பிரதமர் கதி சக்தி திட்டம் (PM Gati Shakti) என்றால் என்ன? - குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையானது (Department of Drinking Water and Sanitation (DDWS)) திங்களன்று ஒரு ஒப்பந்தத்தில் (memorandum of agreement (MoA)) கையெழுத்திட்டது. இது தொடர்பாக பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவிசார் தகவல் நிறுவனத்துடன் (BISAG-N) பிரதமர் கதி சக்தி திட்டத் (PM Gati Shakti) தளத்தை உருவாக்கியது.


பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவிசார் தகவல் நிறுவனம் (BISAG-N) என்பது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் 1860-ம் ஆண்டு சங்க பதிவுச் சட்டத்தின் (Societies Registration Act) கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.


இந்த கூட்டாண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜல் சக்தி அமைச்சகம் குறிப்பிட்டதாவது, “ஜல் ஜீவன் திட்டம் (Jal Jeevan Mission (JJM)) மற்றும் தூய்மை இந்தியா திட்டம் (கிராமம்) (Swachh Bharat Mission (Grameen) [SBM(G)]) தரவுத்தளத்துக்கான, புவியியல் தகவல் அமைப்பு-ஒருங்கிணைந்த முடிவு-ஆதரவு தளத்தை (GIS-integrated decision-support platform) மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நிலையை இந்த கூட்டாண்மை குறிக்கிறது.


“ஒப்பந்தத்தின் கீழ், பாஸ்கராச்சாரியா தேசிய விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவிசார் தகவல் நிறுவனமானது (BISAG-N) தரவுத்தளத்தை வடிவமைத்தல், வரைபடங்களை உருவாக்குதல், தரவு இடம்பெயர்வு, மென்பொருளை உருவாக்குதல் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்தல் உட்பட முழு ஆதரவை வழங்கும். தரை கட்டுப்பாட்டு கணக்கெடுப்பு, டிஜிட்டல் புகைப்பட வரைபடவியல், திசையன் தரவு பிடிப்பு மற்றும் கருப்பொருள் வரைபடமாக்குதல் போன்ற மேம்பட்ட அம்சங்களையும் இந்த தளத்தில் இணைக்கும்,” என்று அது கூறியது.


"முக்கியமாக, இந்த முயற்சியானது பிரதமர் கதி சக்தி (PM Gati Shakti) தேசிய முதன்மைத் திட்டத்துடன் இணைக்கப்படும். இந்த இணைப்பு மற்ற துறைகளின் சொத்துக்களுடன் நீர் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை தடையின்றி ஒருங்கிணைக்கும். இந்த ஒருங்கிணைப்பு வள ஒதுக்கீட்டை மேம்படுத்தவும், சேவை வழங்கலை மேம்படுத்தவும் மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தவும் உதவும்," என்று மேலும் கூறியது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை (DDWS) ஏற்கனவே பிரதமர் கதி சக்தி தளத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்களின் வரைபடத்தை சோதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் MoA கையொப்பமிட்டவுடன், ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) கீழ் உருவாக்கப்பட்ட அனைத்து குடிநீர் வளங்களும் இந்த இணையவழி தளத்தில் புவிசார்-குறியிடப்படும் (geo-tagged) என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. இணையவழி தளத்தில் ஜல் ஜீவன் திட்டம் (JJM) வளங்களை வரைபடமாக்குதல் மற்றும் புவிசார்-குறியிடப்படும் எனபது சிறந்த திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தை உறுதி செய்யும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


உங்களுக்குத் தெரியுமா?


2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற குடும்பங்களுக்கும் குழாய் இணைப்புகளை வழங்கும் நோக்கத்துடன், 2019-ம் ஆண்டில் அரசாங்கம் ஜல் ஜீவன் திட்டத்தை (JJM) அறிமுகப்படுத்தியது. அந்த நேரத்தில், நாட்டில் உள்ள 17.87 கோடி கிராமப்புற குடும்பங்களில், சுமார் 14.6 கோடி குடும்பங்களில் (81.67%) குழாய் இணைப்புகள் இல்லை என்று அமைச்சகம் கூறியது.


இதற்காக, ஒட்டுமொத்த ஒதுக்கீடு ரூ.3.60 லட்சம் கோடி ஆகும். இதில் மத்திய அரசிடமிருந்து ரூ.2.08 லட்சம் கோடியும், மாநில அரசுகளிடமிருந்து ரூ.1.52 லட்சம் கோடியும் அடங்கும். இந்த திட்டத்தின் நோக்கம் போதுமான அளவு சுத்தமான குடிநீரை வழங்குவதாகும். இதன்மூலம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் (lpcd) - BIS தரநிலை IS:10500 ஐ பூர்த்தி செய்வதும், தொடர்ந்து அதைச் செய்வதும் ஆகும்.


2019-ல் ஜல் ஜீவன் திட்டம் (JJM) தொடங்கப்பட்டதிலிருந்து, 6.41 லட்சம் நீர் வழங்கல் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மொத்த செலவு ரூ.8.29 லட்சம் கோடி ஆகும். இந்தத் திட்டங்கள் 12.74 கோடி வீடுகளுக்கு குழாய் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதுவரை, ரூ.3.91 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஜல் ஜீவன் திட்டம் (JJM) தரவுத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக 2024-ல் முடிவடைந்தது. இருப்பினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2025 அன்று தனது பட்ஜெட் உரையில், இது 2028 வரை தொடரும் என்றும் அறிவித்தார். இதற்கு மேம்படுத்தப்பட்ட நிதி உதவியுடன் இதன் தொடர்ச்சியை அறிவித்தார்.


2021-ல் தொடங்கப்பட்ட, பிரதமர் கதி சக்தி (PM Gati Shakti) என்பது சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், இரயில்வே, கப்பல் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, மின்சாரம், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து உட்பட 16 அமைச்சகங்களை இணைக்கும் டிஜிட்டல் தளமாகும்.



Original article:

Share: