சரக்கு மற்றும் சேவை (goods and service tax (GST)) வரியின் வருவாய் அதிகரித்திருப்பதால், அடுத்த அரசாங்கம் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் முதன்முறையாக ₹2 லட்சம் கோடியைத் தாண்டியது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது வலுவான பொருளாதார செயல்பாடு மற்றும் வரி இணக்கத்தை பிரதிபலிக்கிறது. வரலாற்று ரீதியாக, ஏப்ரல் மாதத்தில் அதிக G.S.T. வசூல் ஆகும். வரி செலுத்துவோர் மார்ச் மாதத்தில் நிதியாண்டிற்கான தங்கள் கணக்குகளை இறுதி செய்கிறார்கள், இது ஏப்ரல் மாதத்தில் வரி செலுத்துதல்களை அதிகரிக்க வழிவகுத்தது. ஏப்ரல் 2024 உடன் ஏப்ரல் 2023ஐ ஒப்பிடுகையில்: ஏப்ரல் 2024 இன் மொத்த G.S.T.வசூல் ₹2.1 லட்சம் கோடியாக இருந்தது. இது ஏப்ரல் 2023 இல் முந்தைய சாதனையான ₹1.87 லட்சம் கோடியைத் தாண்டியது. இது ஆண்டுக்கு 12.4% வளர்ச்சியைக் குறிக்கிறது.
மாதாந்திர G.S.T. வசூல்களுக்கு ₹2 லட்சம் கோடி புதிய இயல்பானதாக இல்லாவிட்டாலும், நீடித்த பொருளாதார வேகம் அதை அடையக்கூடியதாக இருக்கும். 11%-12% வரம்பில் வளர்ச்சி நீடிக்கிறது என்று வைத்துக் கொண்டால், கடந்த ஏப்ரல் மாத அதிகபட்சமான ₹1.87 லட்சம் கோடி இந்த ஆண்டின் மாத சராசரியாக இருக்கலாம். 2023 ஆம் ஆண்டில், சராசரி மாத G.S.T. வருவாய் ₹1.68 லட்சம் கோடியாக இருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கு முன் அதிகபட்ச மாத வசூல் ஏப்ரல் 2022 இல் ₹1,67,540 கோடியாக இருந்தது. சுருக்கமாக, ஏப்ரல் 2024 G.S.T வசூலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. மேலும், பொருளாதார நடவடிக்கைள் சீராக இருந்தால், ஆண்டு முழுவதும் வருவாயில் நிலையான வளர்ச்சி இருக்கும்.
கடந்த மாதம் G.S.T. வருவாய் ₹2 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது, இது ஒரு பெரிய சாதனை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பொருளாதாரம் வலுவாக இருப்பதையும், வரி வசூல் நன்றாக இருப்பதையும் இது காட்டுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, G.S.T வருவாய் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், அரசாங்கம் கவலையடைந்தது. ஆனால் இப்போது, நிறைய மாற்றங்கள் எற்பட்டுள்ளன. போலி விலைப்பட்டியல் போன்ற மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வருவாயை அதிகரிக்க உதவியுள்ளது. ஒன்றிய அரசு இந்த ஆண்டு திட்டமிட்டதை விட கூடுதல் G.S.T. வசூலித்துள்ளது. புதிய அரசாங்கம் முழு பட்ஜெட்டில் அதிக வருவாய் இலக்குகளை எளிதாக நிர்ணயிக்க முடியும். ஆனால், G.S.Tயை சிறப்பாகச் செய்வது தான் சவாலாக உள்ளது. இது அதிக வணிகங்களைச் சேர்த்து அதன் சிக்கலான வரி விகிதங்களை சரிசெய்ய வேண்டும். இதன் மூலம் மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் எளிதாக புரிந்து கொண்டு வரி செலுத்துவார்கள்.
தற்போதைய வரி முறை நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு எளிமையாக உள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் G.S.T அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வணிகங்களுக்கான G.S.T வலைத்தளத்தை எளிமைப்படுத்துவதாக உறுதியளிக்கிறது.
சுருக்கமாக, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களுடைய திட்டங்களை கூறியுள்ளன. சிறு வணிகங்களுக்கு இணைய வழியில் G.S.T வசூல் முறையை எளிதாக்க பாஜக விரும்புகிறது. சில விதிவிலக்குகளுடன் ஒரு மிதமான விகிதத்தைக் (moderate tax) கொண்டிருப்பதன் மூலம் வரி முறையை எளிமையாக்க காங்கிரஸ் விரும்புகிறது. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், வரி அமைப்பில் உள்ள சிக்கல்களைச் சரி செய்ய பல்வேறு குழுக்களின் உள்ளீட்டைக் கொண்டு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். இது செலவினங்களை அதிகரிக்கவும் எதிர்காலத்தில் அதிக முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான களத்தை அமைக்கவும் உதவும்.