பழைய வாகனங்கள் மீதான ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகள் : ஒரு தற்காலிகத் தீர்வுகூட இல்லை

 டெல்லி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையும் பின்னடைவும் ஒரு பெரிய சிக்கலை எடுத்துக்காட்டுகின்றன. மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் சரியாக வகுக்கப்பட்ட திட்டம் எதுவும் இல்லை.


பழைய வாகனங்களுக்கான எரிபொருள் தடையை இடைநிறுத்துமாறு டெல்லி அரசாங்கம் மத்திய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையத்திடம் (Commission for Air Quality Management (CAQM)) கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தடை ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. இது 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களுக்கும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துகிறது. மாசுபாட்டைக் குறைப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது.


டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இந்தத் தடை "எதிர்மறை-விளைவாக" (counter-productive) இருக்கலாம் என்று கூறினார். மேலும், அவரின் கருத்து ஒரு அளவிற்கு நம்பகமானதாக உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பழைய வாகனங்களின் உரிமையாளர்களை அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து டீசல் அல்லது பெட்ரோல் வாங்க வைக்கக்கூடும். இது மாநிலங்களுக்கு இடையே சட்டவிரோத எரிபொருள் வர்த்தகத்திற்கு வழிவகுக்கும். டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், இந்தத் தடை இரு சக்கர வாகனங்களை நம்பியிருக்கும் பலரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடும். இதுவும் ஒரு நியாயமான கவலைதான்.


இருப்பினும், கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றுக்கு எதிரான பின்னடைவு இரண்டும் ஒன்றிய அரசு மற்றும் CAQM உட்பட அதன் நிறுவனங்கள் மற்றும் அடுத்தடுத்த டெல்லி அரசாங்கங்களின் நீண்டகால தோல்வியின் அறிகுறியாகும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, டெல்லி அதன் காற்றைச் சுத்தம் செய்ய தெளிவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட உத்தி தேவைப்பட்டது. ஆனால் அதற்குப் பதிலாக, அது கடுமையான நடவடிக்கைகளையும் முழுமையற்ற தீர்வுகளையும் மட்டுமே பெற்றுள்ளது.


இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு பெட்ரோல் பம்ப் டீலர்களை (petrol pump dealers) CAQM அமைப்பு பொறுப்பேற்க வைத்தது. அவர்கள் தவறினால், 1988-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 192-ன் கீழ் அவர்கள் அபராதம் விதிக்க நேரிடும். பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது இது பெரும் சுமையை ஏற்படுத்துவதாக பெட்ரோல் டீலர்கள் சங்கம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நபர்கள் இந்தப் பொறுப்பை ஏற்க பயிற்சி பெறவில்லை அல்லது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.


இந்த அமைப்பு எரிபொருள் நிலையங்களில் தானியங்கி பதிவெண் தகடு அடையாளங் காணுதல் (Automatic Number Plate Recognition (ANPR)) ஒளிப்படக்கருவிகளைப் பயன்படுத்தி, ஆயுள் முடிந்த வாகனங்களை அடையாளம் காணும். இது அரசாங்கத்தின் வாகன இணைய தளத்துடன் வாகனத் தரவைச் சரிபார்க்கிறது. இந்த அமைப்புகளுக்கான சோதனை கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. கடந்த மாதம், ANPR ஸ்கேனர்கள் பழைய வாகனங்கள் மீதான தடையை அமல்படுத்தத் தயாராக இருப்பதாக CAQM கூறியது.


இருப்பினும், நகரின் பல பகுதிகளில், ANPR-களில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஒப்புக்கொண்டார். இவற்றில் தவறான சென்சார்கள் மற்றும் தவறான இடங்களில் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் அடங்கும். மேலும், NCR பகுதி முழுவதும் இந்த அமைப்பு இணைக்கப்படவில்லை. கட்டுப்பாடுகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு மிகக் குறைந்த திட்டமிடல் மட்டுமே இருந்தது என்பதை இது காட்டுகிறது.


வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்கு சாலையில் அதிக வாகனங்கள் இருப்பதற்கான பல காரணங்களைப் புரிந்துகொள்ள தொடர்ச்சியான முயற்சி தேவை. வாழ்க்கை முறை தேர்வுகள், வாழ்க்கை சம்பாதிக்க வேண்டிய அவசியம் மற்றும் பயணத்தை நீண்ட மற்றும் தொலைதூரமாக்குகின்ற நகர்ப்புற விரிவாக்கம் ஆகியவை இந்தக் காரணங்களில் அடங்கும். டெல்லியில் கடந்த கால அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையை நன்றாகக் கையாளவில்லை. மக்கள் தங்கள் வாகனங்களை முறையாகப் பராமரிக்க ஊக்குவிக்கும் எளிமையான பணிகூட போதுமான கொள்கைக்கான கவனம் செலுத்தப்படவில்லை. பதவியேற்றதிலிருந்து, டெல்லியின் பாஜக அரசாங்கம் முந்தைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கான அறிகுறியைக் காட்டவில்லை. அது தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும்.



Original article:

Share: