நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய குறிப்புகள்:


— அரசு தங்குமிடங்கள் மற்றும் பணியமர்த்துவோர் வழங்கும் குடியிருப்புகள் வீட்டுவசதி குறியீட்டிலிருந்து விலக்கப்படுகிறது. ஏனெனில், இவை உண்மையான வாடகை சந்தையில் நிகழும் பரிவர்த்தனைகளை வெளிக்காட்டவில்லை  என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


— தற்போதுள்ள நுகர்வோர் விலைக் குறியீட்டில் (Consumer Price Index (CPI)) வீட்டுவசதிக்கு என்று  நகர்ப்புறங்களில் 21.67 சதவீத மதிப்பும், அகில இந்திய அளவில் 10.07 சதவீத மதிப்பும் வழங்கப்பட்டுள்ளது.


— இந்தத் திருத்தம் செயல்படுத்தப்படும்போது, ​​நகர்ப்புற குடியிருப்புகள் மற்றும் பணியமர்த்துவோர் வழங்கும் குடியிருப்புகளை மட்டும் சேர்ப்பதென்பது  முழுமையான நிலவரத்தைத் தெரிவிக்காமல் விட்டுவிடும் வாய்ப்புள்ளது.  குறிப்பாக பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டுவாடகைகள் அதிகரித்துள்ள நிலையில், வாடகை மற்றும் வீட்டு விலைகள் பணவீக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மிகவும் துல்லியமாக அளவிட உதவுகிறது. 


— இந்தத் தொடரின் மூன்றாவது ஆய்வறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. - 'புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் (Consumer Price Index (CPI)) தொடரில் வீட்டுவசதி குறியீட்டு தொகுப்பு முறையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த விவாதக் கட்டுரை' - நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படை திருத்தப் பணிகளில் ஒரு பகுதியாக உள்ளது.


— புதிய வீட்டுவசதிக் குறியீடு, தற்போது மாதந்தோறும் வீடுகளில் ஆறில் ஒரு பங்கில் (one-sixth) இருந்து மட்டுமே தரவைச் சேகரிக்கும் வரம்பிற்குப் பதிலாக, ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீடுகளிலிருந்தும் வாடகைத் தரவை உள்ளடக்கியதாக இருக்கும்.


— புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகமானது (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)), நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படை திருத்தப்பணியை  மேற்கொண்டு வருகிறது. மேலும், நிபுணர்கள், பயனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து வருகின்றனர். அதற்குப் பிறகு சில வழிமுறைகளையும் மறுபரிசீலனை செய்ய இருக்கிறது. புதிய தரவு மூலங்களை (data sources) ஆராய்ந்து பல மாற்றங்களையும்  புகுத்திவருகிறது.


— இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கான ஒரு முக்கியமான குறியீடாக வீட்டுவசதி என்பது பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களின் வருமானத்தில் கணிசமான அளவு வாடகைக்காகவோ அல்லது சொந்த வீட்டைப் பராமரிப்பதற்கோ செலவிடப்படுகிறது.Mospi

உங்களுக்குத் தெரியுமா?


— நுகர்வோர் விலைக் குறியீட்டிற்காக (Consumer Price Index (CPI)), 2024-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டாக (revised base year) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பொருட்களின் தொகுப்பும் அவற்றின் மதிப்பீடும் 2023-24-ஆம் ஆண்டில் தேசிய புள்ளியியல் (National Statistical Office (NSO)) அலுவலகத்தால் நடத்தப்பட்ட குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வின் (Household Consumption Expenditure Survey (HCES)) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத்தொடர் வரும் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


— அடிப்படை ஆண்டு (base year) என்பது ஒரு பொருளாதார அல்லது நிதிக் குறியீட்டில் தொடர்ச்சியான ஆண்டுகளின் முதல் ஆண்டாகும். இந்த சூழலில், இது பொதுவாக 100 என்ற தன்னிச்சையான நிலையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் தரவுகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க, புதிய, நடப்பு அடிப்படை ஆண்டுகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அளவிட அடிப்படை ஆண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. எந்த ஆண்டும் ஒரு அடிப்படை ஆண்டாக செயல்படலாம், ஆனால் ஆய்வாளர்கள் பொதுவாக சமீபத்திய ஆண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள்.


— வணிக செயல்பாடு அல்லது பொருளாதார அல்லது நிதி குறியீட்டின் அளவீட்டில் ஒப்பிடுவதற்கு ஒரு அடிப்படை ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2016 மற்றும் 2024-க்கு இடையிலான பணவீக்க விகிதத்தைக் கண்டறிய, 2016 என்பது அடிப்படை


 ஆண்டாக அல்லது நிர்ணயிக்கப்பட்ட காலத்தின் முதல் ஆண்டாகவும் கருதப்படுகிறது. அடிப்படை ஆண்டு (base year) என்பது வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியாகவோ அல்லது ஒரே அங்காடி விற்பனையை (same-store sales) கணக்கிடுவதற்கான அடிப்படை புள்ளியாகவோ இருக்கலாம்.



Original article:

Share: