2023ஆம் ஆண்டில், தெற்காசியாவில் மோதல் காரணமாக 69,000 பேர் இடம்பெயர்ந்ததாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இந்த இடம்பெயர்வுகளில் பெரும்பாலானவை, சுமார் 67,000 மணிப்பூரில் நடந்த வன்முறையால் ஏற்பட்டவை ஆகும்.
2023ஆம் ஆண்டில், தெற்காசியாவில் மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக 69,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த இடப்பெயர்வுகளில் பெரும்பாலானவை, சுமார் 67,000 பேர், மணிப்பூரில் நடந்த வன்முறையால் ஏற்பட்டவை என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. ஜெனீவாவை தளமாகக் கொண்ட உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் (Internal Displacement Monitoring Centre (IDMC)) அறிக்கை, 2018 க்குப் பிறகு இந்தியாவில் மோதல்கள் மற்றும் வன்முறையால் ஏற்பட்ட அதிக இடப்பெயர்வுகள் என்று கூறியுள்ளது.
மே 3, 2023 அன்று, மணிப்பூரின் மலை மாவட்டங்களில் 'பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பு' (Tribal Solidarity March) நடந்தது. தங்களை ஒரு பட்டியல் பழங்குடியினராக (Scheduled Tribe (ST)) வகைப்படுத்த வேண்டும் என்ற மெய்தேய் சமூகத்தின் (Meitei community) கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மெய்தேய் மற்றும் குகி சமூகங்களுக்கு (Meitei and the Kuki communitie) இடையே மோதல்களுக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், மணிப்பூர் உயர்நீதிமன்றம் பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. இந்த பரிந்துரைகள் மெய்தேய் சமூகத்திற்கு "பட்டியலிடப்பட்ட பழங்குடியினராக" (Scheduled Tribe) அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதாகும். இந்த தகுதிநிலை சிறுபான்மை குழுக்களை ஒதுக்கி வைக்கப்படுவதிலிருந்தோ அல்லது புறக்கணிக்கப்படுவதிலிருந்தோ பாதுகாப்பதற்காகும்.
மெய்தேய் சமூகத்திற்கு, பட்டியல் பழங்குடியினருக்கான (Scheduled Tribe) தகுதிநிலை வழங்குவதற்கான இந்த அங்கீகாரத்தை, குகி சமூகம் உட்பட பிற உள்ளூர் பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், நிலத் தகராறுகளால் பதட்டங்கள் தூண்டப்பட்டன. மே 3 அன்று சுராசந்த்பூர் மாவட்டத்தில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. வன்முறை பின்னர் இம்பால் கிழக்கு (Imphal East), இம்பால் மேற்கு (Imphal West), பிஷ்னுபூர் (Bishnupur), தெங்னௌபால் (Tengnoupal) மற்றும் காங்போக்பி (Kangpokpi) போன்ற பிற மாவட்டங்களுக்கும் பரவியது. இதனால் சுமார் 67,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக அறிக்கை கூறுகிறது. விளக்கப்படம்-1 2009 முதல் 2023 வரை இந்தியாவில் உள்நாட்டு இடப்பெயர்வுகளைக் காட்டுகிறது. உள்நாட்டு இடப்பெயர்வு என்பது குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் காரணமாக ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் மக்களின் கட்டாய நகர்வைக் குறிக்கிறது. இதில், பொதுவாக இடம்பெயர்ந்த மொத்த நபர்களின் எண்ணிக்கையை அல்ல. கூடுதலாக, ஒரே நபர்கள் பல முறை இடம்பெயர்ந்திருக்கலாம்.
பெரும்பாலான இயக்கங்கள், பாதிக்கும் அதிகமானவை, மணிப்பூருக்குள் நிகழ்ந்தன. அதில், ஐந்தில் ஒரு பங்கு அண்டை மாநிலமான மிசோரமுக்கும், சிறிய எண்ணிக்கையிலான இயக்கங்கள் நாகாலாந்து மற்றும் அசாமுக்கும் சென்றன. வன்முறை அதிகரித்ததால், ஒன்றிய அரசு ஊரடங்கு உத்தரவை (curfews) அமல்படுத்தியது. இதன் விளைவாக, இணையம் முடக்கப்பட்டது. பாதுகாப்புப் படைகளை அனுப்பியது. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மேலும், மணிப்பூருக்கான ஒரு சமாதானக் குழு நிறுவப்பட்டது. ஆனால் அதன் அமைப்பு பற்றிய கருத்து வேறுபாடுகளால் முயற்சி தடைபட்டது.
விளக்கப்படம்-2 தற்போது இந்தியாவில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைக் காட்டுகிறது. இது, இடம்பெயர்ந்த தனிநபர்களை மையமாகக் கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் இறுதியில், இந்தியாவில் இதுபோன்ற தனிநபர்களை மையமாகக் கொண்டு 0.61 மில்லியன் நபர்கள் இருந்தனர். 2023ஆம் ஆண்டில், மோதல் மற்றும் வன்முறை காரணமாக உலகம் முழுவதும் 68.3 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது என்று அறிக்கை கூறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், மோதல்களின் காரணமாக 22.6 மில்லியன் மக்கள் வெளியேற வேண்டியிருந்தது. இதனால், 2022 மற்றும் 2023-ல் மிகப்பெரிய அதிகரிப்புகள் நிகழ்ந்தன.
வரைபடம் 3-ஆனது, 2023ஆம் ஆண்டு நிலவரப்படி உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களின் நாடு வாரியான எண்ணிக்கையைக் காட்டுகிறது.
சூடான் (Sudan), காங்கோ ஜனநாயக குடியரசு (Democratic Republic of Congo) மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் (Palestinian territories) நடந்த மோதல்களால் 2023ஆம் ஆண்டில் மோதல் காரணமாக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். 2023 முழுவதும், சூடானில் வன்முறையால் ஆறு மில்லியன் மக்கள் கட்டாய இடம்பெயர்வு அடைந்துள்ளனர். இந்த இடம்பெயர்வு முந்தைய 14 ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டில் உக்ரைனின் 16.9 மில்லியனுக்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் இது இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கட்டாய நகர்வுகளாகப் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும், 2023ஆம் ஆண்டில், மோதலின் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டு இடப்பெயர்வு நிகழ்வுகளின் எண்ணிக்கை 20.5 மில்லியனாக இருந்தது.
இந்த இடப்பெயர்வுகள் இயற்கை பேரிடர்களாலும் நிகழலாம். அந்த எண்ணிக்கையை நாம் சேர்த்தால், 2023ஆம் ஆண்டின் இறுதியில், பேரழிவுகள் காரணமாக 7.7 மில்லியன் உட்பட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75.9 மில்லியனாக இருந்தது. இது 2022-ன் இறுதியில் கணக்கிடப்பட்ட 71.1 மில்லியனிலிருந்து அதிகரித்துள்ளது.