முக்கிய அம்சங்கள் :
1. கேரளாவின் வர்கலாவில் நாராயண குருவின் சமாதிக்கான சிவகிரி யாத்திரை தொடர்பாக ஒரு கூட்டத்தில் பேசிய விஜயன், குருவை சனாதன தர்மத்தின் முகமாக சித்தரிக்க ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி இருப்பதாக கூறினார்.
2. சனாதன தர்மத்தின் சாராம்சம் அதன் வர்ணாசிரம அமைப்பில் உள்ளது என்று விஜயன் மேலும் கூறினார். அதை, குரு வெளிப்படையாக சவால் செய்தார். "குரு சாதிவெறிக்கு எதிரான தலைவராக இருந்தார். அவரது புதிய யுக தர்மம் மதத்துடன் மட்டும் நின்றுவிடாமல், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மக்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியது... அவரை சனாதன தர்மத்துடன் இணைப்பது குருவின் போதனைகளுக்குச் செய்யும் துரோகமாகும்."
3. சிவகிரி மடத்தின் தலைவர் சுவாமி சச்சிதானந்தாவின் ஆலோசனையை விஜயன் ஆதரித்தார். கோவில்களுக்குள் நுழையும் முன் ஆண் பக்தர்களின் சட்டையை கழற்ற வைக்கும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அவரின் பரிந்துரையாக இருந்தது.
4. விஜயன் இந்து மதத்தை அவமதிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. குருவின் பாரம்பரியத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாகவும் கூறினர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான முரளீதரன் கூறுகையில், 'ஸ்ரீ நாராயணீய' சமூகத்தை (‘Sree Narayaneeya’ community) முதல்வர் அவமதித்துள்ளார். இந்த சமூகம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ஈழவர்களைக் (OBC Ezhavas) குறிக்கிறது. அவர்கள் பாரம்பரியமாக இடதுசாரிகளுக்கு ஆதரவாக உள்ளனர் மற்றும் கேரளாவின் மக்கள்தொகையில் சுமார் 23% ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
1. சமூக சீர்திருத்தத்திற்கான அர்ப்பணிப்புடன் ஆன்மீகத்தை கலப்பதற்காக குரு கேரளா முழுவதும் மிகவும் மதிக்கப்படுகிறார். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கிய அவரது போதனைகள் மற்றும் தத்துவங்கள் அத்வைத வேதாந்தம் (Advaita Vedanta) என்று அழைக்கப்படுகின்றன.
அத்வைத வேதாந்தம் என்பது "இருமை அல்லாத" (non-duality) கோட்பாடு ஆகும். "இறுதி உண்மை" (ultimate reality) அல்லது "பிரம்மன்" (Brahman) என்பது ஒருமை மற்றும் பிரிக்க முடியாதது என்று குரு விளக்குகிறார். "தனிப்பட்ட சுயநிலை" (individual self) அல்லது "ஆத்மா" (Atman) இந்த உலகளாவிய சாரத்துடன் ஒன்று என்றும் அவர் கற்பிக்கிறார்.
"அறியாமை" (ignorance), "மாயை "(Maya) அல்லது "இருமை" (duality) என்ற மாயையை உருவாகிறது என்று குரு கூறுகிறார். இந்த மாயை சாதி, மதம் மற்றும் பிற மேலோட்டமான அடையாளங்களின் அடிப்படையில் பிளவுகளுக்கு வழிவகுக்கிறது.
அவரது போதனைகள் தனிநபர்களை உள்நோக்கித் திரும்ப ஊக்குவிக்கின்றன. அவர்கள் தங்கள் "தெய்வீக இயல்பை" (divine nature) அங்கீகரிக்க வேண்டும் மற்றும் "அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை" தழுவ வேண்டும்.
2. அவரது பிரகடனம் எளிமையானது ஆனால் புரட்சிகரமானது. அது "ஒரு சாதி, ஒரு மதம், மனிதனுக்கு ஒரு கடவுள்" என்ற கோட்பாட்டை முன்வைக்கிறது. பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்களை அனைத்து சாதியினருக்கும் திறக்க ஊக்குவித்தார்.
3. உதாரணமாக, காரமுக்கில் உள்ள அர்த்தநாரீஸ்வர கோவிலில், குரு 1927-ம் ஆண்டில் 'பெல்ஜியம் கண்ணாடியை' (Belgium mirror) நிறுவினார். கொச்சியில் இருந்து வாங்கி, அதில் "ஓம்" என்ற வார்த்தையும், "சத்தியம் (உண்மை)", "தர்மம் (நீதி)" போன்ற நல்லொழுக்கங்களும் பொறிக்கப்பட்டது. "தயா (இரக்கம்)" மற்றும் "சாந்தி (அமைதி)" போன்ற எழுத்துகளும் பொறிக்கப்பட்டது. இது வழக்கமான சிலைக்கு பதிலாக இருந்தது. ஆன்மீகம் என்பது சிலை வழிபாட்டில் அல்ல, சுய சிந்தனையில் உள்ளது என்ற அவரது நம்பிக்கையை அது வலியுறுத்தியது.
4. அவர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1928-ம் ஆண்டில் இறந்தார். இருப்பினும், குருவின் தாக்கம் மற்ற பகுதிகளில் உள்ள பி ஆர் அம்பேத்கரின் செல்வாக்கைப் போலவே கேரளா முழுவதும் உள்ள அவரது சிலைகளில் இன்னும் காணப்படுகிறது.
5. ஈழவர்களுக்கு அவர் ஒரு மரியாதைக்குரிய உருவமாகப் பார்க்கப்பட்டது. சமூகத்தின் முக்கிய அமைப்பான ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (Sree Narayana Dharma Paripalana Yogam (SNDP)) குறிப்பிடத்தக்க அரசியல் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.