புயல்களைப் புரிந்துகொள்ளுதல் : உருவாக்கம், பெயரிடுதல் மற்றும் காலநிலை மாற்ற தொடர்புகள் பற்றி.. -ரோஷ்னி யாதவ்

 மோந்தா புயல் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மிகவும் கடுமையான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக உள்ளதால், அவை எவ்வாறு உருவாகின்றன, அவை எவ்வாறு பெயரிடப்படுகின்றன மற்றும் காலநிலை மாற்றம் அவற்றை எவ்வாறு மோசமாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.


பிரச்சினை என்ன?


அக்டோபர் 28-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை கடந்த மோந்தா புயலின் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் பயிர்டப்பட்டிருந்த பயிர்களை இந்த புயல் சேதப்படுத்தியது. மின்சாரம் மற்றும் போக்குவரத்தை புயல் பாதித்தது. முன்னதாக, சக்தி புயல் குஜராத் அருகே உருவானது. ஆனால், இந்தியாவை விட்டு நகர்ந்து சென்றது. ஒவ்வொரு ஆண்டும் புயல்கள் உருவாவது தொடர்பாக செய்திகள் வெளியாகின்றன. இந்த குறிப்பிடத்தக்க புவியியல் நிகழ்வை பரந்த கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது அவசியம்.


புயல் என்றால் என்ன? அது எவ்வாறு உருவாகிறது. புயல் கரையைக் கடக்கும்போது என்ன நடக்கிறது?


புயல்  என்பது குறைந்த அழுத்தப் பகுதியின் மையத்தைச் சுற்றி சுழலும் ஒரு பெரிய அளவிலான காற்று அமைப்பாகும். இது கடும் புயல்கள் மற்றும் மோசமான வானிலையுடன் இருக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Disaster Management Authority (NDMA)) கூற்றுப்படி, ஒரு புயல் என்பது வடக்கு அரைக்கோளத்தில் கடிகார சுழற்சிக்கு எதிர்திசையிலும் (anticlockwise), தெற்கு அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் சுழலும் உள்நோக்கிய சுழல் காற்றுகளால்  (inward spiralling winds) வகைப்படுத்தப்படுகிறது. கூடுதல் வெப்பமண்டல புயல்கள் மற்றும் வெப்பமண்டல புயல்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல்களை பரவலாக இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது.


வெப்பமண்டல புயல்கள் (Tropical cyclones)


மகர மற்றும் கடக வெப்பமண்டலங்களுக்கு (Tropics of Capricorn and Cancer) இடையிலான பகுதிகளில் வெப்பமண்டல புயல்கள் உருவாகின்றன. அவை பூமியில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான புயல்கள் ஆகும். புயலின் மைய பகுதிக்கு அருகில் இடியுடன்கூடிய மழை பெய்யும்போது இந்த புயல்கள் உருவாகின்றன. மேலும், பலத்த காற்றும் மழையும் தொலைவில் இல்லாமல் மையத்திற்கு அருகில் இருக்கும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)) என்று கூறுகிறது.


வெப்பமண்டல புயல்கள் உருவாகும் போது மையப்பகுதி வெப்பமடைகிறது. மேலும், அது சூடான கடலில் இருந்து நீராவி திரவ நீராக (liquid water) மாறும்போது வெளியாகும் வெப்பத்திலிருந்து பெரும்பாலான ஆற்றலைப் பெறுகிறது. மற்ற புயல்களைப் போல் இல்லாமல், வெப்பமண்டல புயல்கள் சூடான அல்லது குளிர் முகடுகள் வெப்பமண்டல புயல்களுடன் தொடர்புடையவை அல்ல.




வெப்பமண்டல புயல்கள் அவை எங்கு உருவாகின்றன, எவ்வளவு வலிமையானவை என்பதைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, கரீபியன், மெக்சிகோ வளைகுடா, வடக்கு அட்லாண்டிக் மற்றும் கிழக்கு/மத்திய வடக்கு பசிபிக் பகுதிகளில் அவை Hurricanes என்று அழைக்கப்படுகின்றன. மேற்கு வடக்கு பசிபிக் பகுதியில், அவை typhoons என்று அழைக்கப்படுகின்றன.










கூடுதல் சக்தி கொண்ட வெப்பமண்டல புயல்கள் (Extratropical cyclones)


மத்திய அட்சரேகை புயல்கள் (mid-latitude cyclones) என்றும் அழைக்கப்படும், கூடுதல் சக்திகொண்ட வெப்பமண்டல புயல்கள் வெப்பமண்டலத்திற்கு வெளியே நிகழ்கின்றன. அவை, "அவற்றின் மையப் பகுதியில் குளிர்ந்த காற்றைக் கொண்டுள்ளன. மேலும், குளிர் மற்றும் சூடான காற்றுத் திரள்கள் தொடர்பு கொள்ளும்போது வெளிப்படும் ஆற்றலிலிருந்து அவற்றிற்குத் தேவையான ஆற்றலைப் பெறுகின்றன" என்று அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.



இந்த புயல்கள் எப்போதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முனைகளைக் கொண்டிருக்கும். இரண்டு வெவ்வேறு வகையான காற்றுத் திரள்களுக்கு இடையிலான எல்லையாக இருக்கும் ஒரு வானிலை அமைப்பாக இந்த புயல்கள் உள்ளன. ஒன்று சூடான காற்றாலும் மற்றொன்று குளிர்ந்த காற்றாலும் குறிக்கப்படுகிறது மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அவை நிலம் அல்லது கடல் மீது நிகழலாம்.




புயல் கரையை கடப்பது பற்றி


எளிமையாகச் சொன்னால், கடலில் இருந்த ஒரு வெப்பமண்டலப் புயல் நிலத்திற்கு வரும் நிகழ்வே புயல் கரையை கடக்கும் நிகழ்வாகும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி (India Meteorological Department (IMD)) புயலின் மையம் – அல்லது அதன் கண் – கரையோர பகுதிக்கு அருகில் நகரும்போது வெப்பமண்டலப் புயல் கரையை கடந்ததாக  கருதப்படும்.


முக்கியமாக, புயல் கரையை கடப்பது என்பது ‘நேரடி தாக்கம்’ என்று குழப்பிக் கொள்ளக் கூடாது. புயல் நிலபகுதிக்கு அருகில் வரும் போது கரையை கடக்கிறது. நேரடித் தாக்கம் என்பது புயலின் மையம் கடலோரப் பகுதியில் இருந்தாலும் கூட, வலுவான காற்று (கண் பகுதி) நிலத்தை கடப்பதைக் குறிக்கிறது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கூற்றுப்படி, வெப்பமண்டல புயலில் வலுவான காற்று எப்போதும் மைய பகுதியில் இருக்காது. ஒரு புயல் கரையை கடக்காவிட்டாலும் அந்த புயல் கடற்கரைக்கு அருகில் நிலை கொள்ளும் போது கடலோர பகுதியில் பலத்த காற்று  வீச வாய்ப்புள்ளது.


புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் சேதம், புயலின் தீவிரத்தைப் பொறுத்தது, அதன் காற்றின் வேகத்தால் குறிக்கப்படுகிறது. அதிதீவிர புயல் "மிகக் கடுமையானதாக" இருந்தால், அதன் தாக்கத்தில் கட்டிடமில்லா வீடுகளுக்கு (Kutcha houses) பரவலான சேதம், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளில் ஓரளவு இடையூறு, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தில் சிறிய இடையூறு, பறக்கும் குப்பைகள் மற்றும் தப்பிக்கும் பாதைகளில் வெள்ளப்பெருக்கு போன்ற அச்சுறுத்தல்கள் இருக்கலாம். இந்த வகையான சேதத்திற்குப் பின்னால் உள்ள காரணிகளில் மிகவும் பலத்த காற்று, கனமழை மற்றும் புயல் காரணமாக ஏற்படும் அலைகள் ஆகியவை அடங்கும், அவை கடற்கரையில் பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன.


புயல் கரையைக் கடப்பது சில மணிநேரங்கள் நீடிக்கும், அவற்றின் சரியான கால அளவு காற்றின் வேகம் மற்றும் புயல் அமைப்பின் அளவைப் பொறுத்தது. குறிப்பிடத்தக்க வகையில், ஈரப்பதம் குறைதல் மற்றும் மேற்பரப்பு உராய்வின் அதிகரிப்பு காரணமாக புயல் நிலத்தின் மீது நகர்ந்தவுடன் அவற்றின் தீவிரத்தை இழக்கின்றன. இதன்பொருள் புயல் கரையைக் கடப்பது பெரும்பாலும் புயல்களின் மிகவும் பேரழிவுகரமான தருணங்களாக இருந்தாலும், அவை அவற்றின் முடிவின் தொடக்கத்தையும் குறிக்கின்றன.




கேள்வி 2: புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது. இந்தப் பெயரிடும் முறையின் முக்கியத்துவம் என்ன?


UPSC Issue at a Glance | All About Cyclones: Formation, Naming and Climate Link

2000ஆம் ஆண்டில், வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உலக வானிலை ஆய்வு அமைப்பு/ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக குழு (World Meteorological Organization / Economic and Social Commission for Asia and the Pacific Panel on Tropical Cyclones (WMO/ESCAP (PTC))) என்ற நாடுகளின் குழு, சுழற்சி அடிப்படையில் இந்தப் பகுதியில் புயல்களுக்குப் பெயரிடத் தொடங்க முடிவு செய்தது. ஒவ்வொரு நாடும் பரிந்துரைகளை அனுப்பிய பிறகு, வெப்பமண்டல புயல்களுக்கான பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக குழு (PTC) பட்டியலை இறுதி செய்தது.


2018ஆம் ஆண்டில், WMO/ESCAP குழு ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் போன்ற ஐந்து நாடுகளைச் சேர்த்தது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 169 புயல் பெயர்கள் இந்த நாடுகளால் வழங்கப்பட்டன. 13 உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் 13 பெயர்களை பரிந்துரைத்தன.


உலகளவில், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் (Regional specialised meteorological centres (RSMCs)) மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் (Tropical Cyclone Warning Centres (TCWCs)) வெப்பமண்டல புயல்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் பெயரிடுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. WMO/ESCAP குழுவின்கீழ் 13 உறுப்புநாடுகளுக்கு வெப்பமண்டல புயல் மற்றும் புயல் எழுச்சி ஆலோசனைகளை வழங்கும் ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளது. வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடல் உட்பட வட இந்தியப் பெருங்கடலில் (north Indian Ocean (NIO)) உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயரிடவும் புது டெல்லியின் RSMC கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வெவ்வேறு பெருங்கடல் படுகைகளில் (Ocean basins) உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு சம்பந்தப்பட்ட சிறப்பு வானிலை மையங்கள் & வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் பெயரிடுகின்றன.


புயல்களுக்கு பெயரிடும்போது சில மரபுகளும் உள்ளன, சில விதிகளைப் பின்பற்ற வேண்டும், அந்த விதிகள் பின்வருமாறு:


  • முன்மொழியப்படும் பெயர் (அ) அரசியல் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் (ஆ) மத நம்பிக்கைகள் (இ) கலாச்சாரங்கள் மற்றும் (ஈ) பாலினம் ஆகியவற்றுக்கு நடுநிலையாக இருக்க வேண்டும்.


  • பெயர் உலகம் முழுவதும் உள்ள எந்த மக்கள் குழுவின் உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


  • அது மிகவும் கடுமையானதாகவோ கொடூரமானதாகவோ இருக்கக் கூடாது.


  • அது குறுகியதாக, உச்சரிக்க எளிதாகவும் எந்த உறுப்பினரையும்  புண்படுத்தாத  வகையில் இருக்க வேண்டும்.


  • பெயரின் அதிகபட்ச நீளம் 8 எழுத்துகளாக இருக்கும்.


பொதுமக்களுக்கு உதவுவதைத் தவிர, புயல்களுக்கு பெயரிடுவது அறிவியல் சமூகம், ஊடகங்கள், பேரிடர் மேலாளர்கள் போன்றோருக்கும் உதவுகிறது. ஒரு பெயருடன், தனிப்பட்ட வகையில் புயல்களை அடையாளம் காண்பது எளிதாகிறது. அதன் உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது, எச்சரிக்கைகளை விரைவாகப் பரப்பி சமூக தயார்நிலையை அதிகரிக்கிறது.


கேள்வி 3: வங்காள விரிகுடாவில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏன்?


UPSC Issue at a Glance | All About Cyclones: Formation, Naming and Climate Link

உலகின் மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடா, 2,600,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது பூமியில் புயல்களின் காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் ஒன்றாகும். தீவிர வானிலையை வெளிக்காட்டும் புயல் விஞ்ஞானியும் வானிலை ஆய்வாளருமான டாக்டர் Dr Jeff Masters, யேல் காலநிலை இணைப்புகள் தளத்தில் வெளியிட்ட ஆய்வின்படி, உலக வரலாற்றில் 30 கொடிய வெப்பமண்டல புயல்களில் 22 வங்காள விரிகுடாவிலும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் பதிவாகி இருப்பதாக தெரிவித்தார்.


2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையின்படி, அரபிக் கடலைவிட வங்காள விரிகுடாவில் அதிக வெப்பமண்டல புயல்கள் உருவாகின்றன என்றும், புயல் அலைகளின் வேகம்  அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டது. வங்காள விரிகுடா பெரிய புயல் அலைகளுக்கு ஆளாகிறது. அதன் குழாய் போன்ற வடிவம் (funnel-like shape) மற்றும் நிலப்பரப்பு கடற்கரையிலிருந்து அதிக தூரம் ஆழமற்ற நிலப்பரப்பு காரணமாக, பெரிய புயல் அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தனித்துவமான புவியியல் வடிவம் உலக வரலாற்றில் மிகவும் கொடிய பேரழிவுகளில் சிலவற்றை இந்தப் பகுதி காண காரணமாக அமைந்துள்ளது.


வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதி மிகவும் ஆழமற்றது, அங்கு கடற்கரை மூன்று பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான புயல் கடற்கரையை நெருங்கும்போது, ​​காற்றழுத்தத்தால் உருவாகும் மிகப்பெரிய புயல் வேகம் புயல் ஏற்பட்டு அப்பகுதியைக் கடக்கும்போது கடலோரப் பகுதியை மூழ்கடிக்கும்.


மேற்கு வங்கம்-வங்கதேசப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கடற்கரையின் மற்றொரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், அங்கு பல ஆறுகள் மற்றும் சிறிய ஓடைகள் உள்ளன. மேலும், தீவுகளின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 4 முதல் 5 மீட்டர் வரை உள்ளன. கடல் சுவர்கள் மற்றும் கரைகள் வலுவான அலைகளைத் தடுக்க போதுமானதாக இல்லை மற்றும் ஒரு தாழ்வு நிலை அல்லது கடமையான புயல் உருவானால் இந்தப் பகுதி மூழ்கிவிடும். இந்தப் பகுதியைக் கடக்கும் புயல்களின் வேகம் அதிகமாக உள்ளது. இவை அனைத்தும் இந்தப் பகுதியைப் பாதிக்கும் புயல்களின் தாக்கத்தின் தீவிரத்திற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.


2020-ல் வெளியிடப்பட்ட 'வடக்கு வங்காள விரிகுடாவில் கரையோரப் பகுதி மற்றும் கடலோர நிலப்பரப்பின் தாக்கம்' என்ற தலைப்பிலான ஒரு கல்விக் கட்டுரை, புயல் அலைகளால் ஏற்படும் அழிவு கடற்கரையின் வடிவத்தையும் சார்ந்துள்ளது என்று குறிப்பிடுகிறது. "புயல் அலை என்பது உள்ளூர் அம்சங்கள் மற்றும் நீர் ஓட்டத்தை பாதிக்கும் தடைகளைப் பொறுத்தது. வங்காள விரிகுடா, நதி டெல்டாக்கள், சிறிய விரிகுடா போன்ற பகுதிகள் மற்றும் நேரான நிலப்பரப்புகளைக் கொண்ட சிக்கலான கடற்கரையைக் கொண்டுள்ளது.


மற்றொரு முக்கியமான காரணி வெப்பநிலை ஆகும். நீர் வெப்பமாக இருந்தால், புயல் அதிகமாக இருக்கும். மேலும், வங்காள விரிகுடா பொதுவாக அரபிக் கடலைவிட அதிக வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், சமீபத்திய காலநிலை மாற்றம் தொடர்பான இடையூறுகள் காரணமாக, இந்தியாவின் மேற்கு கடற்கரையும் அடிக்கடி மற்றும் வலுவான புயல்களைக் காண்கிறது.


வரலாற்றுரீதியாக, வங்காள விரிகுடா வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் பெற்றது. ஆனால், பல ஆண்டுகளாக அரபிக் கடலில் உருவாகும் புயல்களும் அதிகரித்துள்ளன. 1891–2020 வரையிலான வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களின் முந்தைய தரவுகளின் பகுப்பாய்வு, 1990ஆம் ஆண்டு முதல் அரபிக் கடலில் சமீபத்திய ஆண்டுகளில் மிகக் கடுமையான புயல்களின் வேகம் அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கிறது.


கேள்வி 4: காலநிலை மாற்றம் புயல்களின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை எவ்வாறு பாதிக்கிறது?


வறட்சி, நீர் பற்றாக்குறை, கடுமையான காட்டுத்தீ, கடல் மட்ட உயர்வு போன்ற காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டும் அறிக்கைகளுக்கு பஞ்சமில்லை. புயல்களின் வேகம் மற்றும் தீவிரத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.


1850ஆம் ஆண்டு முதல் பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலை குறைந்தது 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. முதன்மையாக வளிமண்டலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு பசுமை இல்ல வாயுக்களை (greenhouse gases) வெளியிட்ட மனித நடவடிக்கைகள் காரணமாக இது போன்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்துவரும் வெப்பநிலை புயல்கள் அடிக்கடி ஏற்படுவதற்கும், அவை வலுவடைவதற்கும் காரணமாகின்றன.


அதிகரித்து வரும் வெப்பநிலை புயல்களை மேலும் வலுவாக்குகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, உலக வெப்பநிலை குறைந்தது 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் கிழக்கு பசிபிக் பகுதியில் ஏற்படும் பெரிய புயல் நிலச்சரிவுகள் 30% வரை அடிக்கடி நிகழக்கூடும் என்று கூறியுள்ளது. பெருங்கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதே இத்தகைய புயல்களுக்கு முக்கிய காரணியாக உள்ளது.


கடந்த சில ஆண்டுகளில், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தால் உருவாகும் கூடுதல் வெப்பத்தில் 90% பெருங்கடல்கள் உறிஞ்சியுள்ளன. இதன் காரணமாக, உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1850 முதல் 0.9 டிகிரி செல்சியஸுக்கு அருகில் அதிகரித்துள்ளது. மேலும். கடந்த, 40 ஆண்டுகளாக கடல் மேற்பரப்பு 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. வெப்பமான கடல் நீர் கடல் வெப்ப அலைகளை உருவாக்குகிறது, இவை தீவிர வானிலை நிகழ்வுகள் ஆகும், இது புயல்கள் மற்றும் வெப்பமண்டல புயல்கள் போன்ற புயல்களை மேலும் தீவிரமாக்குகிறது.



Original article:

Share: