முக்கிய அம்சங்கள் :
1. அரசியலமைப்பு (நாற்பத்தி நான்காவது திருத்தம்) சட்டம், 1978 உடன் சொத்துரிமை ஒரு அடிப்படை உரிமையாக திருத்தப்பட்டது. இருப்பினும், அது ஒரு பொதுநல அரசில் மனித உரிமையாகவும், பிரிவு 300A-ன் கீழ் அரசியலமைப்பு உரிமையாகவும் உள்ளது. 300-A பிரிவு சட்டத்தால் அங்கீகரிக்கப்படாவிட்டால், எந்தவொரு நபரின் சொத்தையும் பறிக்க முடியாது என்று குறிப்பிடுகிறது. நீதிபதிகள் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளபடி, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் ஒருவரின் சொத்தை அரசு எடுக்க முடியாது.
2. நவம்பர் 22, 2022 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பெங்களூரு மைசூரு உள்கட்டமைப்பு வழித்தடத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து 2003-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
3. நீதிபதி கவாய், உச்சநீதிமன்ற அமர்வில் குறிப்பிடுவதாவது, “உயர்நீதிமன்றத்தின் கற்றறிந்த தனி நீதிபதியின் அணுகுமுறையில் எந்தப் பிழையும் காணவில்லை. மாநில நிலம் கையகப்படுத்துதல் அதிகாரிகள் (State Land Acquisition Officers (SLAO)) தேதியை மாற்ற முடியாது” என்று நீதிபதி கூறினார். “அரசியலமைப்பின் 32/142 பிரிவின் கீழ் இந்த உச்சநீதிமன்றத்தால் அல்லது அரசியலமைப்பின் 226வது பிரிவின் கீழ் உயர்நீதிமன்றத்தால் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும்" என்றார்.
4. 2003-ம் ஆண்டு சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், 300-A பிரிவின்கீழ் உள்ள அரசியலமைப்பு விதிகளையும் இது கேலிக்கூத்தாக மாற்றும்.
5. மேல்முறையீடு செய்தவர்களுக்கான இழப்பீட்டை நிர்ணயிக்க மாநில நிலம் கையகப்படுத்துதல் அதிகாரிகளுக்கு (State Land Acquisition Officers (SLAO)) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஏப்ரல் 22, 2019 நிலவரத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். 1894 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் கிடைக்கும் அனைத்து சட்டப்பூர்வ சலுகைகளுக்கும் மேல்முறையீடு செய்பவர்களுக்கு உரிமை உண்டு.
உங்களுக்குத் தெரியுமா?
1. சில நில உரிமையாளர்கள் தங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்று கூறி மனுத் தாக்கல் செய்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பெங்களூரு சிறப்பு நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி (Special Land Acquisition Officer (SLAO)) கையகப்படுத்துவதற்கான ஆரம்பகால அறிவிப்பின் தேதியை மாற்ற முடிவு செய்தார். முதலில் ஜனவரி 29, 2003 என நிர்ணயிக்கப்பட்டு, ஏப்ரல் 22, 2019 அன்று உத்தரவு மூலம் தேதி 2011-ம் ஆண்டுக்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டுக்கான கட்டணங்கள் பயன்படுத்தப்பட்டு, 11 ஏக்கர் 1.25 குண்டாஸ் நிலத்திற்கு ரூ.32,69,45,789 வழங்கப்பட்டது.
2. திட்ட ஆதரவாளர்கள் இந்த முடிவை உயர்நீதிமன்றத்தில் சவால் செய்தனர். இந்த தீர்ப்பை ரத்து செய்த தனி நீதிபதி அமர்வில், சட்டப்படி புதிய விருதுகளை வழங்க உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை நீதிமன்ற பிரிவு அமர்வு (Division Bench) நிராகரித்ததால் நில உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.
2. அரசியலமைப்பின் IV பகுதியின் கீழ் வரும் "அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்" (Directive Principles of State Policy (DPSP)), பிரிவு 39(b) "சமூகத்தின் பொருள் வளங்களின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை" பாதுகாப்பதற்கான கொள்கையை உருவாக்க மாநிலத்தின் மீது ஒரு கடமையை வைக்கிறது. மேலும், பொது நலனுக்காக சிறந்ததாக விநியோகிக்கப்பட்டது.
3. DPSP என்பது சட்டங்களை இயற்றுவதற்கான வழிகாட்டும் கொள்கைகளாகும், ஆனால் எந்த நீதிமன்றத்திலும் நேரடியாகச் செயல்படுத்த முடியாது.