கூட்டாட்சி மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கான அச்சுறுத்தல் -அபிஜய் ஏ., திருநாவுக்கரசு எஸ்.

 'ஒரே நாடு ஒரே தேர்தல்' (One Nation One Election) என்ற எண்ணம் அதிகாரங்களை மையப்படுத்துவதற்கு வழிவகுக்கக் கூடாது. கட்சித் தாவல் தடுப்புச் சட்டங்களை வலுப்படுத்துவது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது முக்கியம். இந்த கவலைகளை புறக்கணிக்க முடியாது.


பாரதிய ஜனதா கட்சி/தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆளும் அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பை (One Nation, One Election framework (ONOE)) தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த முன்மொழிவானது, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே தேர்தல் சுழற்சியாக ஒரே நேரத்தில்  நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பின் (ONOE) வாதங்கள் பல்வேறு நிர்வாக மற்றும் நிதி திறன்களை முன்னிலைப்படுத்துகின்றனர். இருப்பினும், இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர். அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி தன்மையை இது பாதிக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.


வரலாற்று சூழல்


இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது புதிதல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு தொடக்க ஆண்டுகளில், இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தியது. இருப்பினும், குடியரசுத் தலைவர் ஆட்சி எனப்படும் 356-வது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த அமைப்பு சீர்குலைந்தது. 1959-ம் ஆண்டு கேரளாவில்தான் அவசரநிலை முதன்முறையாக பிறப்பிக்கப்பட்டது. 


இது கூட்டாட்சி மேலாதிக்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ஒன்றியத்தின் விருப்பம் மாநில சுயாட்சியை மீறுவதாகத் தோன்றியது. இந்த ஏற்பாடு, ஆளுகை என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிட்ட மாநிலங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான அரசியலமைப்பு செயல்முறையாக இருந்தது.


பிரிவு 356, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் மிக குறைந்த அளவில் பயன்படுத்தப்பட வேண்டிய “டெட் லெட்டர் (dead letter)” என்று அழைக்கப்பட்டது, ஆனால் இது அரசியல் ஆயுதமாக தவறாக பயன்படுத்தப்பட்டது. ஹெச்.வி. காமத் கூறிய “அம்பேத்கர் இறந்துவிட்டார், ஆனால் இந்த பிரிவுகள் மிகவும் உயிருடன் இருக்கின்றன” என்ற கருத்து இதை வெளிப்படையாக எடுத்துரைக்கிறது.


 1950 முதல் 1994 வரை, அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்கு விரோதமாக இருந்த மாநில அரசுகளை பதவிநீக்கம் செய்ய பிரிவு 356-ஐ தவறாக பயன்படுத்தின. எஸ்.ஆர். பொம்மை வழக்கு தீர்ப்பினால் இந்த தவறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை 130 முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதன் முதன்மை நோக்கத்தை வீழ்த்தியுள்ளது.


பல்வேறு காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு பக்கம் மாறியதால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் வீழ்ந்தன. இதைத் தடுக்க, 1985-ம் ஆண்டு 52-வது திருத்தச் சட்டத்தின் மூலம், கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் ஒரு பகுதியாகும். மேலும், கட்சியிலிருந்து விலகுபவர்களை தகுதி நீக்கம் செய்கிறது. 


இருப்பினும், சட்டத்தில் இன்னும் சிக்கல்கள் உள்ளன. தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் முடிவெடுக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், சட்டம் "குழு விலகல்களை" (group defections) அனுமதிக்கிறது. இது குறைவான செயல்திறன் கொண்டது. இதன் விளைவாக, கட்சி விலகல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இது அரசாங்கங்களில் அரசியலமைப்பிற்கு முரணான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.


மாநில தேர்தல் சுழற்சிகளை மக்களவையுடன் சீரமைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பின் (ONOE) முன்மொழிவு கடுமையான சிக்கல்களை எழுப்புகிறது. இந்த முன்மொழிவு அரசியலமைப்பில் மாற்றங்களை பரிந்துரைக்கிறது. குறிப்பாக, சட்டப்பிரிவு 83 மற்றும் 172 ஆகும். இது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஐந்தாண்டு காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. விதி 356ஐ தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பலவீனமான கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்டங்கள் போன்ற நிர்வாகத்திலும் சிக்கல்கள் உள்ளன. தேசிய தேர்தல் சுழற்சியுடன் பொருந்தக்கூடிய வகையில் மாநில அரசாங்கங்களை தங்கள் விதிமுறைகளை மாற்றியமைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பின் (ONOE) கட்டாயப்படுத்தும். இது மாநில சுயாட்சியைக் குறைக்கும், நிர்வாகரீதியாக மட்டுமல்ல, அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாகவும் இருக்கும்.


முற்றுகையின் கீழ் கூட்டாட்சி அமைப்பு


இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு இந்திய ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பதில் மாநிலங்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமான அலகுகளாக செயல்பட அனுமதிக்கிறது. தேசியத் தேர்தல்களுடன் மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அது வாக்காளர்களைக் குழப்பிவிடும். மாநில அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பின் (ONOE) மூலம் நடத்தப்பட்டு, இடைக்கால ONOE ஏற்பட்டால், அது சிக்கல்களை ஏற்படுத்தும். 


குறுகிய காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள், "ஒரு நபர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு" (one person, one vote, one value) என்ற ஜனநாயகக் கொள்கையை மீறும். உதாரணமாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாநில அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால், ONOE புதிய அரசாங்கத்திற்கான தேர்தலுக்கு வழிவகுக்கும். இந்த அரசாங்கம் ஒத்திசைக்கப்பட்ட தேர்தல் சுழற்சியில் எஞ்சியிருக்கும் காலத்தை, சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும்.


இது ஒரு அரசாங்கத்தின் பதவிக் காலத்தை குறைக்கிறது. மேலும், இது வாக்காளரின் உரிமைக் கட்டளையை மதிப்பற்றதாக ஆக்குகிறது. ஒரு புதிய அரசாங்கம் அதன் முழு பதவிக்காலத்தை முடிக்காமல் போகலாம். இது முழுமையான பிரதிநிதித்துவம் என்ற ஜனநாயகக் கோட்பாட்டை பலவீனப்படுத்துகிறது. துண்டிக்கப்பட்ட விதிமுறைகள் மாநில அரசுகளுக்கும், மக்களவைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. 

உதாரணமாக, 1990-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் அரசியல் பதற்றத்தின் போது, ​​1996, 1998 மற்றும் 1999-ல் தேர்தல்கள் நடத்தப்பட்டன.


உண்மையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பின் (ONOE) நடைமுறையில் இருந்திருந்தால், 2001-ம் ஆண்டில் மற்றொரு தேர்தல் நடந்திருக்கும். இது ஐந்து ஆண்டுகளில் நான்கு தேர்தல்களை நடத்த திட்டமிடலாம். தேர்தல்களின் தீவிரத்தால் அதிக செலவுகளை ஏற்படுத்துகிறது. இதில், நிதி, நிர்வாக மற்றும் மனித மூலதனத்தின் அடிப்படையில், இவை ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பு (ONOE) கொண்டு வருவதாகக் கூறப்படும் செயல்திறனில் உணரப்படவில்லை. 


பெயரளவிலான மற்றும் நடைமுறை அடிப்படையில், ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் தற்போதுள்ள சமூக-அரசியல்-பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்யவும், தகவமைப்புக் கொள்கைகளை உருவாக்கவும் மற்றும் பாடத் திருத்தங்களைச் செய்யவும் ஒரு யதார்த்தமான கால அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் செயற்கையாகத் திணிக்கப்பட்ட இந்தக் குறைப்பு, ஆட்சியை சீர்குலைக்கலாம், இதன் விளைவாக தேர்தல்களின் போது மாதிரி நடத்தை விதிகளை (Model Code of Conduct) அமல்படுத்துவதால் ஏற்படும் வழக்கமான கொள்கை முடக்கத்தைவிட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.


ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பை (ONOE) செயல்படுத்துவதில் அதற்கான வழிகளானவை, அடிப்படையில் சவால்கள் நிறைந்தவையாக உள்ளன. இதில், 900 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவின் பெரிய வாக்காளர் தளம், தேர்தல்களை நடத்துவதற்கு மகத்தான ஆதாரங்களைக் கோருகிறது. மக்களவை, மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் சீரமைக்கப்பட்டால், அதற்கான சுமை பன்மடங்கு அதிகரித்து, இறுதியில் தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படைகள் மற்றும் நிர்வாக செயல்முறையை பாதிக்கும். வாக்காளர் சோர்வு மற்றும் குழப்பம் ஏற்படும் அபாயத்தை நிராகரிக்க முடியாது.


பிரச்சினைகளை முதலில் தீர்க்கவும்


நிதி மற்றும் நிர்வாக செயல்திறனுக்காக ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பை (ONOE) செயல்படுத்தப்படுவதற்கு முன், பிரதிபலிப்பு தேவை. மாநில அரசுகளை பாதிக்கும் சில அமைப்பு ரீதியான சவால்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ONOE அதிகாரங்களை மையப்படுத்துவதற்கான ஒரு கருவியாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய ஒரு பாடத் திருத்தம் இருக்க வேண்டும். சட்டப்பிரிவு 356ஐ தவறாகப் பயன்படுத்துதல், கட்சித் தாவல் தடைச் சட்டங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம், மாநில அரசுகளின் நிலைத்தன்மை போன்ற பிரச்சினைகளைப் புறக்கணிக்காமல் இது செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மை என்பது ஒரு நடைமுறை ஏற்பாடு மட்டுமல்ல, அது நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பெரும்பான்மையை அங்கீகரிக்கிறது. மாநிலங்கள் ஒருங்கிணைந்த தேர்தல் சுழற்சியை கட்டாயப்படுத்துவது அவர்களின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் நிர்வாகத்தின் ஜனநாயக கட்டமைப்பை  குறைக்கச் செய்கிறது.


கூட்டாட்சியைப் பாதுகாக்க தேவையான அமைப்பு சீர்திருத்தங்கள் இல்லாமல் அவசர அவசரமாக ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்டமைப்பு (ONOE) திணிக்கப்படுவது, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான நேரடித் தாக்குதலாகும். இது நடக்கவில்லை என்றால், ONOE இந்திய ஜனநாயகத்திற்கு உதவுவதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும்.ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றுவதற்கான மோசமான செயல்பாட்டில் செயலிழந்த தொலைநகல் இயந்திரம் இருந்தது. இது இந்தியாவில் சில நிறுவன செயல்முறைகளில் பலவீனம் மற்றும் வெளிப்படைத்தன்மையின்மையை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள் முறையான சீர்திருத்தம் அவசரமாக தேவை என்பதைக் காட்டுகின்றன. அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு மக்கள் பொறுப்பு வகிப்பதை உறுதி செய்யும்.


இந்த அடித்தளப் பகுதிகள் சீர்செய்யப்படாமல் இருக்கும் வரை, ONOE, அந்த கட்டமைப்புப் பாதிப்புகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அவற்றை தீவிரமாக மாற்றும். உண்மையான ஜனநாயக ஆட்சிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதைவிட அதிக விசயங்கள் தேவைப்படுகிறது. உண்மையான கூட்டாட்சி மற்றும் இந்தியாவின் நிர்வாகத்தில் சம பங்குதாரர்களாக மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிப்பதில் வலுவான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.


அபிஜய் ஏ. ஒரு அரசியல் ஆய்வாளர், கவிஞர் மற்றும் தன்னிச்சையான ஆராய்ச்சியாளர். திருநாவுக்கரசு எஸ். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆய்வுகள் துறையில் இளநிலை ஆய்வாளராக உள்ளார்.




Original article:

Share: