இந்திய அரசியலமைப்பின் பிரிவு 101(4) என்ன கூறுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


. அமிர்தபால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act (NSA)) கீழ் கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 2023 முதல் திப்ருகார் சிறையில் உள்ளார். 2024-ஆம் ஆண்டு, சிறையில் இருந்தபோதே மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் அவரது வருகை 2% மட்டுமே இருந்ததாக PRS சட்டமன்ற ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.


• கடந்தகால விடுப்பு விண்ணப்ப அறிக்கைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுப்பு வழங்கப்படுவதற்கான பொதுவான காரணமாக அவர்களின் சொந்த அல்லது சில உறவினர்களின் நோய்களை பட்டியலிடுகின்றன. இருப்பினும், உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாகவும் விடுப்பு கோரியுள்ளனர். அவர்களுக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.


• 2023-ஆம் ஆண்டில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய கோஷி நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய் சிறையில் இருந்ததால், நாடாளுமன்றத்தின் தொடர்ச்சியான 23 அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதி கோரினார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


• ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 60 நாட்களுக்கு மேல் வராவிட்டால் அந்த இடத்தை காலியாக உள்ளதாக சபை "அறிவிக்க" வேண்டும். இந்தப் பிரச்சினை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். இதனால், அமிர்தபால் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாததால் தனது இடத்தை இழக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.


உங்களுக்குத் தெரியுமா?:


• நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு உறுப்பினரும் அனுமதியின்றி 60 நாட்களுக்கு மேல் அனைத்து கூட்டங்களுக்கும் வராமல் இருந்தால். அந்த உறுப்பினரின் இருக்கை காலியாக இருப்பதாக அவை அறிவிக்கலாம். இருப்பினும், 60 நாட்கள் என்பது "சபை ஒத்திவைக்கப்பட்ட அல்லது தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்ட எந்தவொரு காலகட்டத்தையும்" கணக்கில் எடுத்துக்கொள்ளாது.


• நடைமுறையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அடிப்படையில் மட்டுமே வராத காலம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, அமிர்தபால், மக்களவையின் ஒரு கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றபோது அவர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் அசாமில் மாநிலத்தில் காவலில் வைக்கப்பட்டார். இதுவரை அவர் தவறவிட்ட அமர்வுகளின் மொத்த எண்ணிக்கை 50-ஐ எட்டியுள்ளது.


• இருப்பினும், முன்னாள் மக்களவை பொதுச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், பிரிவு 101-(4) செயல்படுத்தப்பட்டதாகவும், அதன் விளைவாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை இழந்ததாகவும் ஒரு நிகழ்வு கூட தனக்கு நினைவில் இல்லை என்று கூறினார்.


• பிரிவு 101(4)-ல் உள்ள முக்கியமான சொற்றொடர் "சபையின் அனுமதியின்றி" (without permission of the House) என்பதாகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் வராததற்கான ஒப்புதலைப் பெற்றால் தங்கள் இருக்கை  இழப்பதைத் தவிர்க்கலாம். நீண்ட நாட்கள் வராததற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். அவர்கள் அதை “சபை அமர்வுகளில் உறுப்பினர்கள் வராதது குறித்த குழுவுக்கு” அனுப்புகிறார்கள். நாடாளுமன்றக் குழு இதுபோன்ற பிரச்சனைகளைக் கையாளுகிறது.


• ஒவ்வொரு விடுப்பு விண்ணப்பத்திலும் குழு பரிந்துரைகளை வழங்குகிறது. பின்னர், அவை சம்பந்தப்பட்ட சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன. இருப்பினும், நடைமுறையில், விண்ணப்பங்கள் அரிதாகவே நிராகரிக்கப்படுகின்றன. "ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அமிர்தபால், சிறையில் இருக்கிறார். ஜாமீன் கிடைக்கவில்லை என்ற அடிப்படையில் குழுவிற்கு கடிதம் எழுதவும், அவையில் பங்குபெறாமல் இருப்பதற்கு அனுமதி கோரவும் அவருக்கு முழு உரிமையும் உள்ளது" என்று ஆச்சாரி கூறினார்.




Original article:

Share: