டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கான காரணங்கள் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


• தலைநகரில் டீசல் வாகனங்களில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட, மற்றும் பெட்ரோல் வாகனங்களில் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த உத்தரவு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.


• முதல் நாளில் 80 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 98 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஏழு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டாவது நாளில் 78 அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், வியாழக்கிழமை - மூன்றாவது நாளில் எந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.


• நீண்டநாள் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் எரிபொருள் நிலையங்களில் நிறுவப்பட்ட தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (Automatic Number Plate Recognition (ANPR)) கேமராக்களால் குறிக்கப்படுகின்றன. அவை எண் தகடுகளை ஸ்கேன் செய்து, செல்லுபடியாகும் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் (Pollution Under Control Certificate (PUCC)) இல்லாதவை அல்லது 'நீண்டநாள் பயன்படுத்தப்பட்டவை' என்று பதிவு நீக்கப்பட்டவைகளைச் சரிபார்க்க அரசாங்கத்தின் வாகனத் தரவுத்தளத்துடன் தரவைப் பொருத்துகின்றன.


• 2018ஆம் ஆண்டில், டெல்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும் உச்சநீதிமன்றம் தடை செய்தது.


உங்களுக்குத் தெரியுமா?


• வழக்கமாக ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்காகத் தயாரிக்கப்படும் உமிழ்வுப் பட்டியல், அந்த ஆண்டிற்கான ஒரு நகரம் அல்லது பிராந்தியத்திற்கான வெவ்வேறு மூலங்களிலிருந்து வரும் உமிழ்வை அளவிடுகிறது.


• 2021 வரைவு அறிக்கையை எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (The Energy and Resources Institute (TERI)) தயாரித்து நவம்பர் 2024-இல் வெளியிட்டது. டெல்லி அரசாங்கம் மாசு மூலங்களை நிகழ்நேரத்தில் அடையாளம் காண உதவும்படி TERI-யிடம் கேட்டது.


• வரைவு அறிக்கை பட்டியலிடும் ஆறு காற்று மாசுபடுத்திகளில், வாகனங்கள் மூன்றுக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன. டெல்லியில் வாகனங்கள்தான் அதிக அளவில் PM2.5 வாயுவை வெளியிடுகின்றன. இது மொத்த மதிப்பிடப்பட்ட PM2.5 வெளியேற்றமான 20.32 kt/ஆண்டில் சுமார் 47% அல்லது 9.6 kt/ஆண்டு (ஆண்டுக்கு கிலோ டன்கள்) ஆகும். இதைத் தொடர்ந்து சாலை தூசி (20%, 4.09 kt/ஆண்டு PM2.5) வெளியிடப்பட்டது.


• வாகனங்கள் 78% நைட்ரஜன் ஆக்சைடுகள் (nitrogen oxides (Nox)) மாசுபாட்டையும், 49% மீத்தேன் அல்லாத ஆவியாகும் கரிம சேர்மங்களையும் (non-methane volatile organic compounds (NMVOCs)) ஏற்படுத்துகின்றன.


• வாகனங்களில், இரு சக்கர வாகனங்கள் பெரும்பாலான PM2.5, PM10, சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. மூன்று சக்கர வண்டிகள் அதிக கரிம சேர்மங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் பேருந்துகள் நைட்ரஜன் ஆக்சைடின் மிகப்பெரிய ஆதாரமாகும்.


• 2021-ஆம் ஆண்டில், தேசிய தலைநகர் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கான காற்று தர ஆணையச் சட்டம் (Capital Region and Adjoining Areas Act (CAQM Act)) என்ற சட்டம் இயற்றப்பட்டது. இது டெல்லி மற்றும் அருகிலுள்ள பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசப் பகுதிகளில் மாசுபாட்டை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தச் சட்டம் CAQM என்ற அமைப்பை உருவாக்கியது. இது பிராந்தியத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுகளை வழங்கவும் அதிகாரம் கொண்டது.



Original article:

Share: