மாதவிடாய் விடுப்பில் அரசியல் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை எடுப்பது பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்த உதவும்.
தமிழ்நாட்டில் 2024 பொதுத் தேர்தலின் போது, ஆளும் அரசியல் கட்சியான திமுக, பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. பாலின சமத்துவத்தை ஆதரிக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பென்கள் எதிபார்கிறார்கள். 2023 டிசம்பரில் 17வது மக்களவையில் நடந்த விவாதத்திற்குப் பிறகு இந்த வாக்குறுதி வந்தது, ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
நாடளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மசோதாக்கள்
2021 டிசம்பரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜோதிமணி, 'மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊதிய விடுப்பு மசோதா, 2019' (Right to Menstrual Hygiene and Paid Leave) என்ற மசோதாவை முன்மொழிந்தார். இந்த மசோதா பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு எடுப்பதற்கான உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டம், 2013 இன் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013) கீழ் அத்தகைய விடுப்பை மறுப்பது சட்டத்திற்கு எதிரானது. மறுத்தால் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு.
பெண்களுக்கான மாதவிடாய் உரிமைகள் தொடர்பான மசோதா, ஒவ்வொரு பெண்ணும் தன் மாதவிடாயைப் பற்றித் தானே புரிந்துகொள்ளும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. இதில் மாதவிடாய் முதல் மாதவிடாய், இறுதி மாதவிடாய், மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் வலியுடன் கொண்ட மாதவிலக்கு (dysmenorrhea) மாதவிடாய் வலி (menstrual pain) ஆகியவை அடங்கும். இந்த மசோதா பல தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது: மூன்று நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு; எட்டாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை; ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை 30 நிமிட ஓய்வு; மற்றும் அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை வசதிகள் மற்றும் சமபங்கு அணுகல்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான நினோங் எரிங், 2017-ஆம் ஆண்டு மாதவிடாய் பலன் மசோதா (Menstruation Benefit Bill in 2017) என்ற தனி நபர் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான சஷி தரூர், பெண்கள் பாலியல், இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய் உரிமைகள் மசோதாவை (Women’s Sexual, Reproductive and Menstrual Rights Bill in 2018) 2018-ல் அறிமுகப்படுத்தினார். கேரளாவைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் எம்பியான ஹிபி ஈடன், பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக்கான உரிமை மற்றும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளுக்கான இலவச அணுகல் மசோதாவை 2022 (Right to Women to Menstrual Leave and Free Access to Menstrual Health Products Bill in 2022) இல் முன்மொழிந்தார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அரசுக்கு எதிராக ஷைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மாதவிடாய் விடுப்பு தொடர்பான வழக்கை பரிசீலிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது அரசின் கொள்கை முடிவு என்று அவர்கள் கூறினர். டிசம்பர் 2023 இல் மத்திய அரசு இந்த யோசனையை நிராகரித்தது. 2024 பொதுத் தேர்தலுக்கான தங்கள் தேர்தல் அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி மாதவிடாய் விடுப்பு பற்றி குறிப்பிடவில்லை. காங்கிரஸ் கட்சியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இருப்பினும், காங்கிரஸ் கட்சி "சுகாதாரம்" பிரிவின் கீழ் அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கும் என உறுதியளித்தது.
முன்னோக்கிச் சிந்திக்கும் இந்திய மாநிலங்கள், ஆசிய நாடுகள்
சில மாநிலங்கள் மாணவிகளின் தேவைகளை அங்கீகரிப்பதில் முன்னோடியாக உள்ளன. உதாரணமாக, கேரளா, 1912 இல், தேர்வுகளின் போது "பீரியட் லீவ்" (period leave) வழங்கியது. சமீபத்தில், மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்துள்ளது. பீகாரில், 1992 முதல், அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு அனுமதிக்கப்பட்டது. ஜனவரி 2023 இல், கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதுள்ள சட்டங்கள் அவர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைத் தடுக்கவில்லை என்பதை மற்ற மாநிலங்கள் அறிந்து கொள்வது அவசியம்.
இதற்கிடையில், பல ஆசிய நாடுகள் மாதவிடாய் தடைகளை சட்டங்கள் மூலம் நிவர்த்தி செய்கின்றது. ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தென் கொரியா 1940 களின் பிற்பகுதியில் மாதவிடாய் விடுப்பை நடைமுறைப்படுத்தியது. தைவான் மற்றும் வியட்நாம் ஆகியவை ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்குகின்றன. இருப்பினும், ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் தவிர, மேற்கத்திய நாடுகளில் இந்த நடைமுறை மெதுவாக உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International organizations) போன்ற சர்வதேச நிறுவனங்கள் 2003 ஆம் ஆண்டு முதல் மாதவிடாய் விடுப்பு பெண்களின் உரிமை என வாதிட்டன. உலக சுகாதார நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் மே 28 ஆம் தேதி உலக மாதவிடாய் சுகாதார தினத்தை (World Menstrual Hygiene Day) அங்கீகரித்துள்ளது. இந்தியா 2020 இல் ஒரு புதிய சமூகப் பாதுகாப்புக் குறியீட்டை நிறைவேற்றியது. இந்தக் குறியீடு பல தொழிலாளர் சட்டங்களை இணைத்தது. ஆனால், அதில் மாதவிடாய் விடுப்பு இடம்பெறவில்லை.
மகாராஷ்டிராவின் கரும்பு வயல்களில் பணிபுரியும் பெண்களுக்கும், தெலுங்கானாவில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும் கருப்பை நீக்கம் செய்யப்படுகிறது, ஏனெனில் மாதவிடாய் காரணமாக வேலையைத் தவறவிடுவது அவர்களின் வேலையை பாதிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் போன்ற பனிகளில் Swiggy மற்றும் Zomato போன்ற நிறுவனங்களைப் பின்பற்றி மாதவிடாய் விடுப்பு அளிக்க வேண்டும்.
பாலின வேறுபாடுகள் குறித்து நாம் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட கொள்கைத் தீர்வுகள் சமூக-கலாச்சார மற்றும் உயிரியல் காரணிகளால் பெண்களின் வெவ்வேறு அனுபவங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது சமத்துவத்தை ஊக்குவிக்கும் மற்றும் சமூக மாற்றத்தை வளர்க்கும். மாதவிடாய் குறித்த பொதுக் கொள்கை விவாதங்கள் தடைகளை உடைப்பதிலும், பாலின உணர்திறன் உலகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த விவாதங்கள் பாரம்பரியமாக இத்தகைய பிரச்சினைகளை மறைத்து வைத்திருக்கும் பழமைவாத சமூக தரநிலைகளுக்கு சவால் விடுகின்றன.
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளை ஒப்புக்கொள்வது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த அங்கீகாரம் முக்கியமானது. இத்தகைய அரசியல் ஈடுபாடு, மக்கள்தொகையில் கணிசமான பகுதியைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அதன் மூலம் பாலின சமத்துவத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
ரெஹ்னமோல் ரவீந்திரன் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியர்.