ஆக்கிரமிப்பு இனங்களை (invasive species) கையாள்வதற்கான செலவை இந்தியா குறைத்து மதிப்பிடுகிறதா? -மோனிகா மொண்டல்

 ஒரு புதிய மதிப்பீட்டில், தாவரங்கள் உலகளவில் பொருளாதார ரீதியாக மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு இனங்களாகவும், மேலாண்மை அடிப்படையில் அவை மிகவும் விலையுயர்ந்த குழுவாகவும் உருவெடுத்துள்ளன. 1960 முதல் 2022-ம் ஆண்டில் $926.38 பில்லியன் தேவைப்பட்டது. அடுத்த வரிசையில் ஆர்த்ரோபாட்கள் ($830.29 பில்லியன்) மற்றும் பாலூட்டிகள் ($263.35 பில்லியன்) தொடர்பான செலவாகும்.


பூர்வீகமற்ற தாவரங்கள் மற்றும் விலங்குகளால் (non-native plants and animals) ஏற்படும் சேதம் உலகளவில் சமூகத்திற்கு $2.2 டிரில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் புதிய ஆய்வு (international team of researchers) தெரிவித்துள்ளது.


Nature Ecology & Evolution இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது, நாடு வாரியாக உயிரியல் படையெடுப்புகளின் பொருளாதார செலவுகளை பதிவு செய்யும், பொது தரவுத்தளமான இன்வாகோஸ்ட்டின் (InvaCost) போன்ற தரவுகளையும், 1960-ம் ஆண்டு தரவை பகுப்பாய்வு செய்ய மாதிரி பயிற்சிகளையும் (modelling exercises) பயன்படுத்தியது. முந்தைய மதிப்பீடுகளைவிட செலவுகள் 16 மடங்கு குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.


உலகளாவிய பொருளாதார இழப்புகளுக்கு அப்பால், முந்தைய தரவு எதுவும் கிடைக்காத 78 நாடுகளையும் இந்த ஆய்வானது மாதிரியாகக் கொண்டிருந்தது. ஏற்கனவே பல சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்தியாவில், இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் நிதிச் சுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.




உலகளாவிய முரண்பாடு


ஐரோப்பா $1.5 டிரில்லியன் என்ற அதிகபட்ச சாத்தியமான தாக்கத்தைக் காட்டியது. இது உலகளாவிய செலவில் 71.45% ஆகும். மேலும், அதைத் தொடர்ந்து வட அமெரிக்கா ($226 பில்லியன்), ஆசியா ($182 பில்லியன்), ஆப்பிரிக்கா ($127 பில்லியன்) மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் ஓசியானியா ($27 பில்லியன்) போன்ற நாடுகளிலும் மிகக் குறைவாக இருந்தன.


முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும், நிலைத்தன்மை குறித்த உரையாடல்களுக்கான (Dialogues on Sustainability) யுனெஸ்கோ தலைவருமான பிரையன் லியுங், "ஐரோப்பாவில் உள்ள பொருட்களின் அதிகமான விலையின் காரணமாக, படையெடுப்புகளின் விலை அதிகமாக இருக்கலாம். இருப்பினும், சேதம் அதிகமாக உள்ளது. மேலும், விவசாயப் பொருட்களின் விலை அதிகமாகவும், மேலாண்மை செலவு அதிகமாக இருக்கலாம்" என்று கூறினார்.


இந்த ஆய்வு இந்தியாவிற்கான மொத்த பொருளாதார சேதத்தை முழுமையாக மதிப்பிடவில்லை. அதற்கு பதிலாக, மேலாண்மை செலவுகள் பெரும்பாலும் குறைவாகவே பதிவாகியுள்ளன என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. உண்மையில், மதிப்பிடப்பட்ட அனைத்து நாடுகளிலும், மேலாண்மை செலவினங்களில் இந்தியா மிக உயர்ந்த சதவீத வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, 1.16 பில்லியன் சதவீதம் ஆகும்.


ஆய்வின்படி, இதன் விதிவிலக்கான அதிக வேறுபாடு, இந்தியாவில் மேலாண்மை செலவினங்களில் கணிசமான அளவு பதிவு செய்யப்படவில்லை அல்லது தற்போதுள்ள தரவுகளில் குறைவாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. இதன் விளைவாக, ஒரு பெரிய "மறைக்கப்பட்ட" செலவுக்கு  வழிவகுத்தது. இந்தியாவின் வரையறுக்கப்பட்ட வளங்கள் இந்த இடைவெளிக்கு இன்வாகோஸ்ட் தரவுத்தளத்தில் (InvaCost database) ஒரு பதிவு சார்புடையதாக இருக்கலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனமாகக் கவனித்தனர். இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகளில் அறிக்கைகளை கவனிக்காமல் இருக்கலாம்.


ஐரோப்பா 15,044% முரண்பாட்டைப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து ஆசியா (3,090%) மற்றும் ஆப்பிரிக்கா (1,944%) எனவும் பதிவு செய்தது. இதில், மதிப்பிடப்பட்ட நாடுகளிடையே சராசரி செலவு முரண்பாடுகள் 3,241% ஆகும்.


இந்தியாவுக்கான குறிப்பிட்ட தரவுகள் குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று லியுங் கூறினார். புள்ளிவிவரங்கள் எவ்வாறு உடைகின்றன என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார். ஆனால், பொது மேலாண்மை உத்திகளில் தடுப்பு, ஒழிப்பு, கட்டுப்பாடு அல்லது அடக்குதல் ஆகியவை அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். படையெடுப்பு பரவலை மெதுவாக்கும் முயற்சிகளும் இதில் அடங்கும். "இவை அனைத்தும் படையெடுப்புகளை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள்" என்று அவர் கூறினார்.


சென்னையில் உள்ள பல்லுயிர் கொள்கை மற்றும் சட்ட மையத்தில் ஆக்கிரமிப்பு வேற்றுகிரக உயிரினங்கள் குறித்த முன்னாள் ஆய்வாளரான எஸ். சாண்டில்யன், ஆய்வின் கண்டுபிடிப்புகள் நம்பத்தகுந்தவை என்று கூறினார். "உயிரியல் படையெடுப்பு மேலாண்மையை ஆவணப்படுத்துதல், அறிக்கையிடுதல் மற்றும் இராஜதந்திர ரீதியாக நிதியளிப்பதில் இந்தியா பின்தங்கியுள்ளது. மையப்படுத்தப்பட்ட தரவு அமைப்புகள் (centralised data systems) இல்லாதது, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் போட்டியிடும் பாதுகாப்பு முன்னுரிமைகள் இதை அதிகரிக்கின்றன," என்று அவர் மேலும் கூறினார்.


படையெடுப்பாளர்கள் (invaders) யார்?


உலகளவில் பொருளாதார ரீதியாக மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு இனங்களாகவும், மேலாண்மை செலவைப் பொறுத்தவரை மிகவும் விலையுயர்ந்த குழுவாகவும் தாவரங்கள் உருவெடுத்தன. 1960 முதல் 2022-ஆம் ஆண்டில் $926.38 பில்லியன் தேவைப்பட்டன. அடுத்த வரிசையில் ஆர்த்ரோபாட்கள் ($830.29 பில்லியன்) மற்றும் பாலூட்டிகள் ($263.35 பில்லியன்) போன்றவைகளின் செலவுகள் இருந்தன. இந்த இனங்கள் புதிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் எவ்வாறு பரவுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அவை பூர்வீக இனங்களின் இழப்பில் செழித்து வளர்கின்றன. இந்த பரவலுக்கான முக்கிய காரணங்கள் வர்த்தகம் மற்றும் பயணம். உலகமயமாக்கல் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் அவை பிராந்தியங்களுக்கு இடையில் செல்வதை எளிதாக்கின.


அவர்கள் ஜப்பானிய நாட்வீட் (Reynoutria japonica) மற்றும் பொதுவான லந்தானா (Lantana camara) ஆகியவற்றை ஒரு சதுர கிலோமீட்டருக்கு மிகவும் செலவு பிடிக்கும் புல்வகைகளாக குறிப்பிட்டனர்.


இருப்பினும், அனைத்து ஆக்கிரமிப்பு இனங்களையும் அகற்றுவது என்பது பிரச்சினையை மோசமாக்கும் என்று லியுங் எச்சரித்தார். "இப்போது நாம் பயன்படுத்தும் பல விவசாயப் பொருட்கள் பூர்வீகமானவை அல்ல என்று அவர் விளக்கினார்.


மேலும் அவர் கூறுகையில், ஆக்கிரமிப்பு இனங்களின் இயக்கம் உயிரினங்களின் வர்த்தகம் மற்றும் இறக்குமதியின் விளைவாகவே நிகழ்கிறது. மக்கள் இந்த தயாரிப்புகளை விரும்புகிறார்கள், மேலும் இந்த தேவை பெரும்பாலும் ஆக்கிரமிப்புகளை இயக்குகிறது. ஐரோப்பா நீண்டகாலமாக இதைச் செய்து வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


இது இரு அம்ச சவாலை முன்வைக்கிறது. ஒருபுறம், பொருளாதார இழப்புகளைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. மறுபுறம், உலகமயமாக்கலை ஊக்குவிக்கும் விருப்பமும் உள்ளது. எனவே, லியுங்கின் கூற்றுப்படி, ஆக்கிரமிப்பு இனங்களின் பரவலைக் குறைப்பதற்கும், தாவரங்களை அதிகரிப்பதன் மூலம் புவி வெப்பமடைதலை நிவர்த்தி செய்வதற்கும் ஒரே நேரத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இலக்குகள் சிக்கலானவை மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால், ஆக்கிரமிப்பு இனங்களைப் படிப்பதும் தீர்வுகளைக் கண்டறிவதும் மிகவும் கடினமாகிறது.


கட்டுப்பாட்டு நடவடிக்கை


ஆக்கிரமிப்பு இனங்களைக் கையாள்வதற்கான பல சர்வதேச கொள்கைகள் நடைமுறையில் உள்ளன என்பதையும், உயிரியல் படையெடுப்புகளின் வீதத்தைக் குறைப்பதில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக அராய்ச்சியாளர்கள் பெருமளவில் நம்புவதாகவும் இந்த ஆய்வு ஒப்புக்கொண்டது. ஒரு முக்கியமான ஒழுங்குமுறை கப்பல்களின் நிலைப்படுத்தல் நீர் மற்றும் வண்டல் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான சர்வதேச மாநாடு ஆகும். இது நிலைப்படுத்தல் நீர் மேலாண்மை மாநாடு (Ballast Water Management Convention) என்றும் அழைக்கப்படுகிறது. கப்பல்களின் நிலைப்படுத்தும் நீர் மூலம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தீங்கு விளைவிக்கும் நீர்வாழ் உயிரினங்கள் பரவுவதைத் தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


அதேபோல், உயிரினப் பன்முகத்தன்மை குறித்த பன்னாட்டு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள விதிமுறைகள், இந்தியா உட்பட ஒப்பந்தத்தில் பங்கேற்கும் நாடுகளை, “புலம்பெயர் உயிரினங்களின் அறிமுகத்தைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அல்லது அவை புலம்பெயர் உயிரினங்களால் சுற்றுச்சூழல் அமைப்புகள், வாழிடங்கள் அல்லது உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை அழிக்கவும்” அழைப்பு விடுக்கின்றன.


இந்த சர்வதேச ஒப்பந்தங்கள் ஆக்கிரமிப்பு உயிரினங்களால் ஏற்படும் அச்சுறுத்தலை உலகளாவிய முறையில் அங்கீகரிப்பதையும், பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் அவற்றின் பரவலைக் குறைப்பதற்கான முயற்சிகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


மேலாண்மை செலவுகளைப் பொறுத்தவரை, புதிய படையெடுப்புகளைத் தடுப்பது, ஏற்கனவே நிறுவப்பட்ட உயிரினங்களை முற்றிலுமாக அழிக்க முயற்சிப்பதும் அவற்றில் அடங்கும். மற்றொரு அணுகுமுறை, அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சேதத்தைக் குறைக்க வேண்டும்.


அறிக்கையிடப்பட்ட செலவுகளில் உள்ள பெரிய முரண்பாடுகள், மேம்பட்ட தரவு சேகரிப்பு, செலவினங்களின் விரிவான கண்காணிப்பு மற்றும் வலுவான அறிக்கையிடல் வழிமுறைகள் ஆகியவற்றின் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


"எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்காவில் செலவு மதிப்பீடுகள் மிகவும் குறைவாக இருந்தாலும், சேதங்கள் குறைவாகவே உள்ளன என்று அர்த்தமல்ல," என்று லியுங் விளக்கினார்.


இந்த ஆய்வு ஆக்கிரமிப்பு இனங்களின் நிலை குறித்து எதுவும் கூறவில்லை என்றாலும், இது ஒரு செயல் அழைப்பாக இருக்கலாம். இதன் குறிப்பிட்ட பகுப்பாய்வு மற்றும் தரவுத்தளம், லியுங்கின் கூற்றுப்படி, அளவிடப்பட்ட பொருளாதார செலவுகளை அடிப்படையாகக் கொண்டது, "ஏனெனில் இது பெரும்பாலும் அளவிட எளிதாக இருக்கிறது மற்றும் மக்கள் பணம் குறித்து புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது."


மோனிகா மொண்டல் ஒரு தன்னிச்சையான, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்.



Original article:

Share: