திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி (revised estimate), 2024 நிதியாண்டிற்கான மூலதனச் செலவு (capital expenditure (capex)) பட்ஜெட் தொகையை விட 4.5% குறைவாக இருந்தது. இது வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறி அல்ல.
மாநிலங்களில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், மாநில பட்ஜெட்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இது தெளிவாகத் தெரிகிறது. 2023-24 பட்ஜெட்டில் அதன் மின் பயன்பாட்டு பிரிவான தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட மாநில அரசு ₹ 17,117 கோடியை ஒதுக்க வேண்டியிருந்தது. மேலும் அடுத்த நிதியாண்டில் இதற்காக ₹14,442 கோடியை ஒதுக்க வேண்டும். இந்த நிதியை மாநில அரசு ஒதுக்கவில்லை என்றால், மாநில அரசின் கடன் வாங்கும் வரம்பை ஒன்றிய அரசு குறைத்துவிடும். கூடுதலாக, 15வது நிதி ஆணையம் (15th Finance Commission), மின்சாரத் துறையில் தேவையான சீர்திருத்தங்களை அமல்படுத்தினால், மாநிலங்கள் தங்கள் நிதிப் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தியில் மேலும் 0.5 சதவீதம் அதிகரிக்க அனுமதி அளித்துள்ளது.
இந்த ஒதுக்கீடு, 2024 ஆம் நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறையை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.25% ஆக உயர்த்தியுள்ளது. இது, நிதிச் சரிவுக்கு வழிவகுக்கும். 2025 நிதியாண்டில், இந்த ஒதுக்கீட்டின் காரணமாக நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தியில் 3.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத்தின் நிதிகளின் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் நமது மாநிலத்தை முடக்க முயற்சிப்பதாக ஒன்றிய அரசை விமர்சித்தாலும், மாநில வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ.1,50,000 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன் ₹1,60,000 கோடியாக உள்ளது. ஆனால் அது மாநில அரசின் கடனில் ஒரு பகுதியாக இல்லை.
முதன்மையாக சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான கணிசமான செலவு காரணமாக, தமிழ்நாடு தனது வருவாய் செலவினங்களை நிர்வகிப்பதில் சவால்களை எதிர்கொள்கிறது. இந்த செலவுகள் 2025 நிதியாண்டில் மொத்தம் ₹1,22,594 கோடி ஆகும். இது, மொத்த செலவில் கிட்டத்தட்ட 28% ஆகும். தமிழ்நாட்டின் கணிசமான ₹8.33 லட்சம் கோடி கடனுக்கான வட்டித் தொகையும், புதிய சமூக நலத் திட்டங்களின் அறிமுகமும் இணைந்து, 2024ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, 2025ஆம் நிதியாண்டில் வருவாய்ச் செலவில் 9.7% அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இந்த செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக, அரசு தனது மூலதனச் செலவைக் குறைத்து வருகிறது. 2024 நிதியாண்டில், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, மூலதனச் செலவு, பட்ஜெட் தொகையை விட 4.5% குறைவாக இருந்தது. இது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பற்றிய கவலையை எழுப்புகிறது.
பட்ஜெட்டில் உள்ள சில அனுமானங்கள் அதிக நம்பிக்கை கொண்டதாகத் தெரிகிறது. 2025 நிதியாண்டில் பெயரளவிலான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி 15.89% ஆக இருக்கும் என்று பட்ஜெட் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கும் அதே வேளையில், இந்த மதிப்பீடு, அதே காலகட்டத்தில் ஒன்றிய பட்ஜெட் மூலம் கணிக்கப்பட்ட 10.5% பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (nominal GDP growth) கணிசமாக விஞ்சுகிறது. 2024 நிதியாண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி அனுமானத்திலும் இதேபோன்ற நீட்டிப்பு காணப்பட்டது. இது குறைந்த திருத்தத்திற்கு வழிவகுத்தது. வளர்ச்சி மற்றும் வருவாய் மதிப்பீடுகள் பட்ஜெட்டின் நம்பகத்தன்மையை அதிகரிக்காது.