முக்கிய அம்சங்கள்:
— இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை, தேசிய சராசரி 1000 பிறப்புகளுக்கு 25 என்று கூறுகிறது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், 2022-ஆம் ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு 5.6 குழந்தை இறப்பு விகிதத்தைக் (Infant Mortality Rate (IMR) கொண்ட அமெரிக்காவை விட மாநிலத்தின் குழந்தை இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று கூறினார். கேரளாவின் குழந்தை இறப்பு விகிதம் நாட்டிலேயே மிகக் குறைவு என்று அவர் கூறினார்.
— பல ஆண்டுகளாக, சுகாதாரத் துறையில் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக கேரளாவின் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
— மாநில பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறையின் கூற்றுப்படி, கேரளாவின் குழந்தை இறப்பு விகிதம் 2010ஆம் ஆண்டில் 7.42 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 8.2 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் இது பல ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
— 2023 ஆம் ஆண்டின் மாநில முக்கிய புள்ளிவிவரங்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பெரும்பாலான குழந்தை பிறப்புகள் மருத்துவமனை பிரசவங்களாகவே உள்ளன என்பதைக் காட்டுகிறது. கிராமப்புறத்தில் மொத்த பிரசவங்களில் 96.16 சதவீதமும், நகர்ப்புறத்தில் மொத்த பிரசவங்களில் 99.88 சதவீதமும் 2023 ஆம் ஆண்டில் மருத்துவமனை பிறப்புகளாக பதிவாகியுள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
— டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கடந்த பத்தாண்டுகளில் தங்கள் குழந்தை இறப்பு விகிதத்தை ((Infant Mortality Rate (IMR)) பாதிக்கும் மேலாகக் குறைத்துள்ளன. இது நாடு முழுவதும் நிலையான முன்னேற்றம் அடைந்துள்ள குழந்தை ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியில் மிகப்பெரிய நன்மைகளைப் பதிவு செய்துள்ளது.
— 2023ஆம் ஆண்டு மாதிரி பதிவு கணக்கெடுப்பின் சமீபத்திய தரவு, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 37 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இது 2013-ல் 1,000 பிறப்புகளுக்கு 40 இறப்புகளிலிருந்து 2023-ஆம் ஆண்டில் 25-ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 2021-ஆம் ஆண்டில் உலக சராசரியை விடக் குறைந்துள்ளது. மேலும், உலகளாவிய விகிதத்தைவிட வேகமாகச் சரிவைக் காட்டுகிறது. ஆனால், இது ஆசியாவின் சராசரியுடன் இன்னும் சாதகமற்றதாக உள்ளது. அங்கு குழந்தை இறப்பு விகிதம் சுமார் 17.4 ஆகும்.
— நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் முந்தைய ஆண்டைவிட ஒரு புள்ளி மேம்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், சராசரி முன்னேற்றம் 1.4 புள்ளிகளாக உள்ளது.
— ஒற்றை இலக்க குழந்தை இறப்பு விகிதம் கொண்ட ஒரே பெரிய மாநிலமாக கேரளா உள்ளது. 1,000 பிறப்புகளுக்கு ஒரு வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளனர். இது பெரும்பாலான வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்க விகிதமாகும். ஆனால், ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் குழந்தை இறப்பு விகிதத்தில் இந்த மாநிலம் மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. ஆண் குழந்தைகளுக்கு ஒன்பது மற்றும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு என்ற விகிதம் உள்ளது.
— மணிப்பூர், சிக்கிம் மற்றும் கோவா போன்ற சிறிய மாநிலங்களிலும் ஒற்றை இலக்க குழந்தை இறப்பு விகிதம் உள்ளது. ஏறக்குறைய அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ளது.
— சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டிலேயே அதிக குழந்தை இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன. 1,000 பிறப்புகளுக்கு 37 இறப்புகள் ஏற்படுகின்றன. ஒடிசா மற்றும் அசாம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 1,000 பிறப்புகளுக்கு தலா 30 இறப்புகள் ஏற்படுகின்றன.