ஜிஎஸ்டி-2.0 இந்திய இளைஞர்களை மேம்படுத்தும் -சுனிதா ரெட்டி

 இந்த சீர்திருத்தம், நிதிக் கொள்கையை இளம் மக்களின் விருப்பங்களுடன் இணைக்கும்.


இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் மக்கள்தொகைதான். இந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இது நாட்டின் பொருளாதாரம் விருப்பம், தொழில் மற்றும் நுகர்வு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. இந்த மக்கள்தொகை பலன் வெறும் புள்ளிவிவரம் அல்ல. இது லட்சிய மற்றும் உலகளவில் இணைக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்தின் துடிப்பை பிரதிபலிக்கிறது. ஜிஎஸ்டி-2.0 என்பது இந்த பலன்களைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு சீர்திருத்தமாகும். இது வரிவிதிப்புகளை எளிமையாக்குவதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்கள் மீதான சுமைகளைக் குறைப்பதன் மூலமும், காப்பீடு போன்ற சேவைகளுக்கு விலக்கு அளிப்பதன் மூலமும், GST-2.0 இன் புதிய அமைப்பு, வீடு வாங்கும் திறனை வலுப்படுத்துகிறது மற்றும் இளம் இந்தியாவின் லட்சியங்களை ஆதரிக்கிறது.


இந்தியாவின் வீட்டுச் செலவு


தனியார் நுகர்வு (Private consumption) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60%-க்கும் அதிகமாக உள்ளது. இது, பல பெரிய பொருளாதாரங்களைவிட மிக அதிகமாகும். எனவே, வீட்டுச் செலவினத்தை தேசிய வளர்ச்சியின் மிக சக்திவாய்ந்த இயக்கியாக ஆக்குகிறது. குடும்பங்கள் வரிகளைச் சேமிக்கும்போது, சேமிப்பு சிறியதாக இருந்தாலும் அவர்களின் செலவழிக்கக்கூடிய வருமானம் அதிகரிக்கிறது. இது மில்லியன் கணக்கான வீடுகளில் நிகழும்போது, ​​விளைவு மிகப்பெரியது. இந்த சேமிப்புகள், அடிப்படைத் தேவைகள் முதல் கல்வி, சுகாதாரம், வீடுகள் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகள் வரை பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான குறிப்பிடத்தக்க தேவையை அதிகரிக்கிறது. ஜிஎஸ்டி-2.0 இந்த பெருக்கி விளைவைக் (multiplier effect) ஆதரிக்கிறது. இது, பேரியல்-நிலையில் (macro-level) மலிவு என்பது வளர்ச்சியைத் தூண்டுகிறது என்பதை இது உறுதி செய்கிறது.

இளம் குடும்பங்களுக்கு, சமமான மாதாந்திர தவணைகள் (equated monthly instalments (EMI)), சுகாதார-பராமரிப்பு செலவுகள் மற்றும் கல்வி செலவுகள், சீர்திருத்தம் உண்மையான நிவாரணத்தை வழங்குகிறது. அத்தியாவசிய பொருட்கள் மீதான குறைக்கப்பட்ட வரிகள் மாதாந்திர நிதி அழுத்தத்தை குறைக்கின்றன. அதே நேரத்தில், காப்பீடு போன்ற முக்கியமான சேவைகளுக்கான விலக்குகள் பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றன. நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் உள்ள பல குடும்பங்களுக்கு, சீர்திருத்தம் ஒரு லட்சியத்தை ஒத்திவைப்பதற்கும் அதை விரைவில் அடைவதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். அன்றாட வாழ்க்கையை சற்று மலிவாக மாற்றுவதன் மூலம், GST-2.0 வீட்டு உரிமை, கல்வி அல்லது சுகாதாரப் பாதுகாப்பு போன்ற நீண்டகால இலக்குகளை மேலும் அடையக்கூடியதாக ஆக்குகிறது.


பிரச்சனைகளை சரிசெய்தல், இந்தியாவின் வளர்ச்சி திறனைத் திறப்பது


சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டு சந்தாக்களில் GST விலக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இந்தியா எப்போதும் குறைந்த காப்பீட்டு ஊடுருவலைக் கொண்டுள்ளது. மேலும், இதற்கு முக்கியக் காரணம் செலவு ஆகும். ஒரு இளம் பணியாளர் ஏற்கனவே EMIகள், மாணவர் கடன்கள் மற்றும் கூடுதல் செலவுகளை நிர்வகிக்கிறார். அவர்களுக்கு, காப்பீடு பெரும்பாலும் தேவையற்ற சுமையாக உணரப்பட்டது. வரிச்சுமையை நீக்குவது அந்த சமன்பாட்டை மாற்றுகிறது. நிதிப் பாதுகாப்பு என்பது ஒரு தனி நபர் தேர்வு மட்டுமல்ல, தேசிய முன்னுரிமையும் என்பதை இது ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது. காலப்போக்கில், இந்த நடவடிக்கை காப்பீட்டு பரவலை விரைவுபடுத்தும், குடும்பத்தின் பின்னடைவை வலுப்படுத்தும் மற்றும் திடீர் மருத்துவ அல்லது நிதித் தாக்கங்களுக்கு குடும்பங்களின் பாதிப்பைக் குறைக்கும். இதன் செயல்பாட்டில், இது ஒரு ஆரோக்கியமான, மிகவும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குகிறது. அத்தகைய சமூகத்தில், ஆபத்து பகிரப்படுகிறது. இது தனிநபர்களால் மட்டும் சுமக்கப்படுவதில்லை.


இந்த சீர்திருத்தமானது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (micro, small, and medium enterprises (MSMEs)) சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வணிகங்கள் 110 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வேலைக்கு பணியமர்த்துகின்றன. அவை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிதும் பங்களிக்கின்றன. பல காலங்களாக, சிக்கலான இணக்கம் மற்றும் சீரற்ற வரி கட்டமைப்புகள் பல சிறிய நிறுவனங்களை முறைப்படுத்துவதில் இருந்து ஊக்கப்படுத்தியுள்ளன. GST-2.0 இந்த செயல்முறைகளை எளிதாக்குகிறது. தாக்கத்தைக் குறைக்கிறது மற்றும் முறையான பொருளாதாரத்தில் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்கிறது. இளம் தொழில்முனைவோருக்கு, இது கடனுக்கான எளிதான அணுகல், விநியோகச் சங்கிலிகளில் அதிகத் தெரிவுநிலை மற்றும் அளவிடக்கூடிய வணிகங்களை உருவாக்குவதில் வலுவான நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்குகிறது. MSME-களுக்கான பாதையை எளிதாக்குவதன் மூலம், சீர்திருத்தமானது இளம் இந்தியாவிற்கு வேலைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் துறையை வலுப்படுத்துகிறது.


இளைஞர்களால் இயக்கப்படும் நுகர்வு ஒரு நல்லொழுக்க சுழற்சியை உருவாக்குகிறது. மலிவு விலை அதிகரிக்கும்போது, ​​தேவை அதிகரிக்கிறது. அதிகரித்துவரும் தேவை புதிய முதலீடுகளை ஊக்குவிக்கிறது. முதலீடுகள் வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன. வேலைவாய்ப்பு மேலும் நுகர்வுக்குத் தூண்டுகிறது. இந்த சுழற்சி, ஒருமுறை வலுப்பெற்றால், தன்னிறைவு பெறுகிறது. ஜிஎஸ்டி-2.0 இந்த சுழற்சியை இளமை மற்றும் லட்சிய தேசத்தின் உண்மைகளுடன் நிதிக் கொள்கையை சீரமைப்பதன் மூலம் வளர்க்கிறது. நுகர்வு என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைக்கும் கூட்டு சக்தி (collective force) என்பதை அது அங்கீகரிக்கிறது.


ஜிஎஸ்டி-2.0 இந்தியாவின் வரி பயணத்தில் ஒரு முக்கிய அடையாளமாகும்


மலிவு விலை எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது கணிக்கும் தன்மையும். வெளிப்படையான, நிலையான மற்றும் நிலையான ஒரு வரி அமைப்பு இளம் தொழில் வல்லுநர்களுக்கு அவர்களின் நிதி எதிர்காலத்தைத் திட்டமிடும் நம்பிக்கையை வழங்குகிறது. தொழில்முனைவோர்களும் தங்கள் இணக்கச் செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கமாக இருக்காது என்பதை அறிவதன் மூலம் பயனடைகிறார்கள்.


ஜிஎஸ்டி-2.0, அதன் இரு அடுக்கு அமைப்புடன், இந்த முன்கணிப்புத் தேவையை நிவர்த்தி செய்கிறது. இந்தியாவின் பொருளாதாரப் பயணம் நியாயமான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தால் ஆதரிக்கப்படும் என்று குடிமக்களுக்கு உறுதியளிக்கிறது. குறைந்த விகிதத்தில் வழங்கப்படும் உடனடி நிதி நிவாரணத்தைப் போலவே அந்த நம்பிக்கையும் முக்கியமானது.


இன்று இந்தியாவைப் போல ஒரு சில நாடுகள் மக்கள்தொகை வாய்ப்பை அனுபவித்துள்ளன. ஆனால், அத்தகைய பலன்கள் சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் ஆபத்துகளாகவும் மாறும். வாய்ப்புகள் இல்லாத இளைஞர்கள் விரைவில் ஏமாற்றமடைந்து விடுவார்கள். ஜிஎஸ்டி-2.0 என்பது இந்தியாவின் இளைஞர்களின் ஈவுத்தொகை வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு படியாகும். ஒரு இளம் மக்களின் விருப்பங்ளுடன் நிதி சீர்திருத்தத்தை சீரமைப்பதன் மூலம், உள்ளடக்கிய, நுகர்வு-தலைமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நிலைமைகளை அது உருவாக்குகிறது.


ஒரு புதிய அடித்தளம்


இந்தியா ஒரு முதிர்ச்சியடைந்த, நுகர்வுசார்ந்த பொருளாதாரமாக மாறும்போது, ​​ஜிஎஸ்டி-2.0, இளைஞர்களின் விருப்பங்களை தேசியளவில் உந்துதலுக்கு செலுத்துவதற்கான நிதிக் கட்டமைப்பை வழங்குகிறது. இது நிதித் தடைகளைக் குறைக்கும், பாதுகாப்பை ஊக்குவிக்கும், தொழில்முனைவோரை ஆதரிக்கும் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் சீர்திருத்தமாகும். மிக முக்கியமாக, இது இன்றைய குடும்பங்களுக்கான சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தத் தலைமுறை கட்டமைக்கும் இந்தியாவுக்கான அடித்தளமும்கூட. இளம் இந்தியாவை அதன் எதிர்காலத்தைச் செலவழிக்கவும், சேமிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் அதிகாரமளிப்பதன் மூலம், ஜிஎஸ்டி-2.0 நாட்டின் பொருளாதார வாக்குறுதியின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது.


சுனீதா ரெட்டி அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.



Original article:

Share: