அரசியலமைப்பு ஏன் குடியரசை மதச்சார்பற்றது என்று கட்டாயம் அறிவிக்க வேண்டும்? -அபிஷேக் சிங்வி

 மதச்சார்பின்மை (secularism) என்ற சொல் இன்று முகவுரையில் இல்லையென்றால், கடந்த பத்து ஆண்டுகளின் நிகழ்வுகள் அதை உடனடியாகவும் தெளிவாகவும் சேர்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கும்.


இந்திய அரசியலமைப்பு வெறும் சட்ட கையெழுத்துப் பிரதி மட்டுமல்ல, இது ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் கனவுகள், விருப்பங்கள் மற்றும் விதிக்கு ஒரு உயிருள்ள சான்றாக அமைகிறது. முகவுரை பெரும்பாலும் அரசியலமைப்பின் அடையாள அட்டை (identity card) என்று அழைக்கப்படுகிறது. இது நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் தீவிர கருப்பொருள்களை முன்வைக்கும் ஒரு கவிதை முன்னுரையாகும்.


அரசியலமைப்பின் சில பகுதிகள், குறிப்பாக 'சோசலிஸ்ட்' (socialist) மற்றும் 'மதச்சார்பற்ற' (secular) போன்ற சொற்களை மாற்ற முடியுமா அல்லது மாற்ற முடியாததா என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அரசியலமைப்பின் பின்னால் உள்ள உண்மைகள், சட்டங்கள் மற்றும் உணர்வை மீண்டும் பார்ப்பது முக்கியம். முகவுரையைத் திருத்தவோ மாற்றவோ முடியாது என்று சொல்வது தவறு மற்றும் சட்டப்படி சாத்தியமற்றது என்பதை இது காண்பிக்கும்.


1976-ம் ஆண்டு 42-வது திருத்தம் சோசலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற சொற்களைச் சேர்த்த பிறகு, அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் அந்தச் சேர்த்தல்களுக்கு ஏற்பட்ட பல சவால்களில் எதுவும், பிரிவு 368-ன் கீழ் முகவுரையை மாற்ற முடியாது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டன. சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையின் கொள்கைகள் தொடக்கத்திலிருந்தே உண்மையான அரசியலமைப்பின் பார்வையின் ஒரு பகுதியாக இருந்தன. இருப்பினும், அவை 42வது அரசியலமைப்புத் திருத்தம் அவற்றை அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக அவசரநிலை பிரகடனத்தின் மூலம் மட்டுமே கூறியது.


பொதுவாக வழிகாட்டுதல் கோட்பாடுகள் மற்றும் குறிப்பாக பிரிவுகள் 38 மற்றும் 39, சமத்துவமின்மையைக் குறைத்து வளங்களின் நியாயமான மற்றும் சமமான ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு கோருகின்றன. அவை சோசலிச உந்துதலை வெளிப்படுத்தும் வழித்தடங்களாகும். இதேபோல், அனைத்து மதங்களுக்கும் நியாயமான தீர்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைப் பெறுவதன் மூலம் நமது குடியரசின் மையத்தில் ஒரு வலுவான, மதச்சார்பற்ற நெறிமுறையை 25 முதல் 28 வரையிலான பிரிவுகள் உறுதிப்படுத்துகின்றன.


இந்த வார்த்தைகள் அவசரகாலத்தின் அரசியலமைப்பு மீறல்களின் காலத்தில் தோன்றியிருக்கலாம், ஆனால் அவை அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் திட்டத்தை மறைப்பதற்கு பதிலாக தெளிவுபடுத்துகின்றன. இந்த வார்த்தைகள் குடியரசின் தார்மீக கடமைகளை நினைவூட்டுவதாக உள்ளன, யாருக்கும் தீங்கு விளைவிப்பதற்கு பதிலாக. மோசமான காலங்களிலிருந்து நல்லவை தோன்றலாம். இவற்றை இப்போது வேரோடு பிடுங்குவது, இந்தியாவின் அடிப்படைக் கருத்துகளுக்கு எதிராக நடத்தப்படும் பயனற்ற, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு போராக இருக்கும்.


எஸ்.ஆர். பொம்மை vs இந்திய ஒன்றியம்-1994 (SR Bommai vs Union of India) வழக்கில், உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டதாவது, "மதச்சார்பின்மை நமது அரசியலமைப்பு தத்துவத்தின் அடித்தளம். அது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாகும்." அரசியல், சட்டம் மற்றும் அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்து வரும் முக்கிய நிபுணர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே வைத்திருந்த ஒன்றை நீக்க விரும்புவது எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?


அடிப்படைக் கட்டமைப்பை மீறும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்தமும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு கூறவில்லையா? இங்கே ஒரு முரண்பாடு உள்ளது. இதன் பின்னர் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட ஒன்று, அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொண்டதாகக் கருதப்படும் சட்ட வல்லுநர்களாலும் அரசியல் தலைவர்களாலும், அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியை யாராகிலும் எவ்வாறு நீக்க முடியும் என்பதை நமக்குச் சொல்லாமல் நீக்க முயற்சிக்கப்படுகிறது.


இந்தியாவில் மதச்சார்பின்மை மதத்திற்கு எதிரானது என்று சொல்வது தவறு. உண்மையில், மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதாகும். அனைத்து நம்பிக்கைகளும் இந்தியாவிற்கு சொந்தமானது என்ற கருத்தை அது கொண்டாடுகிறது. மதச்சார்பின்மை என்பது ஒரு பரந்த மற்றும் முழுமையான யோசனையாகப் பார்க்கப்படுகிறது. முதலாவதாக, அரசுக்கு அதன் சொந்த மதம் இருக்க முடியாது என்பதாகும். இரண்டாவதாக, அரசு அனைத்து மதங்களிலிருந்தும் சமமாக விலகி இருக்கிறது, ஆனால் அவற்றை சமமாக ஆதரிக்கிறது. மூன்றாவதாக, அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவின் மதச்சார்பின்மை மேற்கத்திய நாடுகளில் காணப்படும் தேவாலயத்தையும், அரசையும் கடுமையாகப் பிரிப்பதில் இருந்து வேறுபட்டது.


அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்று பொருள்படும் சர்வ தர்ம சம பாவ் (Sarva dharma sama bhaav), இந்திய மதச்சார்பின்மையின் பரந்த கட்டமைப்பிற்குள் இருக்க முடியும். இதன் தொடர்புடைய அனைத்து அம்சங்களுடனும் நம்பிக்கையைப் பின்பற்றவும் பரப்பவும் உள்ள உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். அரசியலமைப்புப் பிரிவு 25-லிருந்து தொடங்கும் பரந்த அரசியலமைப்பு மொழியால் இது பாதுகாக்கப்படுகிறது. இந்திய மதச்சார்பின்மை என்றால் இதுதான், இரக்கம், சகவாழ்வு மற்றும் அரசியலமைப்பு ஒழுக்கத்தின் நெய்த துணி போன்றவை போல் உள்ளது.


சிலர், "நமது ஜனநாயக அமைப்பில் மதச்சார்பின்மை ஏற்கனவே தெளிவாக இல்லையா?" என்று கேலி செய்கிறார்கள். இருக்கலாம். ஆனால், பெருகிவரும் சகிப்பின்மையும் மறைமுக பெரும்பான்மைவாதமும் கொண்ட உலகில், தெளிவானவை அறிவிக்கப்பட வேண்டியவையாகவும், பாதுகாக்கப்பட வேண்டியவையாகவும், உறுதியாக நிலைநிறுத்தப்பட வேண்டியவையாகவும் ஆகின்றன.


முகவுரையில் உள்ள "மதச்சார்பற்ற" என்ற சொல் வெறும் காட்சிக்காக அல்ல. இது ஒரு தெளிவான நோக்க அறிக்கையாகும். இது ஒரு அரசியலமைப்பு வழிகாட்டியாக செயல்படுகிறது. இது எதிர்கால அரசாங்கங்களை எச்சரிக்கிறது. பொதுவாக நீங்கள் வாக்குகளைப் பெறலாம், ஆனால் நீங்கள் முக்கிய மதிப்புகளை பலவீனப்படுத்தக்கூடாது.


இங்கே ஒரு பெரிய முரண்பாடு உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை மிகவும் சேதப்படுத்திய அரசாங்கம் இப்போது அதன் ஆதரவாளர்கள் இந்த முக்கியமான வார்த்தையை அகற்ற அழுத்தம் கொடுக்க அனுமதிக்கிறது.


உண்மையில், மதச்சார்பின்மை என்ற சொல் இன்று முகவுரையில் இல்லையென்றால், கடந்த காலத்தின் நிகழ்வுகள் அதை உடனடியாகவும் தெளிவாகவும் சேர்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்.


நடைமுறையில் அரசியலமைப்பை அவமதிக்கும் மக்கள் இப்போது அதை சட்டத்திலும் நீக்க விரும்புகிறார்கள். அரசியலமைப்பு பதவிகளில் உள்ள அதிகாரிகளும் இந்த யோசனையை ஆதரிக்கும்போது, ​​அது அவர்களின் கடமையின் தோல்வி மட்டுமல்ல. அவர்கள் ஒரு அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை வெளிப்படையாக ஆதரிப்பதை இது காட்டுகிறது.


பாஜக நீண்ட காலமாக "மதச்சார்பின்மை" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் அசௌகரியத்தை வெளிப்படுத்தி வருகிறது, இதை மிகவும் அநியாயமாக சிறுபான்மையினர் திருப்திப்படுத்தல் எனக் கருதுகிறது. இது உண்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய இறக்குமதி அல்ல, மாறாக வேதாந்த உந்துதல் ஆகும். இது அசோகரின் தம்மம், அக்பரின் சுல்ஹி-குல், கபீரின் இருபாடல்கள் மற்றும் குரு நானக்கின் போதனைகள் அனைத்தும் ஒன்றிணைந்தவை. இது ஸ்வாமி விவேகானந்தர், மதங்களின் பாராளுமன்றத்தில் "நாங்கள் பரந்த சகிப்புத்தன்மையில் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் உண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்." என்று பெருமையுடன் பிரகடனம் செய்தது’


மதச்சார்பின்மைக்கான எனக்குப் பிடித்த வரையறைகளில் ஒன்று ராஜீவ் பார்கவா குறிப்பிட்டது. அவர் ஆபிரகாம் லிங்கனின் பிரபலமான சொற்றொடரைத் தழுவினார். "மக்களுக்காக" மற்றும் "மக்களால்" ஆகியவை ஜனநாயகத்தின் முக்கிய மதிப்புகள் என்று லிங்கன் கூறினார். ஆனால், ஒவ்வொரு நபரும் ஒன்றாக குடியரசை சொந்தமாக்கிக் கொள்கிறார்கள் என்பதைக் குறிக்க "மக்களின்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். இதில் கடைசி வரிசையில் உள்ள கடைசி நபரும் அடங்கும். பகிரப்பட்ட உரிமை உணர்வு இல்லாமல், ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. முன்னுரையில் உள்ள மற்றொரு முக்கியமான சொல் சகோதரத்துவம் (Fraternity) ஆகும். இது மதச்சார்பின்மையுடன் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது. ஒருவருக்கொருவரும் வளர உதவும் நல்ல கூட்டமைப்புகளைப் போல் உள்ளது.


நமது அரசியலமைப்பிலிருந்து இந்த சாரத்தை அழிக்க முயற்சிப்பது வெறும் திருத்தல்வாதம் (revisionism) மட்டுமல்ல. இது வரலாற்று நாசவேலை (historical vandalism). முகவுரையைச் சுற்றியுள்ள புதுப்பிக்கப்பட்ட விவாதம் வெறும் கல்வி சார்ந்தது அல்ல.


இது நமது தற்போதைய காலங்களை பிரதிபலிக்கிறது. இந்த காலங்கள் பிளவுபடுத்தும் அரசியல், தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றம் மற்றும் வளர்ந்து வரும் வகுப்புவாதத்தால் குறிக்கப்படுகின்றன. அத்தகைய காலத்தில், மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பு அறிவிப்பு வெறும் வார்த்தை அல்ல. அது ஒரு பாதுகாப்புச் சுவராக செயல்படுகிறது. இந்த சுவர் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்கிறது.


“மாற்றத்தின் காற்று வீசும்போது, ​​சிலர் சுவர்களைக் கட்டுகிறார்கள், மற்றவர்கள் காற்றாலைகளைக் கட்டுகிறார்கள்” (When the winds of change blow, some build walls, others build windmills) என்பது பழமொழி. நமது அரசியலமைப்பு ஒரு காற்றாலையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தது. அது ஒரு மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயகக் குடியரசை உருவாக்கியது. எதிர்கால சந்ததியினர் முன்னேற்றம் மற்றும் அமைதியின் காற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இது செய்யப்பட்டது. இன்று, சிலர் அந்த காற்றாலையை அகற்ற விரும்புகிறார்கள்.


முகவுரை வெறும் அறிமுகம் அல்ல. இது ஒரு வாக்குறுதி. ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு வாக்குறுதியாகும். இது விதியுடனான நமது சந்திப்பு. அந்த வாக்குறுதியை சிறிதளவு கூட அழிப்பது அல்லது பலவீனப்படுத்துவது குடியரசின் ஆன்மாவை காட்டிக் கொடுப்பதாகும்.


அபிஷேக் சிங்வி ஒரு சட்ட நிபுணர், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர் மற்றும் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆவார்.



Original article:

Share: