காலநிலை சவால்களை எதிர்கொள்ள, நகரங்கள் வலுவான நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அவை, ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் மற்றும் குடிமக்களின் ஆதரவைப் பெற வேண்டும்.
இந்தியாவின் எதிர்காலத்திற்கான திறவுகோல் நகரங்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளில், இந்திய நகரங்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமான புதிய வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 25 ஆண்டுகளில், நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகை கிட்டத்தட்ட ஒரு பில்லியனாக உயரும், சில மெகாசிட்டிகள் தனிப்பட்ட நாடுகளைவிட பெரியதாக மாறும். நகர்ப்புற வளர்ச்சியின் இந்த அதிர்ச்சியூட்டும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் நகரங்கள் அதன் ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரின் திறமை மற்றும் தொழில்முனைவோரை வெளிக்கொணரும் எதிர்காலத்திற்கான வரைபடத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
நகர்ப்புற உள்கட்டமைப்பின் பெரும்பகுதி இன்னும் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்படாமல் இருப்பதால், இந்தியாவின் நகரங்கள் எதிர்காலத்திற்குத் தயாராகும் வாய்ப்பின் குறுகிய காலத்தை மட்டுமே வழங்குகிறது. 2070-க்குள், அவர்கள் 144 மில்லியனுக்கும் அதிகமான புதிய வீடுகளைக் கட்டவேண்டும். தற்போதுள்ள இருப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். வீட்டுவசதியுடன், இந்த பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு போக்குவரத்து அமைப்புகள் மற்றும் நகராட்சி சேவைகளையும் உருவாக்க வேண்டும்.
முக்கியமாக, புதிய உள்கட்டமைப்பு காலநிலை மாற்றத்தின் வளர்ந்துவரும் தாக்கங்களைத் தாங்க வேண்டும். காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பில் ஆரம்ப முதலீடுகள் அவசியம். இத்தகைய முதலீடுகள் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர் சேதங்களைத் தவிர்க்க உதவும். அவை எண்ணற்ற உயிர்களையும் காப்பாற்ற முடியும்.
இன்று, வெள்ளம் பெருகும் அபாயத்தை உருவாக்குகிறது. புதிய வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்து வருவதால், இந்தியாவின் நகர்ப்புறங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் புவியியல் அல்லது மேற்பரப்பு வெள்ளத்தின் அபாயத்தை எதிர்கொள்வார்கள். இது, 2030-ம் ஆண்டளவில் $5 பில்லியன் இழப்புகள் ஏற்படக்கூடும். மேலும், 2070-ம் ஆண்டில் $30 பில்லியன் இழப்பு ஏற்படும். அதிகப்படியான மழைநீரை உறிஞ்சக்கூடிய இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை ஊக்குவிக்கிறது மற்றும் வெள்ள எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுகிறது. இது அபாயத்தைக் குறைக்க உதவும். எடுத்துக்காட்டாக, இப்போது 80 சதவீத நகர்ப்புறமாக இருக்கும் பிரேசில், கால்வாய் அமைத்தல் மற்றும் கட்டமைப்பு வெள்ளக் கட்டுப்பாட்டைத் தாண்டி இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியாவிலும், சில நகரங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. கொல்கத்தா நகர அளவிலான வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், சென்னை புயல் நீர் மேலாண்மை மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிக்க வெள்ளத் தயார்நிலையை (water management and flood preparedness) மேம்படுத்துகிறது.
அதிக வெப்பம் மற்றொரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது. தற்போது, நகர்ப்புற வெப்ப தீவு விளைவுடன் இணைந்து தீவிர வெப்பம் முக்கிய இந்திய நகரங்களில் இரவுநேர வெப்பநிலை ஆண்டு முழுவதும் சுற்றியுள்ள பகுதிகளைவிட 3°C முதல் 5°C வரை அதிகமாக உள்ளது. 21-ம் நூற்றாண்டில் வெப்பநிலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரங்கள் அகமதாபாத்தின் வெப்ப செயல் திட்டத்தைப் (Heat Action Plan) பின்பற்றலாம். அவை மரங்களின் பரப்பை அதிகரிக்கலாம். வெப்பத்தை அதிகரிக்கும் கூரைகளை குளிர்ந்த கூரைகளால் மாற்றலாம், அவை செயல்படுத்த எளிதானவை. வெளிப்புற தொழிலாளர்களுக்கான வேலை நேரத்தையும் மாற்றலாம். இந்த நடவடிக்கைகளை இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இறப்புகளைத் தடுக்கலாம். உச்ச கோடை மாதங்களில் பொருளாதார உற்பத்தித்திறனையும் இது பாதுகாக்க முடியும்.
தற்போது, நகர்ப்புற வீடுகள் வெள்ளம், தீவிர வெப்பம், சூறாவளி, நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கங்ளால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. 2070-ம் ஆண்டிற்குள் பாதிக்கு மேல் வீடுகள் கட்டப்படாமல் இருப்பதால், இந்தப் புதிய வீடுகள் எவ்வாறு திட்டமிடப்படுகின்றன, அமைந்துள்ளன, வடிவமைக்கப்பட்டுள்ளன, கட்டப்படுகின்றன, மற்றும் பராமரிக்கப்படுகின்றன என்பது நகரங்கள் மற்றும் அதன் குடிமக்கள்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னோக்கிய திட்டமிடலுடன் புதிய வீடுகள் சிறிய நகர வடிவமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்வது, இந்தியாவின் நகரங்களை மேலும் செழுமையாகவும், உள்ளடக்கியதாகவும், காலநிலைக்கு ஏற்பவும் மாற்ற உதவும்.
ஒரு நகரத்தின் உற்பத்தித்திறனுக்கும் அதன் மக்களுக்கும் திறமையான போக்குவரத்து மிகவும் முக்கியமானது. இருப்பினும், இன்று, இந்தியாவின் நகர்ப்புறச் சாலைகளில் கால் பகுதிக்கும் மேலான பகுதிகள் நேரடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில நகரங்களில், வெறும் 10 முதல் 20 சதவீத சாலைகள் வெள்ளத்தில் மூழ்கினால், அவற்றின் போக்குவரத்து அமைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாதிக்கப்படும். வெள்ள அபாயங்களை வரைபடமாக்குதல், வடிகால்களை மேம்படுத்துதல், செல்ல முடியாத சாலைகளுக்கு மாற்று வழிகளை உருவாக்குதல், வெள்ளப் பாதுகாப்பு மற்றும் சாலைப் பராமரிப்பில் முதலீடு செய்தல் ஆகியவை பருவநிலையால் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க உதவும். கூடுதலாக, நகராட்சி சேவைகளை நவீனமயமாக்குவதில் பெரிய முதலீடுகள், கழிவு சேகரிப்பு மற்றும் கழிவுகளை ஆற்றலாக மாற்றுவது, காற்று, நீர் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தலாம். இது நகர்ப்புற உற்பத்தித்திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு பரந்த அளவிலான பலன்களைத் தரும்.
இந்த சவால்களை எதிர்கொள்ள, நகரங்கள் தங்கள் நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும், ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும், மேலும் அரசாங்கம் மற்றும் குடிமக்கள் இருவரின் ஆதரவையும் பெற வேண்டும். ஏனெனில், இந்த முயற்சி தனியாகக் கையாள முடியாத அளவுக்கு பெரிய பணியாகும். இந்த முக்கிய முயற்சியை இயக்குவதற்கு திறன், புதுமையான நிதி மற்றும் தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை கொண்டுவர தனியார்துறை ஈடுபாட்டை ஊக்குவிப்பது சம அளவில் முக்கியமானது. அடுத்த முப்பதாண்டுகளில், காலநிலை-எதிர்ப்பு மற்றும் குறைந்த கார்பன் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான செலவு $10.95 டிரில்லியன் ஆகும். முதலீடு மிகப்பெரியதாக இருந்தாலும், ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களைச் சேமிக்கவும், முதலீட்டை ஈர்ப்பதன் மூலமும், புதிய வேலைகளை உருவாக்குவதன் மூலமும், இந்திய மக்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்துவதன் மூலமும் நகர்ப்புற வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இப்போது செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியாவில் உலக வங்கியின் தேசிய இயக்குநராக கோவாமே உள்ளார். திவாரி மற்றும் கிகுடகே ஆகியோர் உலக வங்கி நிபுணர்கள் ஆவர். அவர்கள் உலக வங்கியின் புதிய அறிக்கையான Towards Resilient and Prosperous Cities in India-ன் (இந்தியாவில் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வளமான நகரங்களை நோக்கி) முக்கிய ஆசிரியர்கள் ஆவர்.