இந்தியா, நிலத்தடி நீரில் அதிகரித்து வரும் நைட்ரேட்டின் அளவை சமாளிக்க வேண்டும்.
ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board (CGWB)) ஆண்டுதோறும் நிலத்தடி நீரின் தரம் குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. அதன் சமீபத்திய அறிக்கை ஆபத்தான அறிகுறிகளைக் காட்டுகிறது. முதலாவதாக, நிலத்தடி நீரில் அதிகப்படியான நைட்ரேட் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 2017-ல் 359-ல் இருந்து 2023-ல் 440 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் 779 மாவட்டங்களில் பாதிக்கும் மேலான மாவட்டங்களில் நிலத்தடி நீரில் பாதுகாப்பற்ற நைட்ரேட் அளவுகள் 45 mg/L (லிட்டருக்கு மில்லிகிராம்) அதிகமாக உள்ளது. இது இரண்டு முக்கிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது: முதலாவதாக, மெத்தெமோகுளோபினேமியா (methemoglobinemia) அல்லது ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்களின் திறனைக் குறைக்கும்.
இது சில சமயங்களில் குழந்தைகளுக்கு “ப்ளூ பேபி சிண்ட்ரோமை” (‘Blue Baby Syndrome’) ஏற்படுத்துகிறது. மிகப்பெரிய பிரச்சனை சுற்றுச்சூழல். நிலத்தடி நீரிலிருந்து நைட்ரேட்டுகள் ஏரிகள் மற்றும் குளங்களை அடையும் போது, அவை பாசிப் பூக்களை ஏற்படுத்துகின்றன. இந்தப் பூக்கள் ஆக்ஸிஜனைக் குறைப்பதன் மூலமும் நீரின் தரத்தை பாதிப்பதன் மூலமும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம் இந்தியா முழுவதும் 15,239 நிலத்தடி நீர் மாதிரிகளை பரிசோதித்தது. சுமார் 19.8% மாதிரிகள் பாதுகாப்பான வரம்புகளுக்கு மேல் நைட்ரேட் அளவைக் கொண்டிருந்தன. அதிகப்படியான நைட்ரேட் கொண்ட மாதிரிகளின் விகிதம் 2017 முதல் பெரிதாக மாறவில்லை. 2017 இல், 13,028 மாதிரிகளில் 21.6% அதிக நைட்ரேட்டைக் கொண்டிருந்தன.
ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நைட்ரேட் மாசுபாடு அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில், 49%, 48% மற்றும் 37% மாதிரிகள் பாதுகாப்பான வரம்பைத் தாண்டி நைட்ரேட் அளவைக் கொண்டிருந்தன. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நைட்ரேட் பிரச்சனைகள் தொடர்கின்றன. இது முக்கியமாக புவியியல் காரணிகளால் ஏற்படுகிறது. இந்த மாநிலங்களில் நைட்ரேட் அளவுகள் 2017 முதல் ஒப்பீட்டளவில் மாறாமல் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், மத்திய மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பகுதிகளில் நைட்ரேட் மாசுபாடு அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாக, பல ஆய்வுகள் அதிக நைட்ரேட் அளவுகளுக்கும் தீவிர விவசாய முறைகளுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. நிலத்தடி நீரின் தரத்தை பாதிக்கும் குறிப்பிடத்தக்க இரசாயன அசுத்தங்கள் புளோரைடு மற்றும் யுரேனியம் ஆகும். ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் பாதுகாப்பான வரம்பைவிட புளோரைடு அளவு அதிகமாக உள்ளது.
நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்திய மாநிலங்கள் - மாற்றியமைப்பதை விட அதிக நீர் வெளியேற்றப்படும் இடங்களில் அதிக அளவு இரசாயன மாசுபாடுகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக, இந்தியா தனது நிலத்தடி நீரில் 60.4% பய்னபடுத்துகிறது. இந்த நிலை 2009 முதல் தொடர்கிறது. சோதனை செய்யப்பட்ட நிலத்தடி நீர் தொகுதிகளில் சுமார் 73% "பாதுகாப்பான" மண்டலத்தில் உள்ளன. அதாவது அவை பயன்படுத்தப்படும் நீரை மாற்றும் அளவுக்கு நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் ஆரோக்கியத்தை கண்காணிக்க இந்தியா இப்போது ஒரு வலுவான அமைப்பைக் கொண்டிருந்தாலும், மாநிலங்களின் நடவடிக்கை குறைவாக உள்ளது. நெருக்கடிக்கு தீர்வு காண உயர்மட்ட தலைவர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்த வேண்டும்.