DRDO QRSAM ஏவுகணை, VSHORADS ஏவுகணை இந்தியா: IADWS என்பது ஒரு உள்நாட்டு பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு. இது சரியாக என்ன செய்ய முடியும். மேலும், இது இந்தியாவிற்கு என்ன இராஜதந்திர நன்மையைக் கொண்டுவருகிறது?
DRDO QRSAM ஏவுகணை: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் விமான சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) தெரிவித்துள்ளது. இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் நடத்தப்பட்டது. இதில் மூன்று வெவ்வேறு இலக்குகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு அளவுகள் மற்றும் உயரங்களில் அழிக்கப்பட்டன.
உள்நாட்டு IADWS-ன் சோதனை என்ன, அதன் கூறுகள் என்ன?
IADWS என்றால் என்ன?
IADWS என்பது மூன்று பகுதிகளைக் கொண்ட ஒரு அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பாகும். அதில் விரைவு எதிர்வினை மேற்பரப்பு முதல் வான் ஏவுகணைகள் (QRSAM), மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணைகள் மற்றும் நேரடி ஆற்றல் ஆயுதம் (DEW) எனப்படும் உயர் சக்தி லேசர் ஆயுதம் போன்றவை உள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமான சோதனைகளின்போது இந்த அமைப்புகள் அனைத்தும் சரியாக வேலை செய்தன. சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வீச்சு விமானத் தரவைப் பிடிக்க சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி இதை உறுதிப்படுத்தியது.
QRSAM-ஐ DRDO வடிவமைத்து உருவாக்கியது. VSHORADS மற்றும் DEW ஆகியவை DRDO-ன் கீழ் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மையம் இமாரத் (RCI) மற்றும் உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம் (CHESS) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டன.
இந்த அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடும் ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட மத்திய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
QRSAM:
QRSAM என்பது ஒரு குறுகியதூர தரையிலிருந்து வான் ஏவுகணை (SAM) அமைப்பாகும். எதிரிகளின் வான் தாக்குதல்களிலிருந்து நகரும் கவச இராணுவப் பிரிவுகளைப் பாதுகாக்க இது முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மிகவும் மொபைல் தளங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது குறுகிய நிறுத்தங்களின் போதும் தேடுதலுக்கும், கண்காணிப்பிற்கும் மற்றும் தாக்குதலுக்கும் பயன்படுத்த முடியும். இதன் செயல்பாட்டு வரம்பு மூன்று முதல் 30 கிலோமீட்டர் வரை செயல்படும்.
QRSAM அமைப்பில் முழுமையாக தானியங்கி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது. இதில இரண்டு ரேடார்கள் உள்ளது. அவை Active Array Battery Surveillance Radar and Active Array Battery Multifunction Radar மற்றும் ஒரு லாஞ்சர் ஆகியவை அடங்கும். இரண்டு ரேடார்கள் 360 டிகிரி பாதுகாப்பை வழங்குகின்றன மற்றும் நகரும்போது தேடி கண்காணிக்கும் திறனைக் கொண்டுள்ளன.
VSHORADS என்பது நான்காவது தலைமுறை, மேம்பட்ட, miniaturised Man Portable Air Defence System (MANPAD). DRDO-ன் கூற்றுப்படி, இதை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயன்படுத்த முடியும். இந்த அமைப்பு ட்ரோன்கள் மற்றும் பிற வான்வழி அச்சுறுத்தல்கள் உட்பட 300 மீட்டர் முதல் ஆறு கிலோமீட்டர் வரையிலான இலக்குகளை அழிக்க முடியும்.
ஏப்ரல் மாதத்தில், CHESS வசதி வாகனத்தில் பொருத்தப்பட்ட லேசர் DEW MK-II(A)-ன் நிலப் பதிப்பை வெற்றிகரமாக சோதித்தது. இது நிலையான இறக்கைகள் கொண்ட UAVகள் மற்றும் திரள் ட்ரோன்களை அவற்றின் கட்டமைப்பை சேதப்படுத்தி, அவற்றின் சென்சார்களை செயலிழக்கச் செய்து அழித்தது. இதன் மூலம், உலகில் இதுபோன்ற அமைப்பைக் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது. DEW மூன்று கிலோமீட்டருக்கும் குறைவான வரம்பைக் கொண்டுள்ளது.
IADWS-ன் இராஜதந்திர முக்கியத்துவம்
மூன்று வெவ்வேறு அமைப்புகள் 30 கிலோமீட்டருக்குள் வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன என்று மூத்த DRDO-வின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார். நிலையான-இறக்கை மற்றும் சுழலும்-இறக்கை விமானங்கள் உட்பட அதிவேக மற்றும் குறைந்த வேக இலக்குகளை அவை நடுநிலையாக்க முடியும். இந்த அமைப்பு முழுமையாக உருவாக்கப்பட்ட இந்திய ஆயுதங்களுடன் உள்நாட்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்துகிறது. இது ஒரு முக்கிய உத்தியாக அமைகிறது. குறுகிய தூரங்களில் இந்த முதல் சோதனை நீண்ட தூரங்களில் பயன்படுத்த வழி திறக்கிறது மற்றும் மிஷன் சுதர்சன் சக்ராவை நோக்கிய ஒரு படியாகக் காணலாம். இது ஒரு முழுமையான பாதுகாப்பு கேடயமாக உள்ளது.
இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள DRDO வசதியின் முன்னாள் தலைவர் இந்த சோதனையை இந்தியாவின் சொந்த பாதுகாப்பு திறனில் ஒரு பெரிய முன்னேற்றம் என்று அழைத்தார்.
இந்த சோதனை ஏவுகணைகள் மற்றும் இயக்கப்பட்ட எரிசக்தி ஆயுதங்களுக்கு இடையில் மென்மையான ஒருங்கிணைப்பைக் காட்டியது என்று அவர் மேலும் கூறினார். இது பல்வேறு வகையான வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பை வலுப்படுத்தும், விரைவான பதிலை மேம்படுத்தும் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.