மீன்பிடி விரிவாக்க சேவைகளை வலுப்படுத்துவது ஏன் முக்கியமானது?

 மத்ஸ்ய சேவா கேந்திரங்கள் மீன் பண்ணையாளர்களுக்கு என்ன ஆதரவை வழங்குகின்றன? 


இந்தியாவில் பல்வேறு மீன்பிடி வளங்கள் உள்ளன. அவை சுமார் மூன்று கோடி மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களுக்கு  வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. 2013-14 ஆண்டு முதல், நாட்டின் மீன் உற்பத்தி 83% அதிகரித்துள்ளது. 2022-23 ஆண்டில், மீன் உற்பத்தி 175 லட்சம் டன்களை எட்டியது. இதில் 75% உள்நாட்டு மீன் உற்பத்தியிலிருந்து வருகிறது.  இதன் விளைவாக, உலகில் மீன் மற்றும் மீன் வளர்ப்பில் இந்தியா இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. இந்த சூழலில், உள்ளூர் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு சேவைகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது.


  இந்த சேவைகள் மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களுக்கு  கோரிக்கை அடிப்படையிலான உதவியை வழங்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.  மேம்படுத்தப்பட்ட உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சி, நீரின் தரம், நோய்கள் மற்றும் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றிய வழிகாட்டுதல் போன்றவை இதில் அடங்கும். விதை உற்பத்தியாளர்கள் மற்றும் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் இது தீர்வு காண வேண்டும். இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமான வணிக மாதிரியாக மாறும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். 


மத்ஸ்ய சேவா கேந்திரங்களின் பங்கு என்ன? 


பிரதம மந்திரி மத்ஸ்ய சபதா யோஜனா (Pradhan Mantri Matsya Samapada Yojana) திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிபுணர்களால் பலவிதமான விரிவாக்க சேவைகளை வழங்குவதற்கான ஒரே இடத்தில் தீர்வாக “மத்ஸ்ய சேவா கேந்திரங்கள்” (Matsya Seva Kendras’ (MSK)) கருதப்படுகின்றன. 


குறிப்பாக, பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்காக இந்த மையங்களை அமைக்க அரசாங்கம் 60% வரை உதவி வழங்குகிறது. இதுபோன்ற 102 கேந்திரங்களை நிறுவ மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கேரளாவின் திருச்சூரில் உள்ள மத்ஸ்ய சேவா கேந்திரங்கள் நீர், மண் மற்றும் நுண்ணுயிரிகளை நோய்களுக்கு சோதிக்கும் ஆய்வகத்தைக் கொண்டுள்ளது. 


மகாராஷ்டிராவில் நாசிக் மற்றும் சாங்லி மாவட்டங்களில் உள்ள மத்ஸ்ய சேவா கேந்திரங்கள், தேவையான தொழில்நுட்பத்துடன், பல்வேறு விதை மற்றும் தீவன உள்ளீடுகளில் மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களுக்கு  பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. 


தொடக்க நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், மீன் பண்ணை குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள மத்ஸ்ய சேவா கேந்திரங்களை இந்திய அரசு ஊக்குவிக்கிறது. இந்த நடைமுறைகளில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கருத்தில் கொண்டு, உள்நாட்டு மற்றும் கடல் மீன்வளத்தை மீட்டெடுக்கும் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் இதில் அடங்கும்.

 

சாகர் மித்ராக்கள் (Sagar Mitras) மீனவர்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்கிறார்கள்? 


“சாகர் மித்ராஸ்” (“Sagar Mitras”) என்ற புதுமையான முயற்சியை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இந்த நபர்கள் அரசாங்கத்திற்கும் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கடல் சார்ந்த மீனவர்களுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்படுகிறார்கள். அவர்கள் தினசரி கடல் பிடிப்புகள், விலை மாற்றங்கள் மற்றும் மீன் இறங்கும் மையங்கள் மற்றும் துறைமுகங்களில் சந்தைப்படுத்தல் தேவைகள் பற்றிய தரவுகளை சேகரிக்கின்றனர். அவர்கள் உள்ளூர் விதிமுறைகள் பற்றிய தகவல்களை மீனவர்களுக்கு வழங்குகிறார்கள். 


வானிலை முன்னறிவிப்புகள், இயற்கை பேரழிவுகள் பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுதல் பற்றிய குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் கடலில் சாத்தியமான மீன்பிடி மண்டலங்கள் குறித்த தகவல்களை மீனவர்களுக்கு தெரிவிக்கின்றனர். 


விரிவாக்க சேவைகளை எவ்வாறு மேம்படுத்த முடியும்? 


மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பில் விரிவாக்கம் மற்றும் ஆலோசனை சேவைகளை வலுப்படுத்த, இரண்டு படிகள் தேவை. முதலாவதாக, இந்த முன்முயற்சிகள் தற்போதுள்ள 700க்கும் மேற்பட்ட கிருஷி விக்யான் கேந்திராக்களின் (Krishi Vigyan Kendras) அமைப்புடன் இணைக்கப்பட வேண்டும்.  இது இந்திய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (Indian Council of Agricultural Research  ICAR)) ஆதரவுடன் மற்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விரிவாக்க சேவைகளுடன் இணைக்கப்பட வேண்டும். 


இரண்டாவதாக, டிஜிட்டல் விழிப்புணர்வை (digital outreach) ஊக்குவிப்பது முக்கியம். தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் “நீர் அங்காடி” (Aqua Bazaar) என்ற மெய்நிகர் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் விதை உற்பத்தி குறித்து மீனவர்களுக்கு அடிப்படைக் கருத்துகளை விளக்கவும், நடைமுறை விளக்கங்களை வழங்கவும் இது வல்லுநர்களுக்கு உதவுகிறது. 


இந்நிலையில், இந்திய அரசின் உலக வங்கியின் ஆதரவுத் திட்டம் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

நாட்டில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்பு துறை வேலை அடிப்படையிலான டிஜிட்டல் அடையாளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது அவர்களின் விரிவாக்க சேவைகள், திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளை மேம்படுத்த உதவும்.


அபிலக்ஷ் லிகி, இந்திய அரசின் மீன்வளத் துறையின் (Department of Fisheries) செயலாளர்.




Original article:

Share: