முக்கிய அம்சங்கள்:
• பீகாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி வினோத் கஞ்சியால் கூறுகையில், 82% வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officer (BLO)) புதிய வாக்காளர் படிவங்களைப் பெற்றுள்ளனர். மேலும், சுமார் 72% படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன - 7.8 கோடி வாக்காளர்களில் சுமார் 5.61 கோடி பேருக்கு இது சென்றடைந்துள்ளது. இதுவரை, 3% படிவங்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. காலக்கெடுவுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் மிகப் பெரியவை என்றும், சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.
• ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவுறுத்தல்களின்படி, இந்த செயல்முறையை களத்தில் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, 20033 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் (கடைசியாக இதுபோன்ற சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டபோது) அதிலிருந்து தொடர்புடைய சாற்றை சான்றாகப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் 2003 பட்டியலில் உள்ளவர்களின் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வாக்காளர் பட்டியல் பதிவைப் பயன்படுத்தலாம். ஆனால், 40 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் (2003-இல் 18 வயது இல்லாதவர்கள்) சான்றாக மற்ற ஆவணங்களைக் காட்ட வேண்டும்.
• சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் நடைமுறைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.
• பீகார் வாக்காளர் பட்டியல்களில் தேர்தல் ஆணையத்தின் "சிறப்பு தீவிர திருத்தம்" (special intensive revision) செய்யும் 1 லட்சம் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்கள் தலா ரூ.6,000 கௌரவ ஊதியமாகப் பெறுவார்கள் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் ஆணைய அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தைத் தொடங்கியுள்ளது. இது இறுதியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும். பீகாரில், இந்த செயல்முறை ஜூன் 25ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மாதத்திற்கு முன்பு எதிர்பார்க்கப்படும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, செப்டம்பர் 30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலுடன் முடிவடையும்.
• அரசியலமைப்பின் பிரிவு 324(1), நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை "கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்துதல்" ஆகியவற்றின் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.
• மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் (Representation of the People Act, 1950) பிரிவு 21(3)-ன் கீழ், தேர்தல் ஆணையம் எந்த வகையிலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தத்தை உத்தரவிடலாம் என்று கூறுகிறது.
• 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள், வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது, தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்கப்பட்டபடி, புதிய பட்டியலை உருவாக்குவதன் மூலம் தீவிரமாக, ஏற்கனவே உள்ள பட்டியலில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் சுருக்கமாக அல்லது இரண்டு முறைகளையும் ஒன்றாகப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படலாம் என்று கூறுகிறது.
• சிறப்பு சுருக்க திருத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. மேலும், ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் தீவிர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.