1989: அரசியல் தவறுகள் மற்றும் போபர்ஸ் ஊழலால் குற்றச்சாட்டு காரணமாக ராஜீவ் காந்தி தனது செல்வாக்கை இழந்தார்.
1989ல் வி.பி.சிங் பிரதமரானார். ஆனால் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பதவியில் நீடித்தார். அவருக்குப் பிறகு, சந்திர சேகர், சிறிது காலம் பிரதமராக பதவியில் நீடித்தார்.
1989 மக்களவைத் தேர்தலில், ராஜீவ் காந்தியின் ஊழல்கள் அவரது குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மறைத்தது. 12 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. வி.பி.சிங் கூட்டணி அரசை அமைத்தார். ராஜீவ் காந்தி பின்னர் சந்திரசேகர் பிரதமராக ஆவதை ஆதரித்தார். ஆனால், அளித்து வந்த ஆதரவை வி.பி.சிங் சிறிது காலத்திற்கு பிறகு திரும்ப பெற்றார். 1989 முதல் 1991 வரை, இந்தியாவில் இரண்டு மக்களவைத் தேர்தல்களும் இரண்டு பிரதமர்களும் பதவியில் நீடித்தனர்.
1988 டிசம்பரில், ராஜீவ் காந்தியின் அரசாங்கம் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 326-ல் (Article 326) திருத்தம் செய்தது. இந்த திருத்தத்தின் மூலம் வாக்களிக்கும் வயதை 21 முதல் 18 ஆகக் குறைத்தது. சுமார் 4.7 கோடி புதிய வாக்காளர்களைச் சேர்த்தது. அவரது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது தேர்தல் சீர்திருத்தம் இதுவாகும். முந்தைய சீர்திருத்தங்களில் 1985ஆம் ஆண்டில் கட்சித் தாவல் தடை சட்டமும் (the anti-defection law-1985) அடங்கும். நிறுவனங்கள் அரசியல் நன்கொடைகள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்க 1985ஆம் ஆண்டில் நிறுவனங்கள் சட்டத்தையும் (political donations by firms (1985) திருத்தியது. 1988ஆம் ஆண்டில், மத நிறுவனங்கள் தங்கள் நிதியை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்க அவர்கள் ஒரு சட்டத்தை இயற்றினார். ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமரானபோது அவருக்கு 40 வயதுதான். கட்சியிலும் ஆட்சியிலும் பல இளைஞர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினார்.
ராஜீவ் காந்திக்கு தனது நிதியமைச்சர் விபி சிங்குடன் பிரச்சனைகள் இருந்தன. சிங் உயர்மட்ட வணிகர்கள் மீது பல ஊழல் எதிர்ப்பு சோதனைகளுக்கு உத்தரவிட்டார். இந்த தொழிலதிபர்களில் பலர் ராஜீவ் காந்தியின் நண்பர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். "ரெய்டு ராஜ்" (“raid raj”) என்று அழைக்கப்படும் இந்த சோதனைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, ஜனவரி 1987-ல் ராஜீவ், வி.பி.சிங்கை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற்றினார்.
விபிசிங் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பின், போஃபர்ஸ் ஹோவிட்சர் (Bofors howitzer purchase deal) கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையைத் தொடங்கினார். இதற்குமுன் ராஜீவ் காந்தி இந்த ஒப்பந்தத்தை தானே நிர்வகித்தார். இதனால் அமைச்சரவையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. விபிசிங் ஏப்ரல் 12, 1987 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
வி பி சிங் vs ராஜீவ் காந்தி
அக்டோபர் 2, 1987 அன்று, விபிசிங் ஜன் மோர்ச்சா என்ற அரசியல் குழுவை உருவாக்கினார். ராஜீவ் அரசில் இருந்து விலகிய அருண் நேருவும், ஆரிப் முகமது கானும் அவருடன் இணைந்தனர். ஜூன் 1988-ல், சிங் அலகாபாத் மக்களவை இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றார். பின்னர் பல கட்சிகளை ஒன்றிணைத்து 1988 அக்டோபர் 11 அன்று ஜனதா தளத்தை உருவாக்கினார். நாட்டின் எதிர்காலத்தை மாற்ற விதிக்கப்பட்ட தலைவர் என்று பரிந்துரைக்கும் முழக்கத்துடன் எதிர்க்கட்சிகள் சிங்கைச் சுற்றி அணிதிரண்டன.
ராஜீவ் காந்திக்கு எதிராக வி.பி.சிங் பிரச்சாரம் செய்தபோது, எல்.கே.அத்வானி தலைமையிலான பாஜக தனது இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை தீவிரப்படுத்தியது. பிப்ரவரி 1, 1986 அன்று பாபர் மசூதியின் பூட்டுகள் திறக்கப்பட்ட பின்னர் அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான பிரச்சாரம் வேகம் பெற்றது.
1989 தேர்தல்
1989-ல் 49.89 கோடி இந்தியர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நவம்பர் 22 முதல் 26 வரை மூன்று கட்டங்களாக 529 இடங்களுக்கு சுமார் 62% பேர் வாக்களித்தனர். ஜனதா தளம் 143 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றன. கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சி மூன்று இடங்களில் வெற்றி பெற்று, 33 வயதில் மாயாவதியை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. காங்கிரஸ், முன்பை விட குறைவான இடங்களை வென்றாலும், தனிப்பெரும் கட்சியாக இருந்தது.
முந்தைய தேர்தலில் 414 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ், அதிர்ச்சியூட்டும் அடியை சந்தித்தாலும், 197 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆந்திராவில் 39 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 28 இடங்களிலும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தலா 27 இடங்களிலும், கேரளாவில் 14 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ராஜீவ் அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை நிராகரித்ததை அடுத்து, ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. சிங் பிரதமராக 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பதவியேற்றார், முன்னாள் ஹரியானா முதல்வர் தேவி லால் துணைப் பிரதமராக இருந்தார்.
மண்டல் கமிஷன் மற்றும் மந்திர்
பத்தாண்டுகளுக்கு முன் ஜனதா கட்சி எதிர்கொண்ட அதே உட்பூசல்களை தேசிய முன்னணியும் எதிர்கொண்டது. தேவிலால் வி.பி.சிங்கை முதுகெலும்பு இல்லாதவர்" (“spineless”) என்று விமர்சித்தார். இது அவரை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. ஆகஸ்ட் 15, 1990 அன்று, வி.பி.சிங் அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டிற்கான (27% reservation for backward classes in government jobs) மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அக்டோபர் 23, 1990 அன்று, லாலு பிரசாத் யாதவின் ஜனதா தள அரசு, பீகாரின் சமஸ்திபூரில் அத்வானியின் சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான ரத யாத்திரையை நிறுத்தி, பாஜக தலைவரைக் கைது செய்தது. மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. சிங் நவம்பர் 7, 1990 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார், மேலும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சந்திர சேகர், புதிய சரண் சிங்
சந்திரசேகர் தலைமையில் ஜனதா தள எம்.பி.க்கள் ஒரு புதிய கட்சியை உருவாக்கி நவம்பர் 10, 1990 அன்று பதவியேற்றனர். காங்கிரஸ் அவர்களை வெளியிலிருந்து ஆதரித்தது. இருப்பினும், இந்த ஆதரவு நிலையற்றதாக இருந்தது. ராஜீவை பிரதமர் உளவு பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அரசின் நாட்கள் எண்ணப்பட்டன. சந்திரசேகர் மார்ச் 6, 1991 அன்று ராஜினாமா செய்தார். இது மக்களவை கலைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.