தற்போதைய செய்தி:
தரவுத் தொகுப்புகள் மற்றும் பிற கணக்கீட்டு வளங்கள் மீதான கட்டுப்பாட்டின் காரணமாக, பெரிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவில் (AI) நியாயமற்ற சந்தை நன்மையைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள், இந்தியாவின் வளர்ந்துவரும் AI சந்தை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய "கட்டமைப்பு சவாலாக" அறியப்பட்டதாக, இந்திய போட்டி ஆணையம் (CCI) வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
முக்கிய அம்சங்கள் :
— விலைகளை நிர்ணயிப்பதற்காக வழிமுறைகள் மூலம் AI நிறுவனங்கள் கூட்டுச் சேர்வதால் ஏற்படும் அபாயங்களை போட்டி கண்காணிப்பு அமைப்பு எடுத்துக்காட்டியது. நிதி மற்றும் திறமையான ஊழியர்களைப் பெறுவதில் சிறிய AI நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் இது குறிப்பிட்டது.
— AI வளர்ச்சியை நிர்வகிக்க இந்தியாவில் ஒழுங்குமுறை கருவிகள் இருப்பதாக ஆய்வு கூறியது. இருப்பினும், AI-ஐ பாதுகாப்பாகவும், நெறிமுறையாகவும், உள்ளடக்கியதாகவும் பயன்படுத்த சரியான பாதுகாப்புகள், வெளிப்படைத்தன்மை விதிகள் மற்றும் தொழில்துறை தலைமையிலான சுய கட்டுப்பாடு ஆகியவற்றின் அவசியத்தை அது வலியுறுத்தியது.
— நியாயமான போட்டியை ஊக்குவிக்க, நிறுவனங்கள் தங்கள் நிர்வாக செயல்முறைகளைப் பதிவு செய்வதன் மூலம் சுய தணிக்கைகளைச் செய்ய வேண்டும் என்று CCI பரிந்துரைத்தது.
— ஒரு முக்கிய AI கவலை பொறிமுறை கூட்டுச் சேர்க்கை (algorithmic collusion) ஆகும். அங்கு AI விலை நிர்ணய வழிமுறைகள் காலப்போக்கில் ஒத்த விலைகளை நிர்ணயிக்கக் கற்றுக்கொள்கின்றன.
— இது நேரடி மனித ஈடுபாடு இல்லாமல்கூட விலை நிர்ணயம்போல செயல்படக்கூடும். இது கட்டுப்பாட்டாளர்கள் கண்டறிந்து கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது.
— இந்த ஆய்வை வடிவமைக்கும்போது நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், பங்குதாரர்களிடையே AI- வசதியளிக்கப்பட்ட கூட்டு முயற்சி மிகப்பெரிய கவலையாக இருந்தது. அதைத் தொடர்ந்து விலை பாகுபாடு மற்றும் அதிகரித்த நுழைவு தடைகள் இருந்தன. இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு (67 சதவீதம்) AI தொடக்க நிறுவனங்கள், அவற்றை இயக்கும் முக்கிய அடித்தள அடுக்கை விட, பயன்பாட்டு அடுக்கில் கவனம் செலுத்துவதால் கவலைகள் மேலும் அதிகரிக்கின்றன.
— குருகிராமை தளமாகக் கொண்ட மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (MDI) CCI-க்காகத் தயாரித்த இந்த ஆய்வு, AI மேம்பாடு மற்றும் பயன்பாடுகளில் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்காக நிறுவன சுய தணிக்கைகளைப் பரிந்துரைத்தது.
உங்களுக்குத் தெரியுமா?
— AI பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அதன் மையத்தில், குறைந்த முயற்சியில் அதிக சாதனைகளை அடைவதாக இது உறுதியளிக்கிறது. இது புதுமைகளை செயல்படுத்துகிறது மற்றும் செயற்கை பொது நுண்ணறிவு (AGI) அடையப்பட்டால் மனிதனைப் போன்ற நுண்ணறிவுடன் இயந்திரங்கள் மற்றும் தளங்களை உருவாக்க முடியும். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் AI முன்னேற்றத்தை துரிதப்படுத்த முடியும்.
— இந்தியா தற்போது AI-ல் உலகளாவிய கூட்டாண்மை (Global Partnership on AI (GPAI)) அமைப்பிற்க்கு தலைமை தாங்குகிறது மற்றும் தொழில்நுட்பம் மற்றும் AI-ன் எதிர்காலத்தை வடிவமைக்க நம்பகமான கூட்டாண்மைகளை ஊக்குவித்து வருகிறது. நிர்வாகத்தை மேம்படுத்துவதில் GovAI உடனான அதன் வெற்றி, AI அணுகக்கூடியதாகவும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.
— கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India), போட்டிச் சட்டம் (Competition Act) 2002 மூலம் போட்டிச் சட்டத்தை அமல்படுத்துகிறது.
— ராகவன் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, ஏகபோகங்கள் மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம், 1969 (MRTP சட்டம்) ரத்து செய்யப்பட்டு, போட்டிச் சட்டம், 2002-ஆல் மாற்றப்பட்டது.
— சட்டத்தின் முன்னுரை மற்றும் பிரிவு 18-ல் கூறப்பட்டுள்ளபடி, போட்டிக்கு தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை அகற்றுதல், போட்டியை ஊக்குவித்தல் மற்றும் பராமரித்தல், நுகர்வோர் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்தியாவில் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு ஆணையம் பொறுப்பாகும்.