இந்தத் தீர்ப்பு ஒரு கோட்பாட்டு கேள்வியை மீண்டும் எழுப்புகிறது: அரசியலமைப்பின் 5-வது மற்றும் 6-வது அட்டவணைகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட பழங்குடி பழக்கவழக்கங்களை சமத்துவத்திற்கான அரசியலமைப்பு கொள்கைகள் எவ்வளவு தூரம் மீற முடியும்?
இந்திய அரசியலமைப்பின் 342-வது பிரிவின் கீழ், பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த கோண்ட் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், அவர்களின் பழங்குடி பழக்கவழக்கங்கள் மூதாதையர் சொத்தை வாரிசாகப் பெற உரிமை உண்டு என்றும் இந்த தீர்ப்பு வழக்கமான அங்கீகாரம் (customary recognition) அளிக்கப்படாவிட்டாலும், குடும்பச் சொத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜூலை 17 அன்று, நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒரு வழக்கில் பின்பற்றுவதற்கு எந்த சட்டமோ வழக்கமோ இல்லை என்றால், நீதிமன்றங்கள் நீதி, சமத்துவம் மற்றும் மனசாட்சியின்படி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு ஒரு கோட்பாட்டு கேள்வியை மீண்டும் எழுப்புகிறது: அரசியலமைப்பின் 5-வது மற்றும் 6-வது அட்டவணைகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட பழங்குடி பழக்கவழக்கங்களை, சமத்துவத்திற்கான அரசியலமைப்பு கொள்கைகள் எவ்வளவு தூரம் மீற முடியும்?
பட்டியல் பழங்குடியினரை நிர்வகிக்கும் சட்டங்கள் என்ன?
1956ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம் (Hindu Succession) இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களுக்கான வாரிசுரிமை விதிகளை அமைக்கிறது. இருப்பினும், பிரிவு 2(2) இந்த சட்டம் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அவர்களைச் சேர்க்காவிட்டால், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்குப் பொருந்தாது என்று கூறுகிறது. கோண்ட் பழங்குடியினருக்கு எந்த அரசாங்க உத்தரவும் இல்லை. எனவே, அவர்கள் தங்கள் சொந்த பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள். அவை பெரும்பாலும் எழுதப்படுவதில்லை, உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் பகுதி வாரியாக வேறுபடுகின்றன.
இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 3, ‘வழக்கம்’ (custom) என்பது பழமையானதாகவும், உறுதியானதாகவும், நியாயமானதாகவும், சட்டத்தின் சக்தியைப் பெறுவதற்கு பொதுக் கொள்கைக்கு எதிரானதாகவும் இல்லாத ஒன்றாக வரையறுக்கிறது. ஆனால், ஆவணங்கள் இல்லாத நிலையில், அத்தகைய பழக்கவழக்கங்கள் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். பலமுறை வழக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவை தெளிவான மற்றும் வலுவான ஆதாரங்களுடன் காட்டப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் கூறியுள்ளன.
2025-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்கில் தெளிவான ஆதாரத்திற்கான தேவை முக்கியமானது. கோண்ட் பெண்ணின் குழந்தைகள், தங்கள் மூதாதையர் சொத்தில் தங்கள் சகோதரர்களைப் போலவே தங்கள் தாய்க்கும் உரிமை உண்டு என்று கூறினர். இருப்பினும், கீழ் நீதிமன்றங்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தன. ஏனெனில், ஆண்களைப் போலவே பெண்களும் வாரிசாகப் பெற அனுமதிக்கும் கோண்ட் வழக்கத்தை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும் இதை ஒப்புக்கொண்டது.
உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?
உச்சநீதிமன்றம் இந்த முடிவுகளை மாற்றியமைத்து, விசாரணை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இந்த வழக்கை பெண்கள் ஆணாதிக்கமாக விலக்கப்பட வேண்டும் என்ற முன்முடிவுடன் பார்த்ததாகக் கவனித்தது, அதாவது பெண்கள் தங்களுக்கு உரிமை உள்ளதை நிரூபிக்காவிட்டால் அவர்களுக்கு உரிமை இல்லை என்று கருதப்பட்டது. "மாற்று சூழ்நிலையும் சாத்தியமாக இருக்கலாம்," என்று நீதிபதிகள் கூறினர், "அதாவது விலக்குதல் அல்ல, மாறாக உள்ளடக்குதல் முன்முடிவாக எடுக்கப்பட்டு, பின்னர் பெண்கள் சொத்து உரிமை பெற தகுதியற்றவர்கள் என்பதை எதிரிகள் நிரூபிக்க வேண்டும். இந்த ஆணாதிக்க மனப்போக்கு இந்து சட்டத்திலிருந்து வரும் ஒரு அனுமானமாகத் தோன்றுகிறது, இது இந்த வழக்கில் இடமில்லை." மேலும், நீதிபதிகள் கூறியதாவது, "சட்டத்தில் வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிட்டால், பெண் வாரிசுக்கு சொத்தில் உரிமையை மறுப்பது பாலின பாகுபாட்டையும் ஆணாதிக்கத்தையும் மேலும் தீவிரப்படுத்துகிறது, இதை சட்டம் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்."
அரசியலமைப்பின் 14-வது பிரிவு, அரசு அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறுகிறது. அவர்களை வித்தியாசமாக நடத்துவதற்கு சரியான காரணம் இல்லாவிட்டால் அந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இது நியாயமான வகைப்பாடு (reasonable classification) என்று அழைக்கப்படுகிறது. அது செல்லுபடியாகும் வகையில் இருக்க, வேறுபாடு உண்மையானதாகவும் சட்டத்தின் குறிக்கோளுடன் இணைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம், பிரிவு 14-ஐ குறிப்பிட்டு அமர்வு, பெண்கள் சொத்துக்களை வாரிசாகப் பெறுவதை எந்தச் சட்டமும் தடை செய்யாதபோது, ஆண்கள் மட்டுமே தங்கள் மூதாதையர்களிடமிருந்து சொத்துக்களை வாரிசாகப் பெற அனுமதிக்க எந்த தொடர்பும் அல்லது நியாயமான காரணமும் இல்லை என்று கூறியது.
பாலின அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் பிரிவு 15(1); சமத்துவமின்மையை ஒழிக்க (discrimination based on gender) சமத்துவமின்மையை நீக்க (eliminate inequalities) அரசாங்கத்தைக் கேட்கும் பிரிவு 38 மற்றும் பலவீனமான குழுக்களை நியாயமற்ற முறையில் நடத்துதல் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாக்கக் கோரும் (social injustice and all forms of exploitation) பிரிவு 46 ஆகியவற்றையும் நீதிமன்றம் பயன்படுத்தியது.
பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் சட்டத்தில் செய்யப்பட்ட பரிணாம வளர்ச்சியகளை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 2005ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் திருத்தத்தின் குறிக்கோள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை, குடும்பச் சொத்தை வாரிசாகப் பெறுவதிலிருந்து மகள்களைத் தவிர்ப்பது அவர்களின் பாலினத்தின் காரணமாக அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும், அவர்களின் அரசியலமைப்புச் சமத்துவ உரிமையை மீறுவதாகவும், அந்த பெண்ணின் அடிப்படை உரிமையை ஒடுக்குவதற்கும் வகுத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
2005ஆம் ஆண்டு திருத்தத்தின் நோக்கத்தை நீதிமன்றம் இந்து சட்டத்தை நேரடியாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக வழக்கம் அல்லது சட்டம் அமைதியாக இருக்கும் அனைத்து தீர்ப்புகளையும் வழிநடத்த வேண்டிய அரசியலமைப்பு நெறிமுறைகளை விளக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இதைச் செய்வதன் மூலம், நீதிமன்றம் தனது முடிவை ஒரு பரந்த அரசியலமைப்பு கொள்கைக்குள் (constitutional morality) வைத்தது. அங்கு சமத்துவம் என்பது ஒரு செல்லுபடியாகும் வழக்கத்தால் தெளிவாக மாற்றப்படாவிட்டால் அது நிலையான விதியாகும்.
இந்த தீர்ப்பின் தாக்கம் என்ன?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் தாக்கம் சிறியதாக இருக்கலாம். ஏனென்றால், ஒவ்வொரு வழக்குக்கும் இன்னும் வழக்கத்திற்கான சான்று தேவைப்படுகிறது. மேலும், நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகப் பார்க்கும். ஆனால், தீர்ப்பு யார் எதை நிரூபிக்க வேண்டும் என்பதை மாற்றுகிறது: பெண்கள் வாரிசுரிமையாகப் பெற முடியாது என்று கருதி, அவர்களால் முடியும் என்று நிரூபிக்கச் செய்வதற்குப் பதிலாக, அது இப்போது சமத்துவம் என்ற யோசனையுடன் தொடங்குகிறது மற்றும் விளக்குவதக்கான காரணங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்று கோருகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு நியாயத்தையும் நடைமுறை நீதியையும் சமநிலைப்படுத்துகிறது. அரசியலமைப்பால் உறுதியளிக்கப்பட்ட சமத்துவம் நிலைநிறுத்தப்படுவதையும், பழக்கவழக்கங்களால் தடுக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் அதே வேளையில், பழங்குடி அடையாளங்களை மதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த தீர்ப்பு, 30-ஆண்டுகளுக்கு முன்பு மது கிஷ்வர் vs பீகார் மாநிலம் (1996) வழக்கில் எடுக்கப்பட்ட ஒரு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்கிறது. பழங்குடியினப் பெண்களை வாரிசுரிமையிலிருந்து விலக்கிய சோட்டாநாக்பூர் வழக்கச் சட்டங்களை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பழக்கவழக்கங்களில் திடீர் சீர்குலைவு சமூக கட்டமைப்புகளை சீர்குலைக்கும் என்று வாதிட்டது. இருப்பினும், சமத்துவத்தை மீறும் பழக்கவழக்கங்கள் அரசியலமைப்பு ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல என்று நீதிபதி ராமசாமி தனித்தனியாகக் குறிப்பிட்டிருந்தார்.
2025ஆம் ஆண்டு தீர்ப்பு இந்த சமநிலையை மாற்றுகிறது. அரசியலமைப்பு கொள்கைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வழக்கத்தைக் கருதுவதற்குப் பதிலாக, வழக்கம் நிச்சயமற்றதாகவோ அல்லது நிரூபிக்கப்படாததாகவோ இருக்கும் இடங்களில், நீதிமன்றங்கள் பிரிவு 14-ஐப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. சமத்துவத்தையும் சுயாட்சியையும் இணைத்து, பழங்குடியினரின் சுயாட்சியைப் பாதுகாப்பது என்பது பாகுபாட்டை வைத்திருப்பதைக் குறிக்காது என்று நீதிமன்றம் கூறுகிறது.