இந்திய காடுகளின் நிலை அறிக்கை (2023) -குஷ்பு குமாரி

 சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய வன கணக்கெடுப்பின் அறிக்கையானது, மரங்களின் பரப்பளவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது.  


இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் 18-வது வனத்துறை அறிக்கையை (ISFR-2023) சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் டிசம்பர் 21 அன்று டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் (Forest Research Institute) வெளியிட்டார். இந்திய வனப்பகுதிகளின் மாநில அறிக்கை (India State of Forest Report (ISFR)) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது மற்றும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி நாட்டின் வனப்பகுதியின் வரைபடத்தை உள்ளடக்கியது.


முக்கிய அம்சங்கள்


1. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இதுபோன்ற அறிக்கையை உருவாக்கும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதன் அறிக்கையானது, விரிவானது மற்றும் வலுவானது என்று பரவலாகக் கருதப்படுகிறது. ரிமோட் சென்சிங் நுட்பங்கள் (remote sensing techniques) மூலம் இந்தியாவின் வனப்பகுதி முழுவதையும் வரைபடமாக்குவதன் மூலம் தரவு கணக்கிடப்படுவதால், வன மேலாண்மை, வனவியல் மற்றும் வேளாண் வனவியல் துறைகளில் கொள்கைகளை திட்டமிடுவதற்கும் வகுப்பதற்கும் இந்திய வனப்பகுதிகளின் மாநில அறிக்கை (ISFR) பயன்படுத்தப்படுகிறது. 


2. இந்தியாவின் பசுமைப் பகுதி இப்போது 25% க்கும் அதிகமாக உள்ளது. நாட்டின் 8,27,357 சதுர கிமீ (25.17%) காடுகள் (21.76%) மற்றும் மரங்கள் (3.41%) உள்ளன. இதில், 4,10,175 சதுர கி.மீ., அடர்ந்த காடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


3. 2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில் நிகர காடுகளின் பரப்பளவு 156.41 சதுர கிமீ அதிகரித்துள்ளது.  இது இந்தியாவின் புவியியல் பரப்பளவில் மொத்த காடுகளின் பரப்பளவை 21.76% ஆகக் கொண்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு மதிப்பீட்டோடு ஒப்பிடுகையில் இது 0.05% சிறியளவிலான அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்புடன், மொத்த காடுகளின் பரப்பளவு 7,15,342.61 சதுர கிலோமீட்டராக உள்ளது.


4. 2003 மற்றும் 2013--ஆம் ஆண்டுக்கு இடையில், காடுகளின் பரப்பளவு 0.61 சதவீதத்தால், 20.62% இருந்து 21.23% ஆக அதிகரித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில், இது 0.53 சதவீதம் மட்டுமே அதிகரித்து, 21.76% ஐ எட்டியது.


5. மரங்களின் பரப்பளவு அதிக வளர்ச்சியைக் கண்டது.  இது 2021-ஆம் ஆண்டில் 2.91% இருந்து 2023-ம் ஆண்டில் 3.41% ஆக அதிகரித்துள்ளது. இது 1,285.4 சதுர கி.மீ அதிகரிப்புக்கு வழிவகுத்தது. மேலும், 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்த பசுமைப் பகுதி 1,445.81 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. இது 25.17 சதவீத புவியியல் பரப்பளவை உள்ளடக்கியது. 


6. ISFR-2023 ஆனது, 2021-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளில் 3,913 சதுர கிமீ அடர்ந்த காடுகளை இந்தியா இழந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த பகுதி கோவாவை விட பெரியது. இந்த சரிவு கடந்த 20 ஆண்டுகளில் மோசமான நிலையுடன் பொருந்துகிறது. 2013 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில், 17,500 சதுர கிலோமீட்டர் அடர்ந்த காடுகள் மறைந்துவிட்டன. இதற்கு முன், 2003 முதல் 2013-ஆம் ஆண்டு வரை, 7,151 சதுர கி.மீ இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


    7. 2003-ஆம் ஆண்டு முதல், இந்தியா 24,651 சதுர கிமீ அடர்ந்த காடுகளை முற்றிலுமாக இழந்துள்ளது. இது மொத்த அடர்ந்த காடுகளில் 6.3% அதிகமாகும். இது ஒரே வனப்பகுதியாக இணைத்தால், இந்த இழப்பு பஞ்சாபின் அளவில் பாதியாக இருக்கும்.


              8. ISFR-2023 ஆனது, 2021-ஆம் ஆண்டு  முதல் 1,420 சதுர கி.மீ அளவுள்ள காடுகள் அடர்ந்த தோட்டங்களாக மாறியதையும் குறிப்பிடுகிறது.  இருப்பினும், இது குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது. அடர்ந்த காடுகள் என வகைப்படுத்தப்பட்ட தோட்டங்கள் வளர்ந்து வரும் நிலையில், இயற்கை அடர்ந்த காடுகளை இழப்பது வழக்கமான நிகழ்வாகிவிட்டது.


9. மேற்குத் தொடர்ச்சி மலையின் குறுக்கே உள்ள வனப்பரப்பு முதன்முறையாக மதிப்பீடு செய்யப்பட்டது. மத்திய அரசால் சுற்றுச்சூழல் உணர்திறன் (eco-sensitive) என்று ஒதுக்கப்பட்ட பகுதி 2013-ஆம் ஆண்டு  முதல் 58.22 சதுர கி.மீ வனப்பகுதியை இழந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. மிகவும் அடர்த்தியான காடுகள் 3,455.12 சதுர கி.மீ அதிகரித்திருந்தாலும், மிதமான அடர்த்தியான காடுகள் மற்றும் திறந்த காடுகள் முறையே 1,043.23 சதுர கி.மீ மற்றும் 2,480.11 சதுர கி.மீ என குறைந்துள்ளன. 

10. 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டில் சதுப்புநில இனங்கள் 7.43 சதுர கி.மீ குறைந்துள்ளன.  நாட்டின் மொத்த சதுப்புநிலக் காடுகள் 4,991.68 சதுர கி.மீ ஆகும். இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 0.15 சதவீதமாகும். குஜராத்தில் 36 சதுர கி.மீ இழப்பில் ஒரு குறிப்பிடத்தக்க குறைவு பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.65 சதுர கி.மீ குறைவு பதிவாகியுள்ளது. 

மாநிலங்களின் செயல்திறன்

1. வடகிழக்கு மாநிலங்களில் வனப்பகுதி தொடர்ந்து குறைந்து வரும் போக்கை பதிவு செய்துள்ளது மற்றும் 2023-ஆம் ஆண்டு  மதிப்பீட்டின்படி, 327.30 சதுர கி.மீ குறைவாக மதிப்பிட்டுள்ளது. இப்பகுதியில் மிசோரம் மட்டுமே 178 சதுர கிலோமீட்டர் பரப்பளவானது அதிகரிப்பைக் காட்டியது. நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது.


2. சத்தீஸ்கர் 683.62 சதுர கிலோமீட்டரைச் சேர்த்து, காடு மற்றும் மரங்களின் பரப்பில் மிக உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (559.19 சதுர கிமீ), ஒடிசா (558.57 சதுர கிமீ), மற்றும் ராஜஸ்தான் (394.46 சதுர கிமீ) ஆகியவை உள்ளன. மாறாக, மத்தியப் பிரதேசம் 612.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இழந்தது. மற்ற குறிப்பிடத்தக்க இழப்புகள் கர்நாடகா (459.36 சதுர கிமீ), லடாக் (159.26 சதுர கிமீ), மற்றும் நாகாலாந்து (125.22 சதுர கிமீ) ஆகியவற்றில் காணப்பட்டன.


3. ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளைப் போன்ற ஒதுக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குள் (Reserved Forest Areas (RFA)) மிசோரம் 192.92 சதுர கி.மீ கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒடிசா 118.17 சதுர கி.மீ. கர்நாடகா 93.14 சதுர கி.மீ. மேற்கு வங்கத்தில் 64.79 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அதிகரிப்பாக பதிவாகியுள்ளது.  ஜார்கண்ட் 52.72 சதுர கிலோமீட்டர் வளர்ச்சியைக் காட்டியது.


4. பரப்பளவைப் பொறுத்தவரை, மிகப்பெரிய காடு மற்றும் மரங்களைக் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (85,724 சதுர கி.மீ), அருணாச்சல பிரதேசம் (67,083 சதுர கி.மீ) மற்றும் மகாராஷ்டிரா (65,383 சதுர கி.மீ)  ஆகியவை ஆகும். 


1. வனப்பகுதி அளவு : வனப்பகுதி என்பது குறைந்தது ஒரு ஹெக்டேர் அளவுள்ள அனைத்து நிலங்களையும் குறிக்கிறது. இந்த நிலங்கள் அல்லது சட்ட நிலையைப் பொருட்படுத்தாமல், 10% அல்லது அதற்கு மேற்பட்ட மரஉச்சியைக் (tree canopy) கொண்டிருக்க வேண்டும். இதில் பழத்தோட்டங்கள், மூங்கில் மற்றும் பனை ஆகியவை அடங்கும்.  எந்த நிலத்தில் மரங்கள் உள்ளன என்பதை இது காட்டுகிறது. நிலம் யாருக்கு சொந்தமானது அல்லது நிலம் வன நிலமாக அறிவிக்கப்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல்இதை வெளிப்படுத்துகிறது.


2. அடர்ந்த வனப்பகுதிகள் : 40% மற்றும் அதற்கு மேற்பட்ட மரஉச்சி அடர்த்தி கொண்ட பகுதிகள் அடர்ந்த காடுகளாக கருதப்படுகின்றன. 


3. திறந்த வனப்பகுதிகள் (Open Forests (OF)) : 10-40% மரஉச்சியில் அடர்த்தி கொண்ட பகுதிகள் திறந்த காடுகள் (OF) ஆகும். 


4. மிகவும் அடர்த்தியான வனப்பகுதிகள் (VDF) : குறைந்தது 70% மரஉச்சியில்  அடர்த்தி கொண்ட பகுதிகள் மிகவும் அடர்த்தியான காடுகள் (VDF) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 


5. பதிவு செய்யப்பட்ட வனப்பகுதி (RFA) : அரசாங்க பதிவுகளில் 'வனம்' என்று பதிவு செய்யப்பட்ட அனைத்து புவியியல் பகுதிகளையும் குறிக்கும் வனப்பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய வனச் சட்டம், 1927 இன் விதிகளின் கீழ் 'ஒதுக்கப்பட்ட காடுகள்' (Reserved Forests(RF)) மற்றும் 'பாதுகாக்கப்பட்ட காடுகள்' (Protected Forests(PF)) ஆகியவை RFA ஐ உருவாக்குகின்றன. 


6. மரங்களின் பரப்பளவு : இது மரங்களால் சூழப்பட்ட ஆனால் வனப்பகுதிக்கு வெளியே உள்ள பகுதி. இது 1 ஹெக்டேருக்கும் குறைவான மரங்களை பதிவு செய்கிறது. ஏனெனில், 1 ஹெக்டேருக்கும் அதிகமான மரங்கள் ஏற்கனவே வனப்பகுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 




Original article:

Share: