது எவ்வளவு காலம் நீடிக்கும்? கென் மற்றும் பெட்வா படுகைகள் வெள்ளம் மற்றும் வறட்சியை ஒன்றாகச் சந்திக்கின்றன. துணைக்கண்டத்தின் மழைப்பொழிவு மற்றும் வண்டல் முறைகள் மாற்றப்பட உள்ளன. மேலும், சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிப்பதன் மூலமும் இயற்கை சேமிப்பை மேம்படுத்துவதன் மூலமும் பெட்வா படுகையை குறைவான செலவில் நீரை சேகரிக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் வலியுறுத்தியுள்ளன. கென் படுகையில் அதிகப்படியான நீர் இருப்பதாகவும், பெட்வா படுகையில் மிகக் குறைவான நீர் இருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது. இது தவறானது. பெட்வா பள்ளத்தாக்கு நீர் பற்றாக்குறையாக உள்ளது.
ஏனெனில், அது பாசன வசதியுள்ள விளைநிலங்களை அதிக அளவில் கொண்டுள்ளது. கென் படுகையில் தண்ணீர் தேவை அதிகரித்தால், இரு பகுதிகளும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் மாநிலத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டதால், புந்தேல்கண்டில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு உத்தியே இந்தத் திட்டம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நீரோட்டத்திற்கு எதிராக உள்ள அடைப்புகளின் காரணமாக கீழ் பெட்வாவில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு நீர் வழங்கலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கலாம். சுற்றுச்சூழல் தேவைகளை விட அரசியல் நோக்கங்களில் மட்டுமே இந்த திட்டம் அதிக கவனம் செலுத்துகிறது. அரசாங்கம் இதில் அதிக முதலீடு செய்வதால், பிரச்சனைகள் ஏற்பட்டால் திட்டத்தை மாற்றுவது அல்லது நிறுத்துவது கடினமாகிவிடும். சிக்கல்கள் ஏற்படும் போது, பர்பதி-காலிசிந்த்-சம்பல் இணைப்பு (Parbati-Kalisindh-Chambal link) போன்ற பிற திட்டங்களுடன் அவற்றை சரிசெய்வதற்கான பொறுப்பும் மற்றும் அதன் செலவும் மக்கள் மீது விழும்.