வெள்ளை இரத்த அணுக்களின் (White Blood Cell (WBC)) கூறுகள் யாவை? - குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


நோபல் பரிசுகள் (Nobel Prizes) பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஒரே அட்டவணையைப் பின்பற்றுகின்றன. முதலில் மருத்துவத்திற்கான பரிசு, அதைத் தொடர்ந்து இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகியவை உள்ளன.


நோயெதிர்ப்பு அமைப்பு (immune system) எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், புற்றுநோய்கள் (cancers) மற்றும் தன்னுடல் எதிர்ப்பு நோய்களுக்கான (autoimmune diseases) சிகிச்சைகளை வளர்ப்பதற்கும் முக்கியமாகும் புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை (peripheral immune tolerance) குறித்த அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


அவர்கள் ஆராய்ந்த ஒரு முக்கிய கேள்வி என்னவென்றால், உடலின் சொந்த செல்களுக்கு தீங்கு விளைவிக்காமல் நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகளை எவ்வாறு தாக்குகிறது?


இந்த கேள்வி நீண்டகாலமாக நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 1980-களில், ஆராய்ச்சியாளர்கள் முக்கிய சகிப்புத்தன்மையை அங்கீகரித்தனர். இதன் மூலம், உடலின் சொந்த புரதங்களை அங்கீகரிக்கும் T செல்கள் அகற்றப்படுகின்றன. T செல்கள் என்பது ஒரு வகையான வெள்ளை இரத்த அணுக்கள் ஆகும். இது உடல் நோய்த்தொற்றுகளை திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது.


முன்னதாக, ஒரு சிறப்பு வகை T செல் மற்ற T செல்களை உடலைத் தாக்குவதைத் தடுக்க முடியும் என்ற கருத்தை விஞ்ஞானிகள் முன்மொழிந்தனர். இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் தவறான ஆதாரங்களை அளித்து, நம்பத்தகாத முடிவுகளை எடுத்ததால், இந்த கோட்பாடு பின்னர் நிராகரிக்கப்பட்டது.


இது இருந்தபோதிலும், சகாகுச்சி பிரபலமான கருத்துக்கு எதிராகச் சென்றார். 1995-ம் ஆண்டில், அவர் ஒரு புதிய வகை "காவல்" T செல் இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டும் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார். இந்த செல்கள் மற்ற T செல்கள் உடலின் சொந்த செல்களைத் தாக்குவதைத் தடுத்தன. அவை ”ஒழுங்குமுறை T செல்கள்” (regulatory T cells) என்று பெயரிடப்பட்டன. மேலும், அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கை ”புற சகிப்புத்தன்மை” (peripheral tolerance) என்று அறியப்பட்டது.


இதைச் சோதிக்க சகாகுச்சி, புதிதாகப் பிறந்த எலிகளிடமிருந்து T செல்கள் முதிர்ச்சியடையும் உறுப்பான ”தைமஸ்” (thymus)-ஐ அகற்றினார். இது T செல்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் என்று அவர் நம்பினார். ஆனால், பிறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, ​​எலிகள் அதற்கு பதிலாக தன்னுடல் எதிர்ப்பு நோய்களை உருவாக்கின. அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, அவற்றின் சொந்த உடலைத் தாக்கத் தொடங்கியது.


நிலைமையைப் புரிந்து கொள்ள, சகாகுச்சி மரபணு ரீதியாக ஒரே மாதிரியான ஆரோக்கியமான எலிகளிலிருந்து T செல்களை எடுத்தார். பின்னர், அவர் இந்த செல்களை தைமஸ் இல்லாத எலிகளுக்கு செலுத்தினார். இந்த எலிகள் தன்னுடல் எதிர்ப்பு நோய்களை உருவாக்கவில்லை. இந்த முடிவு, நோயெதிர்ப்பு மண்டலத்தில் "காவல்" போல செயல்படும் சிறப்பு T செல்கள் இருப்பதாக சகாகுச்சியை நம்ப வைத்தது. இந்த செல்களை எவ்வாறு கண்டறிவது என்பதைக் கற்றுக்கொண்ட பிறகு, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.


ப்ருங்கோவும் மற்றும் ராம்ஸ்டெல்லும் செல்டெக் கைரோசயின்ஸ் என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தனர். வைக்கோல் அடுக்கில் (haystack) ஊசியைக் கண்டுபிடிப்பது போல, இந்த மறைக்கப்பட்ட உறுப்பைத் தேட அவர்கள் முடிவு செய்தனர்.


2001-ம் ஆண்டில், FOXP3 மரபணு, ஸ்கர்ஃபி எலிகளிலும், IPEX எனப்படும் நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களிலும் தன்னுடல் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.


மேலும், இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த கண்டுபிடிப்பு, FOXP3 மரபணு ஒழுங்குமுறை T செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது என்பதை நிரூபிக்க காகுச்சிக்கு உதவியது.


இந்த புதிய T-செல்களின் செயல்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பிறகு, சில கட்டிகள் இந்த ஒழுங்குமுறை T செல்களை அதிக எண்ணிக்கையில் ஈர்க்க முடியும் என்பதை உணர்ந்தனர். இந்த ஒழுங்குமுறை T-செல்கள் கட்டியை மற்ற T செல்களால் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கின்றன.


ஒரு புற்றுநோய் கட்டியில் பல ஒழுங்குமுறை T செல்கள் இருக்கும்போது, ​​அவை மற்ற T செல்கள் புற்றுநோய் செல்களைக் கொல்வதைத் தடுக்கின்றன. இது புற்றுநோயை சிகிச்சையளிப்பதை கடினமாக்குகிறது. Car-T செல் சிகிச்சை இந்த சிக்கலை தீர்க்க முயற்சிக்கிறது. இந்த சிகிச்சையில், ஒரு நபரின் சொந்த நோயெதிர்ப்பு செல்கள் புற்றுநோயை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட மாற்றப்படுகின்றன.


உங்களுக்கு தெரியுமா? 

நோயெதிர்ப்பு அமைப்பு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்ற நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை நடுநிலையாக்குவதன் மூலம் உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்த செயல்முறைக்கு முக்கியமானது நோயெதிர்ப்பு மண்டலத்தின் குறிப்பாக, T-செல்கள் எனப்படும் ஒரு சிறப்பு வகையான வெள்ளை இரத்த அணுக்கள் நோய்க்கிருமியின் செல்கள் மற்றும் சொந்த உடலின் (host body) செல்களை வேறுபடுத்துகிறது.


இந்த அமைப்பு தோல்வியடையும் போது, ​​T-செல்கள் உடலின் சொந்த செல்களைத் தாக்கத் தொடங்கலாம். இது தன்னியக்க நோய் எதிர்ப்பு நோய்களை ஏற்படுத்துகிறது.


T-செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க பயிற்சி அளிக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த பயிற்சி சரியானது அல்ல. ஒழுங்குமுறை T-செல்கள் அல்லது Tregs எனப்படும் T-செல்களின் ஒரு சிறப்புக் குழுவை சகாகுச்சி அடையாளம் கண்டார். அந்த T-செல்கள் உடலின் சொந்த திசுக்களைத் தாக்கினால், இந்த Tregs மற்ற T-செல்களின் செயல்பாட்டை அடக்குகின்றன.


ப்ரூங்கோவும் ராம்ஸ்டலும் சில T-செல்களை Tregs-ஆகச் செயல்படச் செய்யும் மரபணுவைக் கண்டுபிடித்தனர். ஒன்றாக, அவர்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் படத்தை முடிக்கிறார்கள்.


அவர்களின் கண்டுபிடிப்பு தன்னுடல் எதிர்ப்பு நோய்களுக்கு (autoimmune diseases) சிகிச்சையளிப்பதில் முக்கியமானது. நோயெதிர்ப்பு அமைப்பு புதிய உறுப்பை வேறொன்றாக கருதி அதைத் தாக்குவதால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சிக்கலானதாகின்றன. Tregs செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவது இந்த செயல்முறையை எளிதாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.


புற்றுநோயில், எதிர்மாறாக நடக்கலாம். புற்றுநோய் செல்கள் அதிக Tregs-ஐக் ஈர்க்கின்றன. இது புற்றுநோய் செல்களைக் கொல்ல வேண்டிய சாதாரண T-செல்களை சரியாக வேலை செய்ய முடியாமல் செய்கிறது.



Original article:

Share: