செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய ஊடகங்கள், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுவருகின்றன. வியாபாரத்தில் நிலைத்திருக்க இதை செய்கிறார்கள். இந்த மாற்றங்கள் ஊடகத்தின் மீதான நம்பிகையை குறைக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் இளைஞர், "இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதற்கு துருவ் ரதி தான் காரணம்" என்கிறார். ஆக்ராவில், இளம் ஜாதவ் ஆண்கள் ரதி மற்றும் உள்ளூர் இணையத்தில் "செல்வாக்கு"
பெற்றவர்களைப் பின்தொடர்வதாகக் கூறுகிறார்கள். மோகன்லால்கஞ்சில் உள்ள ராவத் சமூகத்தைச் சேர்ந்த ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் இளம் ஆதரவாளர்கூட Youtube-ல் ரவிஷை பின்தொடர்வதாக ஒப்புக்கொள்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அத்தியாயங்களின் விவரங்களை அனைவரும் நினைவில் கொள்ள முடியும்.
இந்தியாவின் முதல் சமூக ஊடக தேர்தல் (social media election) இதுவாகும். சமூக ஊடகங்கள் அரசாங்கக் கட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வெவ்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உதவிவருகிறது. சில நேரங்களில் இது அரங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகி விடுகிறது.
மாறும் வரையறைகள்
சமீபகாலமாக, பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் சமூக ஊடகங்களை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி வருகின்றனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களில் "வலதுசாரிச் சூழல்" உருவானது. பாரம்பரிய ஊடகங்கள் என்ன செய்தி வெளியிட்டன என்பது குறித்து மக்களிடையே அறிவார்ந்த முரண்பாடு ஏற்படுத்த இந்த ஊடகங்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்ப ஆண்டுகளில், பாரம்பரிய ஊடகங்கள் அச்சத்தை தீவிரமாகப் பரப்பவில்லை. இருப்பினும், வலதுசாரி சமூக ஊடகங்கள் வெறுப்பு பிரச்சாரங்களைப் பரப்பவுதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. வெளிப்படையாக இது அரசியல் சார்புகளை வெளிப்படுத்தியது முஸ்லிம்கள், பெண்கள் மற்றும் வரலாற்றை மாற்றி எழுதுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஊடக நெறிமுறையை கடக்கத் தொடங்கினர்.
வெறுப்பூட்டும் பேச்சுப் பேரணிகள் அல்லது கலவரங்களை ஏற்பாடு செய்யாமல், சிறுபான்மைக் குழுக்கள் மற்றும் போட்டியாளர்கள் மீது வெறுப்பையும் கோபத்தையும் எவ்வாறு தூண்டுகிறது என்பதை குணால் புரோஹித், தனது “எச்-பாப்: இந்துத்துவா பாப் நட்சத்திரங்களின் ரகசிய உலகம் (H-Pop: The Secretive World of Hindutva Pop Stars)” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக பிரதான ஊடகங்கள் பல வலதுசாரிக் கருத்துக்களுக்கு எதிர்க் கருத்து கூறத்தொடங்கிவிட்டன. அது மக்கள் பெறும் தகவல்களைப் பெருக்கியது. பாஜக ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட ஒரு சில ஊடகங்கள் மட்டுமே பாஜகவை ஆதரிக்கின்றன. அதிகமான மக்கள் அலைபேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அலைபேசி மூலம் வெவ்வேறு கருத்துக்களைப் பார்வையிடுகிறார்கள். இது விமர்சனக் குரல்களைக் கேட்கும் வாய்ப்பை அளித்தது. இந்தக் குரல்கள் எந்த அரசியல் கட்சியுடனும் பிணைக்கப்படவில்லை. எனவே பாரம்பரிய ஊடகங்கள் இழந்த நம்பகத்தன்மையைப் மீண்டும் பெற்றன. நாங்கள் பேசிய பலர், இந்தியாவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை சமூக ஊடகங்கள் மூலம் கண்டுபிடித்ததாகச் சொன்னார்கள். செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற பாரம்பரிய ஊடகங்கள், ஒருதலைபட்சமாக செயல்பட்டுவருகின்றன. வியாபாரத்தில் நிலைத்திருக்க இதை செய்கிறார்கள். இந்த மாற்றங்கள் ஊடகத்தின் மீதான நம்பிகையை குறைக்கும்.
YOUTUBE மற்றும் FACEBOOK-ல் பயன்படுத்தப்படும் நிரல் நெறிமுறைகளின் (algorithm) அம்சம் என்னவென்றால், பிரபலமடைந்து வரும் கருத்துக்கள் முழுப் பயனர் தளத்திற்கும் பரப்பப்படும். இந்த நிரல் நெறிமுறைகள் கருத்துகளை வேகமாக பகிரச் செய்கின்றன. உதாரணமாக, “இந்தியா சர்வாதிகாரமாக மாறுகிறதா?” (“Is India becoming a DICTATORSHIP?”) என்று ரதியின் காணொளி கேட்கிறது. இது யூடியூப்பில் ஏற்கனவே 25 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. காணொளியின் சில பகுதிகள் மற்ற சமூக ஊடகத் தளங்களில் பகிரப்படுவதால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.
பயம் காரணமாக பேசத் தயங்கும் வாக்காளர்களுக்கு சமூக ஊடகங்கள் அரசியல் ஈடுபாட்டிற்கான இடமாக மாறியுள்ளன. மோகன்லால்கஞ்சில் (Mohanlalganj), ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த, உள்ளூர் INSTAGRAM-ல் ஆதிக்கம் செலுத்துபவரை நாங்கள் சந்தித்தோம். அவர் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், பாஜகவால் மிகவும் விரக்தியடைந்து இருக்கிறார். அவர் என்னை நோக்கி "நான் எல்லாவற்றையும் கவனிக்கிறேன். ஆனால், வெளியே பேசப் பயப்படுகிறேன்" என்றார்.
இருப்பினும், நீண்டகால விளைவுகளை நாம் இன்னும் நெருக்கமாக ஆராய வேண்டும். முதலாவதாக, முறையான கட்சி அமைப்புக்கு வெளியே இப்போது அரசியல் கதைகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில், கட்சிப் பணியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாக்காளர்களை அரசியல் சித்தாந்தங்களுடன் இணைத்து, அடிமட்டத்திலிருந்து கொள்ககளை உருவாக்கினர். ஆனால், சமூக ஊடகங்கள் இந்தத் தொழிலாளர்கள் மற்றும் இடைத்தரகர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருகின்றன.
சமூக ஊடகங்கள் தலைவர்களை நேரடியாக கதைகளை வடிவமைக்க அனுமதிக்கிறது. இது கட்சிகளுக்குள் அதிக மையப்படுத்தலுக்கு வழிவகுக்கிறது. நிரல்நெறிமுறைகளும் துருவமுனைப்படுத்தலை அதிகரிக்கின்றன. கட்சி கட்டமைப்புகள் மற்றும் மிக முக்கியமாக, பொதுவெளியில் தாக்கம் இன்னும் நிச்சயமற்றது.
எவ்வாறாயினும், இந்தத் தேர்தலில் சமூக ஊடகங்களின் முக்கிய பங்கேற்பு, அரசியல் பிரச்சினைகளை நம்பகத்தன்மையுடன் வடிவமைக்கும் அதன் தொழில்முறை நோக்கத்திலிருந்து பாரம்பரிய ஊடகங்களின் பெரும்பகுதியை முற்றிலுமாக கைவிடுவதோடு அனைத்தையும் கொண்டுள்ளது. நியாயமான விவாதத்திற்கும் இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கும் இது எதைக் காட்டுகிறது? 2024 தேர்தல் எழுப்பும் கேள்வி இதுதான்.
யாமினி அய்யர் ஒரு பொதுக் கொள்கை அறிஞர்; நீலஞ்சன் சிர்க்கார், சீனியர் ஃபெலோ, சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச்.