மாதிரி நடத்தை விதிகள் உடன் தொடர்புடைய சிக்கல்கள் என்னென்ன? -ரோஷ்னி யாதவ்

 • தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகள்  (Model Code of Conduct (MCC)) என்பது தேர்தல்களுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை ஒழுங்குபடுத்துவதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக விதிகள் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது அவை: 


-உரைகள்

- வாக்குப்பதிவு நாள் நடவடிக்கைகள்

- வாக்குச் சாவடிகள்

- அலுவல்துறைகள்

- தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கம்

- ஊர்வலங்கள்

- பொது நடத்தைகள்


போன்றவை தேர்தல் செயல்முறை முழுவதும் நேர்மையாக இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.


• பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (Press Information Bureau) கூற்றுப்படி, 1960-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் MCC இன் பதிப்பு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1962-ஆம் ஆண்டு  தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளாலும் பின்பற்றப்பட்டது மற்றும் அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களிலும் பின்பற்றப்பட்டது.


• MCC தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முடிவு வெளியாகும் தேதி வரை அமலில் இருக்கும். பொது நடத்தை, கூட்டங்கள், ஊர்வலங்கள், வாக்குப்பதிவு நாள், வாக்குச் சாவடிகள், பார்வையாளர்கள், அதிகாரத்தில் உள்ள கட்சி மற்றும் தேர்தல் அறிக்கைகள் ஆகியவற்றைக் கையாளும் எட்டு விதிகளை MCC கொண்டுள்ளது.




Original article:

Share: